உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்னல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்னல்
உருவாக்குனர்
 • சிக்னல் அறக்கட்டளை,
 • சிக்னல் மெசஞ்சர் மற்றும் பங்களிப்பாளர்கள்
தொடக்க வெளியீடுசூலை 29, 2014 (2014-07-29)[1][2]
இயக்கு முறைமை
 • ஆண்ட்ராய்டு 4.4 அல்லது மேல்
 • ஐஓஎஸ் 11.1 அல்லது மேல்
 • விண்டோசு 7 அல்லது மேல் (64 bit) [3]
 • மேக் 10.10 அல்லது மேல்r[4]
 • லினக்சு APT ஆதரவினை ஏற்றுக் கொள்வது[3]
மென்பொருள் வகைமைமறையாக்கம் செய்யப்பட்ட குறுஞ்செய்தி நிகழ்படம் அனுப்புதல்
உரிமம்

சிக்னல் (Signal ) என்பது சிக்னல் அறக்கட்டளை மற்றும் சிக்னல் மெசஞ்சர் உருவாக்கிய பன்னியக்குதள மறையாக்க செய்தியிடல் சேவையாகும் . இணையத்தைப் பயன்படுத்தி கணினிக் கோப்புகள், குரல் குறிப்புகள், படங்கள் மற்றும் நிகழ்படங்களை ஒருவருக்கொருவர் மற்றும் குழு செய்திகளை அனுப்ப வகை செய்கிறது.[9] ஒருவருக்கொருவர் மற்றும் குழு குரல் மற்றும் நிகழ்பட அழைப்புகளைச் செய்ய இயலும் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதள பதிப்புகளில் இதனை விரும்பினால் ஒரு குறுஞ்செய்திச் சேவையாகப் பயன்படுத்த முடியும். [10]

சிக்னல் நிலையான செல்லுலார் தொலைபேசி எண்களை அடையாளங் காட்டிகளாகப் பயன்படுத்தி , ஆதியந்த மறையீடு மூலமாக அனைத்து சிக்னல் பயனர்களின் தகவல் தொடர்புகளையும் பாதுகாக்கிறது. பயனர்கள் தங்கள் அலைபேசி தொடர்புகளின் அடையாளத்தையும் தரவு சேனலின் ஒருமைப்பாட்டையும் சுயாதீனமாக சரிபார்க்க இயலும். [10] [11]

இலாப நோக்கற்ற சிக்னல் அறக்கட்டளையை பிரையன் ஆக்டன் என்பவரால் 50 மில்லியன் டாலரில், பிப்ரவரி 2018 இல் தொடங்கப்பட்டது. [12]ஜூன் 2020 கணக்கின்படி இந்த செயலியினை 32.4 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 2020 அன்றைய நிலவரப்படி 20 மில்லியன் மாத உத்வேக ஊடகப் பயன்பாட்டாளர்கள் இருந்துள்ளனர். [13]

டெபியன் 10 மேசைக்கணினியில் சிக்னல் நிறுவுவதற்கானக் கட்டளைகள்

வரலாறு[தொகு]

ஆதியந்த மறையீடு செய்தி சிக்னல் சேவை 2014 இல் பிரையன் ஆக்டன் என்பவரால் தொடங்கப்பட்டது, மேலும் இது 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

2013–18:ஓபன் விஸ்பர் சிஸ்டம்ஸ்[தொகு]

ஆண்ட்ராய்டுக்கான

சிக்னல் இலச்சினை,

2015–2017
சிக்னல்

இலச்சினை,

2015–2020

ஓபன் விஸ்பர் சிஸ்டம்ஸ் வலைத்தளம் ஜனவரி 2013 இல் தொடங்கப்பட்டது.

பிப்ரவரி 2014 இல், ஓபன் விஸ்பர் சிஸ்டம்ஸ் இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்தியது, இது ஆதியந்த மறையீடு குறியாக்கப்பட்ட குழு அரட்டை மற்றும் உடனடி செய்தியிடல் திறன்களைச் சேர்த்தது. [14]

மே 2010 இல் தொடங்கப்பட்டதிலிருந்து [15] மார்ச் 2015 வரை, சிக்னலின் ஆண்ட்ராய்டு பதிப்பு (பின்னர் டெக்ஸ்ட் செக்யூர் என்று அழைக்கப்பட்டது) மறைகுறியாக்கப்பட்ட எம்எம்எஸ் செய்தியிடலுக்கான ஆதரவை உள்ளடக்கியது. [16]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. Greenberg, Andy (29 July 2014). "Your iPhone Can Finally Make Free, Encrypted Calls". Wired. https://www.wired.com/2014/07/free-encrypted-calling-finally-comes-to-the-iphone/. பார்த்த நாள்: 15 மார்ச்சு 2021. 
 2. Marlinspike, Moxie (29 July 2014). "Free, Worldwide, Encrypted Phone Calls for iPhone". Open Whisper Systems. Archived from the original on 31 August 2017. பார்க்கப்பட்ட நாள் 16 January 2017.
 3. 3.0 3.1 Nonnenberg, Scott (31 October 2017). "Standalone Signal Desktop". Open Whisper Systems. Archived from the original on 15 February 2020. பார்க்கப்பட்ட நாள் 31 October 2017.
 4. "Installing Signal - Signal Support". Archived from the original on 2020-02-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-20.
 5. Signal. "Signal-iOS". GitHub. Archived from the original on 11 November 2014. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
 6. Signal. "Signal-Android". GitHub. Archived from the original on 30 December 2015. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
 7. Signal. "Signal-Desktop". GitHub. Archived from the original on 8 April 2016. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
 8. Signal. "Signal-Server". GitHub. Archived from the original on 28 December 2016. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
 9. Signal [signalapp] (1 May 2017). "Today's Signal release for Android, iOS, and Desktop includes the ability to send arbitrary file types" (Tweet). பார்க்கப்பட்ட நாள் 5 November 2018. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 10. 10.0 10.1 Frosch et al. 2016
 11. Schröder et al. 2016
 12. Greenberg, Andy (21 February 2018). "WhatsApp Co-Founder Puts $50M Into Signal To Supercharge Encrypted Messaging". Wired (Condé Nast). https://www.wired.com/story/signal-foundation-whatsapp-brian-acton/. பார்த்த நாள்: 21 February 2018. 
 13. Singh, Manish. "Signal's Brian Acton talks about exploding growth, monetization and WhatsApp data-sharing outrage". TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
 14. Donohue, Brian (24 February 2014). "TextSecure Sheds SMS in Latest Version". Threatpost. Archived from the original on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
 15. "Announcing the public beta". Whisper Systems. 25 May 2010. Archived from the original on 30 May 2010. பார்க்கப்பட்ட நாள் 22 January 2015.
 16. Open Whisper Systems (6 March 2015). "Saying goodbye to encrypted SMS/MMS". Archived from the original on 24 August 2017. பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.

நூலியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்னல்&oldid=3759366" இலிருந்து மீள்விக்கப்பட்டது