சிக்கிம் அரசு சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கிம் அரசு சின்னம்
[[file:
|200px]]
விவரங்கள்
பயன்படுத்துவோர்சிக்கிம் அரசு
உள்வாங்கப்பட்டது1877, 1975
முடிவலம்புரிச் சங்கு
விருதுமுகம்கொர்லோ பிரார்த்தனை சக்கரம்
ஆதரவுஐரோப்பிய டிராகன்கள்
குறிக்கோளுரைகாம்-சம்-வங்டு (மூன்று உலகங்களின் வெற்றி)

சிக்கிம் அரசு இலச்சினை, காம்-சம்-வுங்குடு என்றும் அழைக்கப்படுகிறது (Emblem of Sikkim, also called Kham-sum-wangdue (Sikkimese: ༄༅།ཁམས་གསུམ་དབང་འདུས།), சிக்கிம் அரசின் இலச்சினையாக பயன்படுத்தப்படுகிறது. இது 1877 இல் ராபர்ட் டெய்லரால்[disambiguation needed] ஐரோப்பிய பாணியில் வடிவமைக்கப்பட்டது மற்றும் சிங்கிம் முடியாட்சியின் கடைசி காலத்துக்கு முன்பு பயன்படுத்த தொடங்கப்பட்டது.[1]

பருந்துப் பார்வை[தொகு]

நடுவில் உள்ள கேடயத்தை ஐரோப்பிய டிராகன்கள் தாங்கி இருப்பதுபோலவும், கேடயத்தில், பௌத்த கொர்லோ பிரார்த்தனை சக்கரத்தைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள தலைக்கவசத்தில் பௌத்த அஷ்டமங்களப் பொருட்களைக் கொண்டதாக உள்ளது.

இந்த சின்னத்தில் திபெத்திய சொற்களான காம்-சம்-வங்டு, அதாவது "மூன்று உலகங்களின் வெற்றி" என்று பொருள்படும் சொற்றொடர் உள்ளது.[2]

சிக்கிம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, முடியாட்சி ஒழிக்கப்பட்ட பிறகு, சிக்கிமின் கொடி அதன் அதிகாரப்பூர்வ நிலையை இழந்தது, ஆனால் சின்னம் தக்கவைத்துக்கொள்ளப்பட்டது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கிம்_அரசு_சின்னம்&oldid=2464509" இலிருந்து மீள்விக்கப்பட்டது