சிங்கப்பூர் தேசிய வடிவமைப்பு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
National Design Centre, Singapore
2021 ஆகத்து மாதத்தில் சிங்கப்பூர் தேசிய வடிவமைப்பு மையம்.
முன்னாள் புனித அந்தோனியார் கன்னிமடத்தில் இப்போது தேசிய வடிவமைப்பு மையம் உள்ளது. சிங்கப்பூர் வடிவமைப்பு மன்றத்தின் தலைமையகம் இங்கே செயல்படுகிறது.

சிங்கப்பூர் தேசிய வடிவமைப்பு மையம் (National Design Centre) சிங்கப்பூரின் பிராசு பாசா -சாலையில் அமைந்துள்ளது. இந்த வளாகம் சிங்கப்பூரில் உள்ள அனைத்து வடிவமைப்புகளுக்கும் ஒரு மைய புள்ளியாகும். மேலும், இது வடிவமைப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் தயாரிப்புகளை வெளிப்படுத்தவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் வேலை செய்யவும் கூட ஏற்றதொரு இடமாகும். [1] இம்மையம் அதன் கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் வடிவமைப்பு பற்றி அறிந்து கொள்ள பொதுமக்களை அழைக்கிறது.

மையத்தில் இரண்டு காட்சியகங்களும், ஐடிஏ ஆய்வகம் , பொருட்கள் வடிவமைப்பு ஆய்வகம் மற்றும் முன்மாதிரி ஆய்வகம் உள்ளிட்ட மூன்று வடிவமைப்பு ஆய்வகங்களும் உள்ளன [2] [3]

முன்னாள் புனித அந்தோனியார் கன்னி மடத்தின் 120 ஆண்டுகள் பழமையான வளாகத்தை தேசிய வடிவமைப்பு மையம் ஆக்கிரமித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய மூன்று எழில்படுக் கலை தொகுதிகள் மற்றும் ஒரு போருக்குப் பிந்தைய நவீன தொகுதி ஆகியவற்றைக் கொண்ட பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களின் மறுசீரமைப்பு மற்றும் தகவமைப்பு மறுபயன்பாடு ஆகியவற்றுடன் தேசிய வடிவமைப்பு மையத்தின் வளர்ச்சி உள்ளடங்கியுள்ளது.

பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சிங்கப்பூர் வடிவமைப்பு மன்றத்திற்கும் தேசிய வடிவமைப்பு மையம் இடம் அளித்துள்ளது. இம்மன்றமே வடிவமைப்புத் துறையை உருவாக்குகிறது. மேலும் சிங்கப்பூரின் புதுமைக்கும் வளர்ச்சிக்கும் வடிவமைப்பைப் பயன்படுத்த இம்மன்றம் உதவுகிறது. நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி சிறப்பாகவும் மாற்றுகிறது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Design Centre". Travelfish. 8 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Prototyping lab at National Design Centre launched". Channel NewsAsia. 3 December 2014. Archived from the original on 29 December 2014. https://web.archive.org/web/20141229114702/http://www.channelnewsasia.com/news/singapore/prototyping-lab-at/1506118.html. பார்த்த நாள்: 29 December 2014. 
  3. "New facility to help aspiring designers, inventors and firms turn ideas into products". 3 December 2014. http://www.straitstimes.com/news/singapore/more-singapore-stories/story/new-facility-help-aspiring-designers-inventors-and-firms. பார்த்த நாள்: 29 December 2014. 
  4. "National Design Centre". YourSingapore. 8 January 2015 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]