சிகியாகி இனோகரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகியாகி இனோகரா

சிகியாகி இனோகரா ( Hinohara Shigeaki 4 அக்டொபர் 1911–18 சூலை 2017) என்பவர் சப்பானிய மருத்துவர். டோக்கியோவில் உள்ள செயின்ட் லூக் பன்னாட்டு மருத்துவமனை வளர்ச்சியில் 1941 முதல் ஈடுபட்டவர். இந்த மருத்துவ மனையின் மதிப்புறு இயக்குநர் என்னும் பதவியில் 1990 முதல் இருந்தார். இரண்டாம் உலகப்போரில் டோக்கியோவில் அமெரிக்கக் குண்டு வீச்சின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

மருத்துவர் சிகியாகி இனோகரா மேற்கு சப்பானில் யமகுச்சி பிரிபக்சர் என்னும் ஊரில் பிறந்தார். குயோடோ இம்பிரியல் மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். அட்லாண்டா எமோரி பல்கலைக் கழகத்தில் ஓராண்டு பயின்றார். 105 அகவை வரை உடல் நலத்துடன் வாழ்ந்து மறைந்தார்.

மிகைபட உணவு சாப்பிடுதல் கூடாது என்றும் ஆண்டுதோறும் உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்றும் படிக்கட்டுகளில் ஏறும் வழக்கத்தை விடாமல் பின்பற்றவேண்டும் என்றும் இசையைக் கேட்டு இன்புறவேண்டும் என்றும் நகைச்சுவையை அனுபவிக்க வேண்டும் என்றும் முதுமை அடைந்தபோதும் வெறுமனே ஒய்ந்து போகாமல் முடிந்தவரை பணிகள் செய்யவேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுரைகள் சொல்லி வந்தார்.

1970 இல் சப்பானிய செம்படையைச் சேர்ந்த அச்சுறுத்தல்வாதிகள் சிகியாகி இனோகரா பயணம் செய்த வானுர்தியைக் கடத்தி இவரை பயணக் கைதியாக சிறை பிடித்தார்கள். 1995 இல் சுரங்கப் பாதை நச்சுக் காற்றுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 640 பேருக்கு சிகிச்சை அளித்தார்.[3]

சப்பான் நாட்டில் மக்கள் ஆண்டுதோறும் மருத்துவ சோதனை செய்து கொள்ளும் வழக்கத்தை இவர் பரப்பச் செய்தார்.

'உடல் நலத்துடன் வாழ்வது எப்படி' என்னும் 2001 ஆம் ஆண்டில் இவர் எழுதி வெளியான நூல் 1.2 மில்லியன் படிகள் விற்பனை ஆனது.

2017 சூலை 18இல் தமது 105 ஆம் அகவையில் காலமானார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகியாகி_இனோகரா&oldid=3367222" இருந்து மீள்விக்கப்பட்டது