சிக்கன் லிட்டில் (2005 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிக்கன் லிட்டில் (Chicken Little) என்பது 2005ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை இயங்குபடம் ஆகும். ஒரு ஆங்கிலோ-சாக்சன் கற்பனைக் கதையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இது டிஸ்னி நிறுவனத்தின் 46வது இயங்கு திரைப்படம் ஆகும். ஐஅ$314 மில்லியன் (2,245.6 கோடி) வசூல் செய்தது.[1] ஒரு ஆண்டுக்கு முன்னர் வானம் விழுவதாக நினைத்து பதட்டம் ஏற்படுத்தியதற்காக சிக்கன் லிட்டில் தான் வாழும் பட்டணத்தில் உள்ளவர்களால் நகைப்புக்கு உள்ளாகிறது. ஆனால் ஒருநாள் வேற்று கிரகவாசிகளால் பட்டணம் தாக்கப்படும்போது சிக்கன் லிட்டிலும் அதன் நண்பர்களும் இவ்வுலகத்தை காப்பாற்ற வேண்டும். இப்படம் வெளியாவதற்கு முன்னர் இறந்த டிஸ்னி கலைஞர் ஜோ கிரான்டுக்கு இப்படம் அர்ப்பணிக்கப்பட்டது.

இப்படம் நவம்பர் 4, 2005 அன்று வெளியானது. மார்ச் 21, 2006 அன்று ஒளிப்பட வட்டில் வெளியிடப்பட்டது.[2] நீக்கப்பட்ட காட்சிகள், மூன்று வெவ்வேறு தொடக்கக் காட்சிகள், படம் உருவான விதம் பற்றிய 6 காட்சிகள், ஒரு காணொளி விளையாட்டு, ஒரு பாடல் வரிகள் கொண்ட பாட்டு மற்றும் இரண்டு இசைக் காணொளிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.[3][4] முதல் வாரத்தில் 27 இலட்சம் வட்டுக்கள் விற்பனையாயின.[5] மார்ச் 20, 2007 அன்று நீலக்கதிர் வட்டில் இப்படம் வெளியிடப்பட்டது.

உசாத்துணைகள்[தொகு]