சிகுர்ஹல்லா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிகுர்ஹல்லா ஆறு (Sigurhalla river) என்பது நீலகிரி மாவட்டத்திலுள்ள மலைகள் வழியே ஓடும் ஆறாகும். இந்த ஆறு சுமார் 50 கி.மீ தொலைவுக்கு பாய்கிறது. இந்த ஆறானது கல்லட்டி பள்ளத்தாக்கின் சாண்டிநல்லா ஆற்றுப்பகுதியில் தோன்றுகிறது. அங்கிருந்து நீலகிரி வடக்கு பீடபூமியின் வடிகால் பரப்பில் ஓடி, பலஹட்டிக்கு வந்து மாயாற்றில் கலக்கிறது. இந்த ஆறாறது முதுமலையை ஒட்டிய வறண்ட பகுதிகளில் பாய்வதால் முக்கியத்துவம் வாய்ந்த ஆறாக உள்ளது. இந்த ஆறு பாயும் பகுதியில் யானை, புலி, காட்டு மாடு, கழுதைப்புலி போன்ற காட்டுயிர்கள் உள்ளன. இந்த ஆற்றில் முதலை, நீர்நாய் போன்றவற்றிற்கு உறைவிடமாக இருந்தன. இதன் அருகில் உள்ள கிராமங்களுக்கு ஒரு முக்கிய நீராதாரமாக இருந்தது. இந்த ஆற்றின் இரு புரறங்களிலும் வெள்ளை மருது, ஆல், அரசமரம், மூங்கில் உள்ளிட்ட தாவர சோலைகள் காணப்பட்டன. இந்நிலையில் 1965 க்குப் பிறகு பைக்காரா நீர் மின் நிலையத்தின் ஒரு பகுதியாக சாண்டிநல்லா ஆற்றைத் தடுத்து ஒரு அணை கட்டியதால், இந்த சிகுர்ஹல்லா ஆற்றின் நீரோட்டம் தடைபட்டது. பேராறாக ஓடிய இந்த ஆறு ஓடையாக சுருங்கியது. இதன் தொடர்ச்சியாக வாற்றாத இந்த ஆறானது 1968 கோடையில் வற்றியது. இதனால் இதில் இருந்த மீன்கள் எல்லாம் இறந்தன. யானைகள் போன்ற காட்டுயிர்கள் நீரின்றி தவித்தன. இந்த ஆற்றின் வரலாறு பற்றியும் இது நீர்வரத்தின்றி வரண்டது குறித்தும் ஈ. ஆர் சி. டேவிதர் என்னும் சூழலியல் எழுத்தாளர் 'cheetal walk' என்ற நூலில் பதிவு செய்தார். இதைப் படித்த தமிழ்நாடு வனத்துறை கூடுதல் வழக்கறிஞராக இருந்த சந்தானராமன் என்பவர். இது குறித்து குறித்து பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வுகளையும் திரட்டி 2017 ஆம் ஆண்டு தமிழக அரசின் முதன்மைச் செயலாளருக்கு அன்ப்பிய விண்ணப்பத்தில், சிகுர்ஹல்லா ஆற்றின் நீரோட்டத்தை பராமரிக்க காமராஜ் சாகர் அணையில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நீரை ஆண்டுதோறும் சனவரி முதல் மே மாதம்வரை திறந்துவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.[1] இதையடுத்து அணையின் மேல்கொடமுண்ட் பகுதியில் இருந்து ஆற்றில் நாள்தோறும் இரண்டாயிரம் கன அடி நீரை திறந்துவிட தமிழக தலைமைச் செயலாளர் பரிந்துரைத்தார். இதன் காரணமாக அவ்வாறே நீர் திறக்கப்பட்டு ஆற்றின் நீரோட்டம் பாதுகாக்கப்பட்டது. இதனால் காட்டுயிர்களுக்கான நீரும் அறைறை ஒட்டிய தாவரங்களும் புதுவாழ்வு பெற்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகுர்ஹல்லா_ஆறு&oldid=2894608" இலிருந்து மீள்விக்கப்பட்டது