உள்ளடக்கத்துக்குச் செல்

சிகோரோடைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகோரோடைட்டு
Scorodite
பொதுவானாவை
வகைஆர்சனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுFeAsO4•2H2O
இனங்காணல்
நிறம்பச்சை, நீலப் பச்சை, சாம்பல், சாம்பல் பச்சை, நீலம், மஞ்சள்-பழுப்பு, கிட்ட்த்தட்ட நிறமற்றது, ஊதா
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
முறிவுதுணை-சங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை3.5-4
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு, பிசின் தன்மை, சற்று உடைக்கமுடியாதது
கீற்றுவண்ணம்பச்சை கலந்த வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
அடர்த்திஅளக்கப்பட்டது: 3.27 கி/செ.மீ3 கணக்கிடப்பட்டது: 3.276 கி/செ.மீ3
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
பலதிசை வண்ணப்படிகமைபலவீனம்
2V கோணம்அளக்கப்பட்டது: 40° to 75° கணக்கிடப்பட்டது 46° to 80°
நிறப்பிரிகைவலிமையானது r > v
மேற்கோள்கள்[1]

சிகோரோடைட்டு (Scorodite) என்பது FeAsO4•2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நீரேறிய இரும்பு ஆர்சனேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. நீர்வெப்ப படிவுகளிலும் உலகெங்கிலும் காணப்படும் கோசான் எனப்படும் சிதைவுப் பாறைகளிலும் இக்கனிமம் காணப்படுகிறது. காலநிலை மாறுபாடு மூலமாக சிகோரோடைட்டு லிமோனைட்டு என்ற கனிமமாக மாற்றமடைகிறது. செருமனி நாட்டிலுள்ள சாக்சோனி மாநிலத்தின் தாதுப் பகுதியான சாக்சோனி மாவட்டம் சிக்வார்சென்பெர்க் நகரத்தில் முதன் முதலாக சிகோரோடைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. சூடுபடுத்தும்போது பூண்டின் மணத்தை வெளிப்படுத்தியதால் பூண்டின் மணம் போன்ற என்ற பொருள் கொண்ட கிரேக்க மொழிச் சொல்லான சிகோரோடியன் என்ற சொல்லின் அடிப்படையில் இப்பெயர் சூட்டப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் வாசிக்க

[தொகு]
  • Palache, C., H. Berman, and C. Frondel (1951) Dana's system of mineralogy, (7th edition), v. II, pp. 763–767

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகோரோடைட்டு&oldid=2942619" இலிருந்து மீள்விக்கப்பட்டது