சிக்கல் கலோ
| சிக்கல் கலோ Chikhal Kalo | |
|---|---|
| பிற பெயர்(கள்) | மண் திருவிழா |
| கடைப்பிடிப்போர் | கோவா இந்துக்கள் |
| வகை | மதம், பண்பாடு |
| நாள் | இந்து நாட்காட்டியில் ஆசாடத்தின் நான்காவது மாதத்தின் 11 ஆவது நாள். |
சிக்கல் கலோ (Chikhal Kalo) என்பது கிருட்டிணரின் குழந்தைப் பருவத்தைக் கொண்டாடும் ஒரு பாரம்பரிய மண் திருவிழா ஆகும். இந்த விழா இந்திய மாநிலமான கோவாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள போண்டா தாலுகாவின் மார்செலில் உள்ள தேவ்கி கிருட்டிணா கோவிலில் நடைபெறுகிறது.[1][2]
சிக்கல் கலோ என்ற சொற்களின் பொருள் "சேற்றுக் குளியல்" என்பதாகும். இந்த கொண்டாட்டம் கோவாவின் விவசாய சமூகத்திற்கும் தாய் பூமிக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆழமான பிணைப்பைக் கொண்டாடுகிறது.[3][4]
இந்த விழாவில், மக்கள் உடலில் எண்ணெய் தடவி, கிருட்டிணர் குழந்தையாக இருந்தபோது விளையாடிய விளையாட்டுகளைப் போலவே சேற்றில் விளையாடுவார்கள். இந்த விழாவில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இருவரும் கலந்து கொள்கிறார்கள்.சிக்கல் கலோ விழா கோவா மாநில சுற்றுலாத் துறையால் அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டுள்ளது..[5][6]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chikhal kalo: An expression of joy". The Times of India. 2009-07-05. https://timesofindia.indiatimes.com/city/goa/chikhal-kalo-an-expression-of-joy/articleshow/4739010.cms?from=mdr.
- ↑ "Chikhal Kalo: Goans Celebrate Mud Festival With Zeal" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-07-03. Retrieved 2023-07-08.
- ↑ "Chikhal Kalo – Department of Tourism, Government of Goa" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-07-08.
- ↑ "Goa mud festival 'Chikhal Kalo' celebrates connection between farmers, Mother Earth". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-07-02. Retrieved 2023-07-08.
- ↑ Udayavani. "Goa Festival: ಶತಮಾನಗಳಷ್ಟು ಪುರಾತನ ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಮಣ್ಣಿನ ಹಬ್ಬ ಆಚರಣೆ…ಏನಿದು?". Udayavani (in கன்னடம்). Retrieved 2023-07-08.
- ↑ Gracias, Abigail Crasto,Franky (2023-06-30). "Goa's Chikal Kalo festival makes a splash". Gomantak Times (in ஆங்கிலம்). Retrieved 2023-07-08.
{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)