சிக்கி புல் கைவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிக்கி புல் கைவினைப்பொருட்கள் (Sikki grass craft) இந்தியாவின் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் காணப்படும் சிக்கி எனப்படும் சிறப்பு வகை புல்லில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.[1] பீகார் மாகாணத்தில் காணப்படும் சிக்கி புல்லில் இருந்து பல்வேறு கைவினைப் பொருட்களை உருவாக்கும் கலை பழமையான ஒரு கலையாகும்.[2]

நேபாளத்தின் தெற்கு சமவெளியில் உள்ள தாரு பெண்கள் பல நூற்றாண்டுகளாக சிக்கி புல்லில் இருந்து பாரம்பரிய கூடைகளை நெசவு செய்து வருகின்றனர்.[3] இப்போதெல்லாம், பல தாரு பெண்கள் கூட்டு வலையமைப்பின் மூலம் சிக்கி கைவினைப்பொருட்கள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

செயல்முறை[தொகு]

முதலில் சிக்கி புல் உலர்த்தப்பட்டு, பூவின் தலை வெட்டப்படுகிறது. இதன் விளைவாக கிடைக்கும் மெல்லிய தங்க இழையால் பொம்மைகள் மற்றும் கூடைகள் செய்யப்படுகின்றன. பொருட்கள் சில நேரங்களில் வர்ணமும் பூசப்படுகின்றன.

பௌதி எனப்படும் சிக்கி புல்லால் செய்யப்பட்ட பெட்டிகள், திருமணத்தின் போது பெற்றோர்களால் தங்கள் மகள்களுக்கு வழங்கப்படுகின்றன. இப்பெட்டிகள் குங்குமம் , ஆபரணங்கள் மற்றும் நகைகளை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2013-12-27. பார்க்கப்பட்ட நாள் 2013-12-25.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "सिक्की ग्रास आर्ट - Khabar Street". Archived from the original on 17 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 17 August 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Local arts and crafts". Archived from the original on 2019-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கி_புல்_கைவினை&oldid=3929779" இலிருந்து மீள்விக்கப்பட்டது