உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கரேணி

ஆள்கூறுகள்: 17°30′N 80°16′E / 17.500°N 80.267°E / 17.500; 80.267
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கரேணி
யெல்லேந்து
கிராமம்
சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கம், 1928
சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கம், 1928
நாடு இந்தியா
மாநிலம்தெலங்கானா
மாவட்டம்கம்மம் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்30,00,000 km2 (10,00,000 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்9,394−3
 • அடர்த்தி9,400/km2 (24,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்தெலுங்கு, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
507122
வாகனப் பதிவுTS
அருகமைந்த நகரம்கம்மம் எல்லந்து, பத்ராச்சலம், கொத்தகூடம் மற்றும் மகபூபாபாத்
சிங்கரேணி திறந்த வெளி சுரங்கம், புகைப்படம், ஆண்டு 1928.

சிங்கரேணி (Singareni) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தில் எல்லந்து மண்டல் பகுதியில் அமைந்த ஊராகும். சிங்கரேணியில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் நிலக்கரி சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதும் இங்குள்ள திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.

சிங்கரேணி தொடருந்து நிலையத்தை எல்லந்து தொடருந்து நிலையம் என்று அழைப்பர்.

சிங்கரேணி அருகில் பத்ராச்சலம், கொத்தகூடம் மற்றும் கம்மம் நகரங்கள் அமைந்துள்ளது.

சிங்கரேணி நிலக்கரி சுரங்க நிறுவனம்

[தொகு]

1871-இல் பிரித்தானிய நிலவியலாளர் டாக்டர் கிங் என்பவரால் கம்மம் மாவட்டத்தின் சிங்கரேணி பகுதியில் முதன் முதலில் நிலக்கரி கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. 1920 முதல் சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் (The Singareni Collieries Company Limited (SCCL) நிறுவப்பட்டு, இப்பகுதியில் நிலக்கரி வெட்டு எடுக்கும் பணி துவக்கியது.

1956 முதல் இந்நிறுவனம் இந்திய அரசின் கீழ் செயல்படுகிறது. கோதாவரி வடிநிலப்பகுதியில் இந்நிறுவனம் 2015 – 2016 முடிய 1249 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுத்துள்ளது. இந்நிறுவனம் ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஆதிலாபாத் மாவட்டம், கம்மம் மாவட்டம், கரீம்நகர் மாவட்டம் மற்றும் வாரங்கல் மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்களைக் கொண்டுள்ளது.

இந்நிலக்கரியைக் கொண்டு, இந்நிறுவனம் சுரங்கப்பகுதிகளில் பல அனல் மின்நிலையங்களை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்கிறது. [1] 20154-ஆம் ஆண்டு முதல் ஆண்டு ஒன்றுக்கு 2.8 மில்லியன் டன் நிலக்கரியை சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்க சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. [2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Singareni Collieries Company Limited' (SCCL)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-04. பார்க்கப்பட்ட நாள் 2017-02-25.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கரேணி&oldid=3553828" இலிருந்து மீள்விக்கப்பட்டது