சிக்க வீர ராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குடகு இராச்சியத்தின் இறுதி மன்னர் சிக்க வீர இராஜேந்திரன் படம், 1805)

சிக்க வீர ராஜேந்திரன் (Chikavira Rajendra or Chikka Vira Rajendra) (கன்னடம்:ಚಿಕವೀರ/ಚಿಕ್ಕವೀರ ರಾಜೇಂದ್ರ}}, தென்னிந்தியாவின் குடகு இராச்சியத்தை 1820 முதல் 1834 முடிய 14 ஆண்டுகள் ஆட்சி செய்த இறுதி மன்னர் ஆவார்.[1]இவர் இரண்டாம் லிங்க ராஜேந்திரனின் மகன் ஆவார்.

பிரித்தானிய இந்தியாவுடன் குடகு இராச்சியம் இணைத்தல்[தொகு]

நல்க்நாடு அரண்மனை, மடிகேரி, குடகு இராச்சியம்

குடகு இராச்சிய மன்னர் சிக்க வீர ராஜேந்திரனுக்கு ஆண் வாரிசு இல்லாததால், அவரது மூத்த மகள் கௌரம்மாவை ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணி தனது அரண்மனையில் வளர்ப்பு மகளாக வளர்த்தார். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள், சிக்க வீர ராஜேந்திரனை ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு நாடு கடத்தி, குடகு இராச்சியத்தை, பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்துக் கொண்டனர்.

வரலாறு[தொகு]

விக்டோரியா மகாராணியின் வளர்ப்பு மகளாக, சிக்க வீர ராஜேந்திரனின் மகள் கௌரம்மா

குடகு இராச்சியத்தை 1834ல் பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்துக் கொண்ட பின்னர், பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்கள், மன்னர் சிக்க வீர ராஜேந்திரனுக்கு ஆண்டுக்கு 12,000 பவுண்டு தொகை ஓய்வூதியமாக வழங்கினர். ஓய்வூதியத் தொகையுடன் வாரணாசியில் வாழ்ந்த சிக்க வீர ராஜேந்திரனின் மூன்றாம் மகள் முத்தம்மா என்ற கங்கா மகாராணியை, நேபாள இராச்சியத்தின் ராணா வம்ச, நேபாள பிரதம அமைச்சர் ஜங் பகதூர் ராணாவுடன் டிசம்பர், 1850ல் திருமணம் நடைபெற்றது.[2]

குடகு இராச்சியத்தின் முன்னாள் மன்னர் சிக்க வீர இராஜேந்திரன் 12 மே 1852 அன்று தனது இரு மனைவியர் மற்றும் ஒரு மகளுடன் லண்டனுக்குப் பயணித்தார். [3]

24 செப்டம்பர் 1859ல் உடல் நலக் குறைவால், இலண்டனில் உள்ள மைதா மலைப்பகுதியில், சிக்க வீர இராஜேந்திரன் மறைந்தார். [4][5]

இலக்கியங்களிலும், ஊடகங்களிலும்[தொகு]

ஞானபீட விருது பெற்ற புகழ் பெற்ற கன்னட மொழி எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் [6], குடகு மன்னர் சிக்க வீர இராஜேந்திரன் வரலாற்றை, சிக்கவீர ராஜேந்திரன் எனும் புதினத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

குடகு மன்னர் சிக்க வீர இராஜேந்திரன் வரலாற்றை, 1992ல் கன்னட மொழியில், தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பியது.[7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1
  2. "A love token". West Middlesex Advertiser and Family Journal: p. 3. 11 September 1858. http://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000441/18580911/022/0003. 
  3. "Arrival of an East India Rajah". Falkirk Herald: p. 2. 13 May 1852. http://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000466/18520513/004/0002. 
  4. "Personal". Royal Cornwall Gazette: p. 3. 7 October 1859. http://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000180/18591007/006/0003. 
  5. Gazetteer of Coorg: Natural Features of the Country and the Social and Political Condition of Its Inhabitants. Delhi: B. R. Publishing Corporation. 1870. பக். 355. https://books.google.co.in/books/about/Gazetteer_of_Coorg.html?id=rUseAAAAMAAJ. பார்த்த நாள்: 6 May 2017. 
  6. Jnanpith Awards
  7. Minute of Dissent to the Report of the Joint Committee, Indian Parliament. 7 August. 1992