சிக்மண்ட் கேப்ரியேல்
Appearance
சிக்மண்ட் கேப்ரியேல் | |
---|---|
சிக்மண்ட் கேப்ரியேல் | |
பிறப்பு | பெர்லின், செருமனி | 7 நவம்பர் 1851
இறப்பு | 22 மார்ச்சு 1924 பெர்லின், செருமனி | (அகவை 72)
தேசியம் | செருமன் |
பணியிடங்கள் | பெர்லின் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | கேப்ரியேல் தொகுப்பு முறை |
சிக்மண்ட் கேப்ரியேல் (Siegmund Gabriel) (7 நவம்பர் 1851 – 22 மார்ச் 1924) ஒரு செருமானிய வேதியியலாளர் ஆவார்.[1]
வாழ்வும் பணியும்
[தொகு]கேப்ரியேல் பெர்லினில் பிறந்தார். பெர்லினில் உள்ள பள்ளியில் பயின்றார். சில பருவங்களை பெர்லின் பல்கலைக்கழகத்தின் பயின்ற அவர் பின்னர் எய்டெல்பெர்க் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு அவர் இராபர்ட் வில்கெம் புன்சென் என்பவருடன் இணைந்து செய்த பணிக்காக 1874 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். 1921 ஆம் ஆண்டுவரை அவர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். 1887 ஆம் ஆண்டில் தனது இணை ஆராய்ச்சியாளர் சேம்சு டார்ன்புஷ் என்பவருடன் இணைந்து கேப்ரியேல் தொகுப்பு முறை என்ற வேதி வினையைக் கண்டறிந்தார். இவ்வினையே 1910 ஆம் ஆண்டில் இராபின்சன்-கேப்ரியேல் தொகுப்பு முறையாக மாறியது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Prof. Sigmund Gabriel". Geni. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Siegmund Gabriel". Prabook. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)