சிகெரு இசிபா
மேதகு சிகெரு இசிபா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
石破 茂 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2024ஆம் ஆண்டில் இசிபா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
65ஆவது ஜப்பானிய பிரதம அமைச்சர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 1 அக்டோபர் 2024 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சியாளர் | நருஹித்தோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | புமியோ கிசிடா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஜப்பானிய தாராளவாத சனநாயகக் கட்சி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 2024 தாராளவாத சனநாயகக் கட்சியின் தலைவர் தேர்தல் 2024 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணை அதிபர் | யோசிகிதே சூகா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | ஃபுயுமியோ கிசிடா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 8 சூலை 1986 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | பல்-உறுப்பினர் மாவட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தொகுதி |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெரும்பான்மை | 85,456 (68.2%) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 4 பெப்ரவரி 1957 சியோடா, தோக்கியோ, ஜப்பான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | தாராளவாத சனநாயகக் கட்சி (1986–1993; 1997–தற்போது வரை) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிற அரசியல் தொடர்புகள் | நிப்பான் கைகி[A] ஜப்பான் புனரமைப்புக் கட்சி (1993–1994) புதிய எல்லைக் கட்சி (1994–1996) சுயேச்சை (1996–1997) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவர் | யோசிகோ இசிபா (தி. 1983) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | 2 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெற்றோர் | 日本語 (ja) (தந்தை) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கல்வி | கெய்யோ உயர்நிலைப் பள்ளி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னாள் கல்லூரி | கெய்யோ பல்கலைக்கழவம், (இளங்கலைச் சட்டம்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கையெழுத்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இணையத்தளம் | Official website | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
A. ^ நிப்பான் கைகி என்பது ஒரு அரசியல் கட்சியல்ல. ஆனால், அது ஒரு அரசு சாரா நிறுவனம் ஆகும். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சிகெரு இசிபா (Shigeru Ishiba, பிறப்பு - பெப்ரவரி 4,1957) ஜப்பானின் 65-ஆவது பிரதமராகவும், 2024 முதல் தாராளவாத சனநாயகக் கட்சியின் (LDP) தலைவராகவும் பணியாற்றிய ஜப்பானிய அரசியல்வாதி ஆவார். 1986 முதல் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக இருந்த இவர், 2007 முதல் 2008 வரை பாதுகாப்பு அமைச்சராகவும், 2008 முதல் 2009 வரை விவசாயம், வனத்துறை மற்றும் மீன்வள அமைச்சராகவும், 2012 முதல் 2014 வரை கட்சியின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இசிபா ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தார், இவரது தந்தை ஜிரோ இசிபா, 1958 முதல் 1974 வரை டோட்டோரி மாகாணத்தின் ஆளுநராகப் பணியாற்றியவர், பின்னர் உள்துறை அமைச்சரானார். கீயோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரசியலில் நுழைவதற்கு முன்பு ஒரு வங்கியில் பணிபுரிந்தார். இசிபா 1986 பொதுத் தேர்தலில் தனது 29வது வயதில் தாராளவாத சனநாயகக் கட்சியின் உறுப்பினராக பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினராக, விவசாயக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் நிபுணத்துவம் பெற்றவர் இசிபா. இவர் கியிச்சி மியாசாவா பிரதம மந்திரி பதவியின் கீழ் விவசாயத்திற்கான நாடாளுமன்றத் துணை அமைச்சராகப் பணியாற்றினார், ஆனால் 1993-ஆம் ஆண்டில் தாராளவாத சனநாயகக் கட்சியை விட்டு வெளியேறி ஜப்பான் புனரமைப்புக் கட்சியில் சேர்ந்தார். பல கட்சிகள் வழியாக மாறி 1997-ஆம் ஆண்டில் தாராளவாத ஜனநாயக் கட்சிக்குத் திரும்பிய பிறகு, இசிபா பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தார், இதில் ஜுனிசிரோ கொய்ஜுமியின் பிரதம அமைச்சர் பதவியின் கீழ் பாதுகாப்பு முகமையின் இயக்குநர் தலைவர், யசுவோ புகுடா பிரதம மந்திரி பதவியின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் டாரோ அசோ பிரதம அமைச்சர் பதவிக்காலத்தில் விவசாயம், வனவியல் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பதவிகள் ஆகியவை இவர் வகித்த பதவிகள் ஆகும்.
பல முறை கட்சித் தலைமைக்கு போட்டியிட்ட இசிபா, தாராளவாத ஜனநாயக் கட்சிக்குள் ஒரு முக்கிய நபராக ஆனார். 2008 ஆம் ஆண்டில் இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார், குறிப்பாக 2012 மற்றும் 2018 தேர்தல்களில் சின்சோ அபேவிற்கு எதிராக இருந்தார். தாராளவாத சனநாயகக் கட்சி குறித்து இவர் விமர்சித்த போதிலும், தலைமைத்துவத்தை நோக்கமாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டில் தனது சொந்த பிரிவான சுய்கெட்சுகாயை நிறுவினார். அபே பதவி விலகிய பிறகு, 2020 ஆம் ஆண்டில் ஆண்டில் இசிபா போட்டியிட்டார், ஆனால் யோசிகிதே சூகாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 2021 தேர்தலில் போட்டியிட இசிபா மறுத்தார், அதில் புமியோ கிசிடா வெற்றி பெற்றார். கிசிடா 2024 இல் பதவி விலகுவதாக அறிவித்த பின்னர், இசிபா ஐந்தாவது மற்றும் இறுதி முறையாக தாராளவாத சனநாயகக் கட்சித் தேர்தலில் போட்டியிட்டார், அங்கு வஇர் இரண்டாவது சுற்று முடிவில் சனே தகைச்சியைத் தோற்கடித்தார், புதிய கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் நியமிக்கப்பட்டார், மேலும், 1 அக்டோபர் 2024 முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
தனது கட்சியை விமர்சிக்க இவர் தயாராக இருந்ததாலும், சமூகப் பிரச்சினைகளில் ஒப்பீட்டளவில் தாராளவாத நிலைப்பாடுகள் காரணமாகவும் இசிபா ஒரு அரசியல் ஆர்வலராக நற்பெயரை வளர்த்துக் கொண்டார். 1993-ஆம் ஆண்டில் மியாசாவா அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இவர் ஆதரித்தார் மற்றும் அபேவை அவரது இரண்டாவது ஆட்சிக்கலாம் முழுவதும் விமர்சித்தார். இரு பிரதமர்களின் அரசாங்கங்களிலும் பணியாற்றிய போதிலும் அவர்களை இவர் விமர்சிக்கத் தயங்கியதில்லை.[2]
தொடக்க கால வாழ்க்கை
[தொகு]இசிபா 4 பிப்ரவரி 1957 அன்று டோக்கியோ சியோடா வார்டில் பிறந்தார். இவரது பதிவு செய்யப்பட்ட வசிப்பிடம் அவரது தந்தையின் சொந்த ஊரான டோட்டோரி மாகாணத்தின் யாசூ மாவட்டத்தில் இருந்தது. இவரது தந்தை ஜிரோ இசிபா ஒரு அரசாங்க அலுவலராக இருந்தார், பின்னர் கட்டுமானத் துறை துணை அமைச்சராகப் பணியாற்றினார். இவரது தாயார் ஒரு ஆசிரியரும் கிறித்தவ அமைச்சர் மிச்சிடோமோ கனமோரியின் பேத்தி ஆவார்.[3][4]
ஜிரோ இசிபா 1958- ஆம் ஆண்டில் டோட்டோரி மாகாணத்தின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார், எனவே இவரின் குடும்பம் டோட்டோரி இசிபாவுக்கு குடிபெயர்ந்தது டோக்கியோவில் வாழ்ந்ததாக நினைவில்லை. ஜிரோ இசிபா 1974 வரை ஆளுநராகப் பணியாற்றினார், பின்னர் கவுன்சிலர்கள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஜென்கோ சுசுகி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[5]
சிகெரு இசிபா வளர்ந்து டோட்டோரி மாகாணத்தில் உள்ள பள்ளியில் பயின்றார். டோட்டோரி பல்கலைக்கழக ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, டோக்கியோவில் உள்ள கியோ பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கச் சென்று கியோ சீனியர் உயர்நிலைப் பள்ளியில் சேர சென்றார். 1979 இல் பட்டம் பெற்ற பிறகு, அவர் மிட்சுய் வங்கியில் பணியாற்றத் தொடங்கினார்.[6][7] இவரது தந்தை 1981-ஆம் ஆண்டில் இறந்தார். முன்னாள் பிரதமர் ககுயி தனகா, அவரது தந்தையின் நண்பராக இருந்தார், இறுதிச் சடங்குக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். தனது தந்தையின் பாரம்பரியத்தைத் தொடர ஒரு அரசியல்வாதியாக மாற இசிபாவை தனகா ஊக்குவித்தார்.[8][9]
தொடக்க கால அரசியல் வாழ்க்கை (1986–2024)
[தொகு]1983-ஆம் ஆண்டில் வங்கியை விட்டு வெளியேறிய இசிபா, தாராளவாத சனநாயகக் கட்சியின் ககுயி தனகாவின் பிரிவான தர்ஸ்டே கிளப்பின் செயலகத்தில் பணியாற்றத் தொடங்கினார். சூலை 1986 தேர்தலில் இசிபா டோட்டோரி அட்-லார்ஜ் மாவட்டத்தில் தாராளவாத சனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 29 வயதில், இவர் அந்த நேரத்தில் சபையின் இளைய உறுப்பினராக இருந்தார்.[10]
ஒரு இளைய பாராளுமன்ற உறுப்பினராக, இசிபா விவசாயக் கொள்கைகளில் தனிச்சிறப்பு வாய்ந்தவராக இருந்தார். 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற வளைகுடாப் போர் மற்றும் 1992 ஆம் ஆண்டில் மேற்கொண்ட வட கொரியப் பயணம் இவரின் ஆர்வத்தைப் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளின் பால் ஈர்த்தது. இவர் 1993 ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து வெளியேறி ஜப்பான் புனரமைப்புக் கட்சியில் சேர்ந்ததற்கு முன்னதாக, கிய்ச்சி மியாசாவாவின் அமைச்சரவையில் விவசாயத் துறை துணை அமைச்சராக இருந்தார். ஜப்பான் புனரமைப்புக் கட்சியான வேறு பல கட்சிகளுடன் இணைந்த போது இவர் புதிய எல்லைக் கட்சியின் பகுதியாக இருந்தார், ஆனால், ஒசாவா மற்றும் ஒசாவா சாராத உட்கட்சிகளிடையே தொடர்ந்த போராட்டங்களால் மனத்தெளிவு பெற்று 1996 ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து விலகினார். பின்னர், அதை் தொடர்ந்த ஆண்டில் இவர் தாராளவாத சனநாயகக் கட்சியில் மீண்டும் இணைந்தார்.[11]
சூலை 2000 இல் மோரி அமைச்சரவையின் கீழ் விவசாயத்திற்கான நாடாளுமன்றத் துணை அமைச்சராக இசிபா மீண்டும் நியமிக்கப்பட்டார், ஆனால் திசம்பரில் பாதுகாப்பு அமைப்பின் துணை இயக்குநர் ஜெனரல் பதவிக்கு மாற்றப்பட்டார். கொய்சுமி அமைச்சரவை நியமிக்கப்பட்டபோது இவர் மாற்றப்பட்டார், ஆனால் கொய்ஸுமி செப்டம்பர் 2002 இல் பாதுகாப்பு அமைச்சரவையை மாற்றியமைத்தபோது இசிபா பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் ஜெனரலாக ஆனார், முதல் முறையாக அமைச்சரவையில் நுழைந்தார். அவர் செப்டம்பர் 2004 வரை பதவியில் இருந்தார். [12]
2007 செப்டம்பர் 26 அன்று பிரதம அமைச்சர் யாசுவோ ஃபுக்குடா அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இசிபா நியமிக்கப்பட்டார், 2008 ஆகத்து 1 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.[13] நோபுடாகா மச்சிமுராவிற்குப் பிறகு அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்கள் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த ஃபுகுடா அமைச்சரவையில் இரண்டாவது நபர் இசிபா ஆவார்.[14] ஒரு அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களின் கற்பனையான தோற்றம் குறித்து பதிலளித்ததற்கு, இஷிபா, அத்தகைய சம்பவம் ஒரு வான்வெளி மீறலாக இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பது கடினம் என்று கூறினார், ஒரு அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்கள் தொழில்நுட்ப ரீதியாக ஒரு வெளிநாட்டிலிருந்து வந்த விமானம் அல்ல என்று கூறினார்.[15] அதே நேர்காணலில், காட்ஜில்லா தோற்றத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஜப்பான் தற்காப்புப் படைகளை அணிதிரட்டுவதாக அவர் நகைச்சுவையாகக் கூறினார்.[16]
ஃபுக்குடா பதவி விலகியதைத் தொடர்ந்து, இசிபா தாராளவாத சனநாயகக் கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளராக நின்றார். செப்டம்பர் 22,2008 அன்று நடைபெற்ற தலைமைத் தேர்தலில், டாரோ அசோ 527 வாக்குகளில் 351 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[17] 24 செப்டம்பர் 2008 அன்று நியமிக்கப்பட்ட அசோவின் அமைச்சரவையில், இசிபா விவசாயம், வனவியல் மற்றும் மீன்வள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[18] 2009 டோக்கியோ பெருநகர சட்டமன்றத் தேர்தலில் தாராளவாத சனநாயகக் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அசோ பதவி விலக வேண்டுமாறு அழைப்பு விடுத்தார்.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் இஷிபா தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார், இருப்பினும் இத்தேர்தல் தாராளவாத சனநாயகக் கட்சிக்கு (LDP) ஒரு பெரும் தோல்வியாக அமைந்தது. அசோவுக்குப் பதிலாக கட்சித் தலைவராக சடகாசு தனிகாகி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், இசிபா கொள்கை ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார், இது கட்சியின் உயர் பதவிகளில் ஒன்றாகும். இவ்வாறாக, கட்சி எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் இசிபா கட்சியின் மிகவும் முக்கியமான நபர்களில் ஒருவராக இருந்தார்.[19] 2011 செப்டம்பரில் தானிகாக்கி கட்சித் தலைமையை மாற்றியபோது இவர் நீக்கப்பட்டார்.[20]
செப்டம்பர் 2012 இல், தாராளவாத சனநாயகக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது, இசிபா மீண்டும் கட்சியின் தலைவர் பதவிக்கு நின்று சின்சோ அபேயால் தோற்கடிக்கப்பட்டார். இவர் 27 செப்டம்பர் 2012 அன்று பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டார்.[21] 2012 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் அபே அவரை மீண்டும் இந்த பதவிக்கு நியமித்தார், இத்தேர்தலின் வழியாக கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது.[22]
தனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இரகசிய சட்ட முன்வரைவிற்கு எதிரான அமைதியான பொது ஆர்ப்பாட்டங்களை "பயங்கரவாத செயல்களுடன்" ஒப்பிட்ட 2013 நவம்பரில் இவர் அளித்த அறிக்கைக்காக இசிபா கணிசமான விமர்சனங்களை எதிர்கொண்டார்.[23] பின்னர் இவர் தனது கருத்தைத் திரும்பப் பெற்றார். .[24]
செப்டம்பர் 2014 அமைச்சரவை மறுசீரமைப்பில், அபே இசிபாவை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, மக்கள் தொகை வீழ்ச்சியை சமாளிப்பதற்கும் உள்ளூர் பொருளாதாரத்தை உயிர்ப்பிப்பதற்கும் அமைச்சராக புதிதாக உருவாக்கப்பட்ட அலுவலகத்திற்கு நியமித்தார். அரசாங்கத்தின் வரவிருக்கும் பாதுகாப்புச் சட்டத்திற்கு பொறுப்பான அமைச்சரவைப் பதவியை வழங்க அவர் மறுத்ததாக தெரிவிக்கப்பட்டது.[25]
இடதுசாரி சனநாயகக் கட்சியில் உட்கட்சிப்பூசல் வாதத்தைக் கடுமையாக விமர்சித்த போதிலும், தற்போதைய பிரதம மந்திரி சின்சோ அபேக்குப் பிறகு வரும் நோக்கத்துடன், 2015 செப்டம்பர் 28 அன்று இசிபா தனது சொந்தக் குழுவான சுய்கெட்சுகாயைத் தொடங்கினார். இசிபாவைத் தவிர 19 உறுப்பினர்களைக் கொண்ட இது, கட்சியின் தலைமைக்கு நியமனம் செய்யத் தேவையான 20 வாக்குகளில் ஒரு உறுப்பினர் குறைவாக இருந்தது.[26]
ஏப்ரல் 2016 மறுசீரமைப்பில் விவசாய அமைச்சகத்தை நிராகரித்த இசிபா அமைச்சரவையில் இருந்து விலகினார்.[27] 2018- ஆம் ஆண்டில் கட்சியின் தலைவர் தேர்தலில் அபேவுக்கு இசிபா போட்டியாக இருந்தார்.
2020 ஆம் ஆண்டில், சின்சோ அபே பதவி விலகியதைத் தொடர்ந்து, இசிபா தாராளவாத சனநாயகக் கட்சியின் தலைமைக்குப் போட்டியிட்டு, யோசிகிதே சூகாவிடம் தோல்வியடைந்து ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[28] 2021 இல் கட்சி தலைமைத் தேர்தலில் போட்டியிட இசிபா மறுத்துவிட்டார், பதிலாக டாரோ கோனோவை ஆதரித்தார்.[29]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Japan's Ishiba confirmed as prime minister, set to unveil cabinet". Reuters. 1 October 2024. Archived from the original on 1 October 2024. பார்க்கப்பட்ட நாள் 1 October 2024.
- ↑ "Why is Shigeru Ishiba so unpopular among his LDP peers?". 24 September 2024 இம் மூலத்தில் இருந்து 28 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240928161841/https://www.japantimes.co.jp/news/2024/09/24/japan/politics/ishiba-shigeru-ldp-candidate-diet-hates-local-chapters-love/.
- ↑ Tokugawa, Iehiro (24 April 2014). "政権与党のNo.2に聞く「自民党幹事長の本音」--石破茂氏(自民党幹事長)×徳川家広氏(政治経済評論家)". Keizaikai. Archived from the original on 22 June 2014. பார்க்கப்பட்ட நாள் 10 December 2014.
- ↑ Harefa, Surya (2023). A Free Church in a Free State: The Possibilities of Abraham Kuyper's Ecclesiology for Japanese Evangelical Christians. Carlisle: Langham Publishing. pp. 57–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781839738883. Archived from the original on 15 August 2024. பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.
- ↑ "石破二朗 – 鳥取県立鳥取西高等学校デジタルコレクション". Archived from the original on 29 May 2024. பார்க்கப்பட்ட நாள் 27 September 2024.
- ↑ Saika, Nobuyuki (9 September 2020). "【自民党総裁選】菅氏、岸田氏、石破氏3人のキリスト教との関わり – クリプレ". Christian Press. Archived from the original on 23 September 2020. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
- ↑ "自民党新総裁に石破茂氏 4代目クリスチャン". Christian Shimbun. 27 September 2024. Archived from the original on 29 September 2024. பார்க்கப்பட்ட நாள் 29 September 2024.
- ↑ "直言家「傍流」から悲願…石破茂新総裁 こんな人". The Yomiuri Shimbun (Tokyo). 28 September 2024 இம் மூலத்தில் இருந்து 28 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240928161840/https://www.yomiuri.co.jp/politics/20240927-OYT1T50162/.
- ↑ Kobayashi, Yoshiya (17 May 2019). "「ワシが葬儀委員長だ」 石破茂氏を参らせた父親の田中派葬". zakzak. Sankei Digital. Archived from the original on 28 September 2024. பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
- ↑ "農林水産総括政務次官. 石破 茂 プロフィール". Prime Minister's Office of Japan (in ஜப்பானியம்). Archived from the original on 4 March 2022. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
- ↑ Ueda, Mao, ed. (3 March 2018). "ブレない、群れない、政治家・石破茂の人生". News Picks. Uzabase. Archived from the original on 28 September 2024. பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
- ↑ "国会議員情報:石破 茂". Jiji.com (in Japanese). Jiji Press Ltd. Archived from the original on 24 August 2024. பார்க்கப்பட்ட நாள் 24 August 2024.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Fukuda Cabinet launched / Changes minimized to reduce impact on Diet business". 26 September 2007. Archived from the original on 2 March 2008.
- ↑ "Japan's defense minister braces for aliens". inquirer.net. 20 December 2007. Archived from the original on 26 August 2010.
- ↑ "Ishiba, stubborn ex-defense minister, wins LDP head in 5th bid". Kyodo News. 29 September 2024. Archived from the original on 29 September 2024. பார்க்கப்பட்ட நாள் 29 September 2024.
- ↑ "Japan ready to tackle Godzilla". UPI. 22 December 2007. Archived from the original on 28 October 2020. பார்க்கப்பட்ட நாள் 29 September 2024.
- ↑ "Aso elected LDP head"". 22 September 2008. Archived from the original on 25 September 2008.
- ↑ "Aso elected premier / Announces Cabinet lineup himself; poll likely on Nov. 2". 25 September 2008. Archived from the original on 28 September 2008.
- ↑ "自民政調会長に石破氏 党三役、県選出で初". Net Nihonkai (in Japanese). Nihonkai Telecasting. 30 September 2009. Archived from the original on 1 October 2009.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "自民、対決路線へ足場固め". The Nikkei. 1 October 2011 இம் மூலத்தில் இருந்து 30 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240930044908/https://www.nikkei.com/article/DGKDASFS3004V_Q1A930C1PE8000/.
- ↑ "Ishiba to be LDP's new secretary general". 28 September 2012. Archived from the original on 13 November 2012.
- ↑ "Japan's Abe Appoints Ex-Rival as His No. 2". 28 September 2012. Archived from the original on 14 March 2016.
- ↑ "Ishiba to be LDP's new secretary general". 1 December 2013. Archived from the original on 24 September 2015.
- ↑ "Ishiba softens criticism of bill protesters". 2 December 2013. Archived from the original on 3 December 2013.
- ↑ "Abe keeps core intact in Cabinet shake-up". The Japan Times. 3 September 2014. Archived from the original on 4 September 2014. பார்க்கப்பட்ட நாள் 25 December 2015.
- ↑ "Senior LDP member Ishiba forms faction, aiming to succeed Abe". 28 September 2015. Archived from the original on 8 October 2015.
- ↑ 鹿吉, 大基 (3 October 2016). "安倍内閣に反旗を翻した石破茂、「次の総理」を目指す覚悟を決めた". President Online. President Inc. Archived from the original on 7 September 2024. பார்க்கப்பட்ட நாள் 8 September 2024.
- ↑ "Yoshihide Suga wins landslide in Japanese leadership contest". Financial Times. 14 September 2020 இம் மூலத்தில் இருந்து 15 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200915085047/https://www.ft.com/content/0d74687f-dc51-49af-849c-0d8bdf062d5b.
- ↑ "LDP's Shigeru Ishiba formally throws support behind PM contender Taro Kono" (in அமெரிக்க ஆங்கிலம்). 15 September 2021. Archived from the original on 15 September 2021. பார்க்கப்பட்ட நாள் 7 August 2022.