உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்கல் வழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோசசில் கண்டெடுக்கப்பட்ட, சிக்கல் வழியைக் குறிக்கும் வடிவத்தோடு கூடிய கிமு 430ஐச் சேர்ந்த வெள்ளி நாணயம்.
சுவிட்சர்லாந்தில் உள்ள தள ஓடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட உரோமர் காலச் சிக்கல் வழி. தேசியசையும், மினோட்டோரையும் காட்டுகிறது.
பிராங்பேர்ட் ஹோலி கிராஸ் சர்ச் கிரிஸ்துவர் தியானம் மையத்தில் 2500 எரியும் tealights மற்றும் லிம்பர்க் மறைமாவட்ட ஆன்மீகம் செய்யப்பட்ட கிரீட்டிய பாணி அட்வென்ட் பிராங்க்ஃபுர்ட்-Bornheim

சிக்கல் வழி (labyrinth) என்பது, கிரேக்கத் தொன்மங்களில் சிக்கல் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பைக் குறிக்கும். இது கிரீட்டின் அரசரான மினோசு என்பவருக்காக டேடலசு என்னும் கைவினைஞரால் நோசசு என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, அரைப்பகுதி மனித வடிவத்தையும், அரைப்பகுதி காளை வடிவமும் கொண்ட தொன்மப் பிராணியை எவரும் அணுகா வண்ணம் அடைத்து வைக்கப் பயன்பட்டது. ஆனாலும், ஆதென்சின் வீரனான தேசியசு அந்த அமைப்புக்குள் நுழைந்து அப்பிராணியைக் கொன்றான். அவ்வமைப்பைக் கட்டி முடித்த பின்னர் அவ்வமைப்பில் இருந்து தான் மட்டும் தப்பி வெளியேறக்கூடிய வகையில் அதைத் தந்திரமாக அமைத்திருந்தானாம்.[1]

சிக்கல் வழி என்பதும், புதிர்வழி (maze) எனப்படுவதும் பொது வழக்கில் பயன்படுத்தப்பட்டாலும், இரண்டு வேறுவேறானவை. புதிர்வழி என்பது, பல்வேறு கிளைவழிகளுடன் கூடிய மிகவும் சிக்கலான ஒரு வழியாகும் (பல்லொழுங்குப் பாதை). ஆனால், சிக்கல் வழி சிக்கலான முறையில் சுற்றிச் சுற்றிச் செல்லுகின்ற ஆனால் கிளைகள் இல்லாத ஒற்றை வழியாகும் (ஓரொழுங்குப் பாதை). இந்த அடிப்படையில் பார்க்கும்போது, சிக்கல் வழி உட்செல்வதற்கும் வெளியேறுவதற்கும் குழப்பம் தராத ஒரு அமைப்பு.[2]

செந்நெறிக்காலச் சிக்கல் வழி.
முச்சுருட் சிக்கல் வழி
நடுக்காலச் சிக்கல் வழி.

தொடக்ககாலக் கிரீத்திய நாணயங்களில் பல்லொழுங்கு வடிவங்கள் அரிதாகக் காணப்பட்டாலும்,[3] கிமு 430 இலிருந்தே ஏழு வரிசைகளில் அமைந்த ஓரொழுங்கு வடிவங்கள் நாணயங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.[4] தருக்கப்படியும், இலக்கிய விவரங்களில் இருந்தும், கிரேக்கத் தொன்மப் பிராணியான மினோட்டோரை அடைத்துவைத்த அமைப்பு கிளைத்த வழிகளோடு கூடியதாக இருந்த போதும்,.[5] ஓரொழுங்கு வடிவங்களே பின்னர் சிக்கல் வழியைக் குறிப்பதற்காகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. சிக்கல் தன்மை அதிகரித்தாலும், உரோமர் காலத்தில் இருந்து மறுமலர்ச்சிக் காலம் வரையில் சிக்கல் வழியைக் குறிக்கப் பயன்பட்டவை பெரும்பாலும் ஓரொழுங்கு வடிவங்களே. மறுமலர்ச்சிக் காலத்தில் பூங்காப் புதிர்வழிகள் பிரபலமானபோதே பல்லொழுங்கு வடிவங்கள் மீண்டும் அறிமுகமாயின.

சிக்கல் வழி வடிவங்கள் அலங்காரமாக மட்பாண்டங்கள், கூடைகள், உடல் ஓவியங்கள், குகை ஓவியங்கள், தேவாலயச் சுவரோவியங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. உரோமர் சிக்கல் வழி வடிவங்களைச் சுவர்களிலும், நிலத்திலும் ஓடுகளைப் பயன்படுத்தி உருவாக்கினர். சில இடங்களில் தளங்களில் உருவாக்கப்பட்ட சிக்கல் வழி வடிவங்கள் அவ்வழியில் நடக்கக் கூடிய அளவு பெரியவையாகவும் இருந்தன.

குறிப்புகள்

[தொகு]
  1. Doob 1992, ப. 36.
  2. Kern, Through the Labyrinth, p. 23. The usage restricting maze to patterns that involve choices of path is mentioned by Matthews (p. 2-3) as early as 1922, though he argues against it.
  3. Kern, Through the Labyrinth, 2000, item 43, p. 53.
  4. Kern, Through the Labyrinth, 2000, item 50, p. 54.
  5. Penelope Reed Doob, The Idea of the Labyrinth, pp. 40–41.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Labyrinth
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கல்_வழி&oldid=2152829" இலிருந்து மீள்விக்கப்பட்டது