சிகைக்காய்ச் செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகைக்காய்ச் செடி
Acacia concinna Blanco2.374.png
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
பேரினம்: Acacia
இனம்: A. concinna
இருசொற் பெயரீடு
Acacia concinna

[1]

சிகைக்காய்ச் செடி காய்கள்

ஆசியாவிற்கே தனித்துவம் வாய்ந்த குறிப்பாக மத்திய மற்றும் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படும் ஒருச் செடி சிகைக்காய் செடியாகும். அகேசிகான்சின்னா (Acacia concinna) என்னும் தாவரவியற் பெயர்க் கொண்ட இத்தாவரத்தின் பழங்களில் கூடுதல் அல்கலாய்டுகள் காணப்படுகின்றன. இத்தாவரத்திலிருந்து பெறப்படும் காய்களில் இருந்து உருவாக்கப்படும் தூள் சிகையை அலசவும் கழுவவும் பயன்பட்டுவருகிறது. ஆகையால் இதைச் சிகைக்காய்த் தூள் என அழைக்கிறோம். அதன் சிறப்பாலேயே இது சிகைக்காய்ச் செடி என அழைக்கப்படுகிறது.[2]

”சிகைக்காய்” = சிகை + காய்; சிகை - மயிர் (அ) முடி; காய் - பழத்தின் இளம்பருவம். முடிக்காணக் காய் என்றுப் பொருள். இதையே ஆங்கிலத்தில் “ஃப்ரூட் ஃபார் ஏர்” என விளிக்கின்றனர். இதை இந்தியா மற்றும் பண்டையத் தமிழ் மரபில் பல நூற்றாண்டுகளாக இயற்கை முடிப்பராமரிப்பாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் [3].

பண்புகள்[தொகு]

இது இந்தியாவில் காணப்படும் ஒருப் பொதுவானத் தாவரமாகும். இது ஒருக் கொடித் தாவரமாகும். இது ஏறு/பற்றுக் கொடி வகையைச் சார்ந்ததாகும். இவை புதர் போன்று வளரும் தன்மையது. இதன் இலை இரட்டைச்சிறகிலை யமைப்பையும், பூ மஞ்சள் நிறத்திலும் கோளகவடிவிலும் காணப்படும். காய் பழுப்பு வண்ணத்திலும், காய்ந்த நிலையில் சுருக்கம் மற்றும் துண்டிட்டதுப் போலவும் காட்சியளிக்கும். இதன் காய்களில் 6-10 விதைகள் காணப்படும்.

சிறப்புகள்[தொகு]

 • இச்செடியின் சிறப்பே இதன் காய்களால் என்றுச் சொன்னால் மிகையல்ல. இதன் காய்களைப் பொடித்து பெறப்படும் தூளைப் பல நூற்றாண்டுகளாக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன் படுத்தி வந்துள்ளனர்.
 • பெரும்பாலான செயற்கை முடிப்பராமரிப்புப் பொருட்களில் இவை கலக்கப்படுகின்றன.
 • இதற்கு பூஞ்சான் எதிர்ப்பு பண்பு, சரும மற்றும் தோல் நோய்களுக்குச் சிறப்பான மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறது. மலமிளக்கியாகவும்  ( மலம் + இளக்கி  =  இளகச்செய்யும்)  இருமல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தவல்லது [4]
 • இதன் மரப்பட்டைகளில் இருந்து சேப்போனின் என்னும் பொருள் பிரித்து எடுக்கப் படுகிறது. இதன் இலைகளில் டானின், அமினோக் காடிகள் மற்றும் புரதங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் இலைகளில் புளிமத்தன்மைக் கூடுதலாகக் காணப்படுவதால் இதை சட்டினி தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்[5].
 • இதன் காய்களில் இருந்து உருவாக்கப்படும் பொடியில் உள்ள அமில மற்றும் கார நெறித்தன்மை முடியின் பாதுகாப்பிற்கும் அதனில் உள்ள நுரைக்கும் தன்மை மயிரைச் சுத்தம் செய்யப்பயன்படுகிறது [6].

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Acacia concinna information from NPGS/GRIN". www.ars-grin.gov. 2011-06-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-03-13 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 2. Natarajan V, Natarajan S, 20009, Antidermatophytic activity of Acacia concinna, Global Journal of Pharmacology
 3. http://www.herbal-hair-shampoo.com/shikakai-acacia-concinna.php
 4. Wuthi-udomlert M, Vallisuta O, 2011, In vitro effectiveness of Acacia concinna extract against Dermatophytic pathogens
 5. Gupta & Nigam, Planta med, 1970-71,19,55 http://www.sbepl.com/acacia-concinna-shikakai.html பரணிடப்பட்டது 2004-08-13 at the வந்தவழி இயந்திரம்
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-10-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-18 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகைக்காய்ச்_செடி&oldid=3553797" இருந்து மீள்விக்கப்பட்டது