சிக்னேச்சர் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்னேச்சர் வங்கி
முன்னைய வகைவணிக வங்கி
நிலைவங்கி மூடப்பட்டது
செயலற்றது12 மார்ச் 2023
முக்கிய நபர்கள்ஸ்காட் ஷாய் (பெருந்தலைவர்), ஜோசப் ஜெ. பாவ்லோ (தலைமை நிர்வாக அதிகாரி), ஜான் தம்பர்லேன் (துணைத் தலைவர் மற்றும் இயக்குநர்)
தொழில்துறைவங்கிச் சேவைகள் & நிதிச் சேவைகள்
பணியாளர்1,854 (2021)
துணை நிறுவனங்கள்சிக்னேச்சர் செக்யூரிட்டீஸ் குழுமம்

சிக்னேச்சர் வங்கி (Signature Bank), ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு நியூ யார்க், கனெடிகட், கலிபோர்னியா, நெவாடா மற்றும் வட கரோலினா மாநிலங்களில் சேவை புரியும் வணிக வங்கியாகும்.[1] சிக்னேச்சர் வங்கியின் துணை நிறுவனமான சிக்னேச்சர் ஃபைனான்சியல் எல்எல்சி, உபகரண நிதி மற்றும் குத்தகை நிதி வழங்குகிறது.[2]சிக்னேச்சர் செக்யூரிட்டீஸ் குரூப் கார்ப்பரேஷன், முழு உரிமையுடைய துணை நிறுவனம், உரிமம் பெற்ற தரகர்-வியாபாரம் மற்றும் முதலீட்டு ஆலோசனைகள், தரகு, சொத்து மேலாண்மை மற்றும் காப்பீட்டுச் சேவைகள் மற்றும் இதர சேவைகளை வழங்குகிறது.[3] 2022 ஆம் ஆண்டின் இறுதியில், வங்கியின் மொத்த சொத்துக்கள் $110.4 பில்லியன் மற்றும் வைப்புத் தொகை $82.6 பில்லியன் ஆகும். 2021 வரை இவ்வங்கி $65.25 பில்லியன் கடன்களைக் கொண்டிருந்தது.[4]

சிக்னேச்சர் வங்கி 2001ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது பணக்கார வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டது மற்றும் அவர்களுடன் தனிப்பட்ட உறவுகளை உருவாக்கியது. இதன் வரலாற்றின் பெரும்பகுதியை நியூயார்க் நகரப் பகுதியில் மட்டுமே அலுவலகங்களைக் கொண்டிருந்தது. 2010களின் பிற்பகுதியில், இது புவியியல் ரீதியாகவும் சேவைகளின் அடிப்படையில் விரிவடையத் தொடங்கியது. இருப்பினும் 2018ஆம் ஆண்டில் இவ்வங்கி கிரிப்டோகரன்சி துறையில் நுழைந்தது. 2021ஆம் ஆண்டில், கிரிப்டோகரன்சி வணிகங்கள் அதன் வைப்புத் தொகையில் 30 சதவீதத்தை கொண்டிருந்தது.

10 மார்ச் 2023 அன்று சிலிக்கான் வேலி வங்கி தோல்வியடைந்ததை அடுதது 12 மார்ச் 2023 அன்று சிக்னேச்சர் வங்கி மூடப்பட்டது. இது அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது பெரிய வங்கி தோல்வியாகும். முதலில் 8 மார்ச் 2023 அன்று சில்வர்கேட் வங்கியும், 10 மார்ச் 2023 அன்று சிலிக்கான் வேலி வங்கியும், 12 மார்ச் 2023 அன்று சிக்னேச்சர் வங்கியும் மூடப்பட்டது.[5] [6] [7]

கிரிப்டோகரன்சி விரிவாக்கம்[தொகு]

2018ல் சாதாரன வங்கித் தொழில்துறையிலிருந்து விலகி கிரிப்டோகரன்சியில் கவனம் செலுத்தியது. 2021ல் இதன் வைப்புத் தொகைகளில் 16% மேல் சதவீதத்திற்கும் மேல் கிரிப்டோகரன்சியில் பெறப்பட்டது. இது பிப்ரவரி 2023க்குள் 30% ஆக உயர்ந்தது. கிரிப்டோகரன்சி ஆர்வலர்கள் வங்கியின் பங்கு மதிப்பை ஒரே ஆண்டில் $75ல் இருந்து $375 ஆக உயர்ந்ததால் வங்கிக்கு "கிரிப்டோ வங்கி" என்ற பிம்பத்தைக் கொடுத்தது.[8] பைனான்சியல் டைம்ஸ் இதழின்படி, "சிக்னேச்சர் வங்கி 12 பெரிய கிரிப்டோ தரகர்களில் எட்டு பேர் விரைவாக வங்கியிலிருந்து பணத்தை எடுத்தனர்.[9] இதற்கு பதிலடியாக வங்கி கிரிப்டோகரன்சி துறையில் தனது ஈடுபாட்டை குறைத்தது. 1 மார்ச்சு 2023 அன்று வங்கியின் கிரிப்டோ கரன்சி மூத்த தலைமை ஆலோசகர் பதவி விலகினார்.

வங்கியின் தோல்விக்கான காரணங்கள்[தொகு]

12 மார்ச் 2023 அன்று (ஞாயிற்றுக்கிழமை) நியூயார்க் மாநில நிதிச் சேவைத் துறையால் சிக்னேச்சர் வங்கி மூடப்பட்டது. பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை திரும்பப் பெறத் தொடங்கினர். திங்கள்கிழமை காலைக்குள் அதன் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக வங்கியால் சேவையை நிறுத்தவோ அல்லது அதன் நிதியை உயர்த்தவோ முடியவில்லை. வங்கியின் தோல்வியானது, நிதி அமைப்புமுறைக்கு ஒரு முறையான ஆபத்தாகக் குறிப்பிடப்பட்டது. இதன் வைப்புத் தொகைகள் மீது ஃபெடரல் டெபாசிட் காப்புறுதி நிறுவனத்தில் (FDIC) $ 2,50,000 டாலர் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கியின் விரைவான சரிவு உள்நாட்டினரை ஆச்சரியப்படுத்தியது. வெள்ளியன்று வங்கியில் குறிப்பிடத்தக்க அளவு டெபாசிட்கள் வெளியேறியிருந்தாலும், வங்கியின் நிர்வாகிகள் தாங்கள் நன்கு மூலதனம் பெற்றதாகவும், இழப்புகளை ஈடுசெய்து கொள்ள முடியும் என்றும் நம்பினர். வங்கியின் குழுவில் உறுப்பினராக இருந்த முன்னாள் அமெரிக்க காங்கிரஸார் பார்னி ஃபிராங்க், சிலிக்கான் வேலி வங்கியின் சரிவை அடுத்து, வாடிக்கையாளர்கள் வங்கியின் கிரிப்டோ கரன்சியைக் கண்டு கவலையடைந்து தங்கள் நிதியை திரும்பப் பெற்றனர். இதன் விளைவாக சிலிக்கான் வேலி வங்கியால் உருவாக்கப்பட்ட பீதி ஏற்பட்டது.

டிசம்பர் 2022 நிலவரப்படி, 89 பில்லியன் டாலர் வங்கி வைப்புத் தொகையில் 90 சதவீதத்த்திற்கு மேல் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வைப்பாளர்களும் முழுமை பணம் திரும்பப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிக்னேச்சர் வங்கியின் ஈக்விட்டி மற்றும் பத்திரங்களை வைத்திருப்பவர்கள் இழப்பை சந்திக்க நேரிடும்.

கிரிப்டோகரன்சியின் மதிப்பு சரிவு, சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சில்வர்கேட் வங்கியின் தோல்விகளுக்கு சில நாட்களுக்குப் பிறகு சிக்னேச்சர் வங்கியும் தோல்வி அடைந்தது. சிக்னேச்சர் வங்கி மூடப்பட்ட நேரத்தில், $110 பில்லியன் சொத்துக்களைக் கொண்டிருந்தது. 2008ல் சிலிக்கான் பள்ளத்தாக்கு வங்கி சரிவு மற்றும் வாஷிங்டன் மியூச்சுவல் நிதிகள் மூடப்பட்டதற்குப் பின்னால், இவ்வங்கியின் தோல்வி அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது பெரியதாகும்.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Private Client Offices". Signature Bank. November 14, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 12, 2023 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Navigating The Future" (PDF). November 14, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. January 12, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 3. Ensign, Rachel Louise. "The Only Bank This Hip-Hop Mogul Will Use". The Wall Street Journal. https://www.wsj.com/articles/the-only-bank-this-hip-hop-mogul-will-use-1440978447. 
 4. "Form 10Q Quarterly Report". FDIC. https://efr.fdic.gov/fcxweb/efr/fcxservlet/PublicEfrFileDownload?instFlngId=7994&instFlngAtchId=1&fileType=instFlng. 
 5. Signature Bank becomes next casualty of banking turmoil after Silicon Valley Bank
 6. After US Silicon Valley Bank, Signature Bank collapse
 7. US shuts down Signature Bank – second lender to fail in three days
 8. Adams, John (April 23, 2021). "Signature Bank raises its bet on cryptocurrency". American Banker. ProQuest 2516512682. 
 9. McCrum, Dan; Franklin, Joshua (July 29, 2022). "Signature stock goes out of style following crypto sector debacle: Investors ditch last year's US digital darling amid fears rapid growth is being thrown into reverse". Financial Times: p. 11. ProQuest 2707266859. 

[1] [2] [3]

 1. Department of the Treasury(March 12, 2023). "Joint Statement by the Department of the Treasury, Federal Reserve, and FDIC". செய்திக் குறிப்பு.
 2. (March 12, 2023). "FDIC Establishes Signature Bridge Bank, N.A., as Successor to Signature Bank, New York, NY". செய்திக் குறிப்பு.
 3. Smialek, Jeanna; Rappeport, Alan (2023-03-12). "Regulators Close Another Bank and Move to Protect Deposits" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2023/03/12/business/janet-yellen-silicon-valley-bank.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்னேச்சர்_வங்கி&oldid=3676129" இருந்து மீள்விக்கப்பட்டது