சிக்கிம் தொழில்சார் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கிம் தொழில்சார் பல்கலைக்கழகம்
Sikkim Professional University
குறிக்கோளுரைஅறிவின் ஓர் உறைவிடம்
வகைசிக்கிம் மாநிலத்தால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம்
உருவாக்கம்தொடக்கம் 2008
துணை வேந்தர்பேராசிரியர் எச்.எச். ஆசன்
அமைவிடம், ,
வளாகம்பாதி நகரம்
நிறங்கள்நீலமும் ஆரஞ்சும்          
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, இந்திய செவிலியர் மன்றம், இந்திய மருந்தியல் மன்றம், இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கம்.
இணையதளம்www.spu.ac

சிக்கிம் தொழில்சார் பல்கலைக்கழகம் (Sikkim Professional University) இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திலுள்ள காங்டாக் நகரில் அமைந்துள்ளது. சிக்கிம் மாநில சட்டமன்றத்தின் சிக்கிம் தொழில்சார் (2008 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சட்டம்) சட்டத்தின் அடிப்படையில் 2008 ஆம் ஆண்டு மாநில தனியார் பல்கலைக்கழகமாக இது தொடங்கப்பட்டது. [1] முன்னதாக இப்பல்கலைகழகம் விநாயகா மிசன்சு சிக்கிம் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. [2] ஆனால் தற்பொழுது சிக்கிம் மாநில சட்டமன்றத்தின் சிக்கிம் தொழில்சார் (2020 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க சட்டம்) சட்டத்தின் அடிப்படையில் சிக்கிம் தொழில்சார் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு, இந்திய செவிலியர் மன்றம், இந்திய மருந்தியல் மன்றம் போன்ற அரசு அமைப்புகளின் அங்கீகாரம் சிக்கிம் தொழில்சார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

கல்வித் திட்டம்[தொகு]

சிக்கிம் தொழில்சார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா

சிக்கிம் தொழில்சார் பல்கலைக்கழகத்தில் கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளிலும் இளநிலை பட்டம் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு திட்டத்தின் கீழ் பாடங்கள் கறிபிக்கப்படுகின்றன. [3]

  • கலை மற்றும் சமூக அறிவியல் கல்லூரி
  • பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
  • வணிக மேலாண்மை மற்றும் நிர்வாக ஆய்வுகள் கல்லூரி
  • கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்லூரி
  • மருந்து மற்றும் துணை மருத்துவ அறிவியல் கல்லூரி
  • நூலக அறிவியல் கல்லூரி
  • செவிலியக் கல்லூரி
  • வணிகக் கல்லூரி

மேற்கோள்கள்[தொகு]

  1. "State-wise List of Private Universities in India" (PDF). ugc.ac.in. University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 17 May 2021.
  2. "Sikkim Professional University Act, 2008" (PDF). Sikkim Government Gazette. Government of Sikkim. 12 May 2020.
  3. "Sikkim Professional University". SPU, Courses Offered.

புற இணைப்புகள்[தொகு]