சிக்கோணிபார்மிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கோணிபார்மிசு
புதைப்படிவ காலம்:ஆரம்பக்கால இயோசீன் முதல் 30–0 Ma
வெண்கொக்கு (சிகோணியா சிகோணியா)
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பிலி
வகுப்பு: பறவை
வரிசை: சிக்கோணிபார்மிசு
குடும்பம்: சிக்கோணிபார்மிடே
பேரினம்
 • அனசுடோமசு
 • சிகோணியா
 • எபிபியோரைங்கேட்டசு
 • ஜாமிரு
 • லெப்டாப்டிலோசு
 • மைசெடேரியா
பூநாரை

பெரிய, நீண்ட கால்கள், நீண்ட கழுத்து கொண்ட நீண்ட, தடித்த பற்களைக் கொண்ட கொக்கு, நாரை, குருகு, பூநாரை, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், காலணி அலகி, கத்தித்தலை இனங்களை உள்ளடக்கிய ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பறவைகள் சிக்கோனிடே என்ற குடும்பத்தின சிக்கோணிபார்மிசு (Stork) என்ற வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. [1]

வாழிடம்[தொகு]

அனைத்துப் பகுதிகளிலும் பரவிக் காணப்படும். காலணி அலகி, கத்தித்தலை இரு இனங்களும் ஆப்பிரிக்காவுக்கு உரியவை. ஆஸ்திரேலியாவில் பூநாரைகளும், வட அமெரிக்காவில் நாரைகளும் காணப்படுவதில்லை. ஆஸ்திரேலியாவில் நாரைகள் ஓரினம் மட்டுமே காணப்படும். ஐரோப்பாவில் நாரை, உண்ணிக்கொக்கு இனங்கள் மென்னீர் நிலைகளில் வாழ்கின்றன.[2] உப்பு, காரத்தன்மை கொண்ட நீர் நிலைகளையும் நாடிச் செல்லும். பெரும்பாலான நாரைகள் தவளைகள், மீன்கள், பூச்சிகள், மண்புழுக்கள், சிறிய பறவைகள் மற்றும் சிறிய பாலூட்டிகளை சாப்பிடுகின்றன. ஆறு பேரினங்களில் 20 வகையான நாரைகள் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அமைப்பு[தொகு]

மிகப் பெரிய நாரைகள் 1.2 மீ உயரம் கொண்டவை. விரித்து வைக்கப்பட்ட இறக்கைகளின் இருமுனைகளுக்கும் இடைப்பட்ட இடைவெளி 2.6 மீ நீளம் இருக்கும். மிகச் சிறிய இனங்கள் 30 செ.மீ அளவிலும், 100 கிராம் எடையிலும் இருக்கும். நடுத்தரனமான இனங்கள் 60-90 செ.மீ உயரம் உள்ளவை. மிகவும் கனமான, நீண்ட கால்கள் மற்றும் கழுத்துகளைக் கொண்டுள்ளது, சில இனங்களில் (எடுத்துக்காட்டாக சேணம்-பில் நாரை) பெண்களை விட ஆண்கள் 15% வரை பெரியவை, ஆனால் தோற்றத்தில் கிட்டத்தட்ட எந்த வித்தியாசமும் இல்லை. [3]

இறகுகள்[தொகு]

புலிக்கொக்கு

பெரும்பாலான இனங்கள் வெண்மையான இறகுகளையும், சாம்பல் நிற இறகுகளையும் கொண்டிருக்கும். சில நாரை இனங்களில் கறுப்பு இறகுகளும் காணப்படும். கத்தித்தலை நாரைகளின் இறகுகள் பழுப்பு நிறத்திலும், பூநாரை, கரண்டிவாயனின் இறகுகள் சிவப்பு நிறம். பெரிய குருகு, புலிக்கொக்கு இனங்கள் சுற்றுச்சூழலுக்கேற்ப அமைந்துள்ளன.

உணவு[தொகு]

பெரும்பாலான பறவைகள் கூட்டமாகவே சேர்ந்துத் திரிகின்றன. ஆப்பிரிக்காவிலுள்ள குளங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இனங்கள் கூடி வாழ்கின்றன.குருகு, காலனிஅலகி, புலிக்கொக்கு இனங்கள் தனித்தே இரைத் தேடி திரியும்.[4] நாரைகள் ஊர்வன, சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பிற சிறிய முதுகெலும்பில்லாத உயிரினங்களை உண்ணும் மாமிச வேட்டையாடும் விலங்குகள் ஆகும். இவை பொதுவாக ஆழமற்ற நீரில் தனக்கான உணவுகளை வேட்டையாடுகின்றன.[5]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Anastomus lamelligerus subsp. lamelligerus". www.gbif.org. Archived from the original on 2018-08-03. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
 2. About the Wood Stork: Denizens of the Wetlands பரணிடப்பட்டது 2011-07-27 at the வந்தவழி இயந்திரம், Accessed on 13.12.2010
 3. del Hoyo, J. Elliott, A. & Sargatal, J. (1992). Handbook of the Birds of the World. Volume 1: Ostrich to Ducks. Lynx Edicions. ISBN 84-87334-10-5.
 4. அறிவியல் களஞ்சியம் தொகுதி 13
 5. Sundar, K.S. Gopi (2011). "Farmland foods: Black-necked Stork Ephippiorhynchus asiaticus prey items in an agricultural landscape". Forktail 27: 98–99. https://static1.squarespace.com/static/5c1a9e03f407b482a158da87/t/5c211dc7352f53dd5f7882a9/1545674184080/Black-necked-Stork.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கோணிபார்மிஸ்&oldid=3861270" இலிருந்து மீள்விக்கப்பட்டது