சிகிச்சை விளைவு
சிகிச்சை விளைவு (Therapeutic effect) எந்தவொரு சிகிச்சைக்குப் பிறகும் ஏற்படும் விளைவுகளைக் குறிக்கிறது. இதன் முடிவுகள் பயனுள்ளதாக அல்லது சாதகமானதாகக் கருதப்படுகின்றன. இந்த விளைவு எதிர்பார்க்கப்பட்டதாகவோ, எதிர்பாராததாகவோ அல்லது திட்டமிடப்படாத விளைவாகவோ இருந்தாலும் இவ்வரையரை பொருந்தும்.[1][2][3] மருந்து அல்லது சிகிச்சை கெட்ட விளைவுகளைத் தரும் அல்லது பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று எதிர்மறை நம்பிக்கையால், உண்மையில் உடல்நலம் பாதிக்கப்படும் நோசெபோ விளைவு உட்பட்ட பாதகமான விளைவு என்பது இதற்கு நேர்மாறானது. இவ்விளைவு தீங்கு விளைவிக்கும் அல்லது விரும்பத்தகாத விளைவுகளை விளைவிக்கும். சிகிச்சை விளைவு மற்றும் பாதகமான விளைவு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு, சூழ்நிலையின் தன்மை மற்றும் சிகிச்சையின் குறிக்கோள்கள் ஆகிய இரண்டையும் சார்ந்ததாகும். சிகிச்சை மற்றும் விரும்பத்தகாத பக்க விளைவுகளைப் பிரிக்கும் உள்ளார்ந்த வேறுபாடு எதுவும் இல்லை. இரண்டு விளைவுகளும் சிகிச்சை உத்தி அல்லது காரணிக்கு பதிலளிக்கும் விதமாக ஏற்படும் நடத்தை/உடலியல் மாற்றங்கள் ஆகும். [2]
சிகிச்சை வரம்பு
[தொகு]சிகிச்சையின் பயன்களை (விரும்பத்தக்கவை) அதிகபட்சமாக்கவும், பாதகமான விளைவுகளை (விரும்பத்தகாதவை) குறைந்தபட்சமாக்கவும், அச்சிகிச்சையைப் பல பரிமாணங்களில் கண்டறிந்து அளவிடுவது அவசியமாகும். குறிப்பாக, இலக்கு சார்ந்த மருந்துசார் சிகிச்சைகளின் சூழலில், விரும்பிய முடிவுகளை அடைவதற்குப் பல சிகிச்சை முறைகளின் ஒருங்கிணைப்பு பெரும்பாலும் தேவைப்படுகிறது.[4]
மருந்தியல் எடுத்துக்காட்டுகள்
[தொகு]2015 ஆம் ஆண்டின் ஒரு மதிப்பாய்வு ஆய்வில், கற்றாழை சிகிச்சை தொடர்பான பல நன்மைகளை வழங்குகிறது என்று கண்டறியப்பட்டது. இதில் ஆக்சிசனேற்ற எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், கட்டி எதிர்ப்பு, இரத்த சர்க்கரை குறைத்தல், கொழுப்பு அளவை குறைத்தல், காயம் ஆற்றுதல், மற்றும் நீரிழிவு நோய் எதிர்ப்பு ஆகிய விளைவுகள் அடங்கும்.[5]
அதேபோல், 2015 ஆம் ஆண்டில் வெளியான மற்றொரு மதிப்பாய்வு ஆய்வில், செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவும் புரோபயாட்டிக்கள் எரிச்சலூட்டும் குடலியல் கோளாறு சிகிச்சையில் பயனுள்ளதாக இருந்தன என்று கண்டறியப்பட்டது.[6]
மீண்டும் 2015 ஆம் ஆண்டில் வெளியான இன்னொரு ஆய்வில், தன்னைத்தானே தாக்கும் நோயான மயாசுதீனியா கிராவிசு சிகிச்சையில் இரிடுக்சிமாப்பு மருந்து சிகிச்சை பயன் அளிப்பதாக கண்டறியப்பட்டது.[7]
2016 ஆம் ஆண்டின் ஒரு மதிப்பாய்வு ஆய்வில், மருந்துத் தரநிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து சேர்மங்கள் மனச்சோர்வு கொண்ட நோயாளிகளில் துணைச் சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டபோது சிகிச்சை பலன் அளித்தன என்று தெரியவந்தது.[8]
மேலும் 2016 ஆம் ஆண்டில் வெளியான ஓர் ஆய்வில், தரவுகள் குறைவாக இருந்தபோதிலும், போடுலினம் நச்சு வகை ஏ மூவட்டு நரம்பு வலி தாக்குதல்களுக்கு சிகிச்சையாக பயனளிக்கக்கூடும் என்றும் கண்டறியப்பட்டது.[9]
மருந்தற்ற சிகிச்சை முறைகளுக்கான எடுத்துக்காட்டுகள்
[தொகு]2014 ஆம் ஆண்டின் ஒரு மதிப்பாய்வு ஆய்வில், தண்டு செல்கள் சிகிச்சை காயத்தால் பாதிக்கப்பட்ட உறுப்பு மீளுருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க சிகிச்சை நன்மையை வழங்குகிறது என்றும், அது கட்டி வளர்ச்சியை தடுக்கக்கூடும் என்றும் கண்டறியப்பட்டது.[10]
2015 ஆம் ஆண்டில் வெளியான ஒரு மதிப்பாய்வு ஆய்வில், மனக்குவிப்பு அடிப்படையிலான தலையீடுகள் மனநோய்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதில் சிகிச்சை பலன் அளித்தன என்று தெரியவந்தது.[11]
அதே 2015 ஆம் ஆண்டில் வெளியான மற்றொரு ஆய்வில், குறைந்த அளவிலான லேசர் சிகிச்சை மூலம் கதிர்வீச்சு சிகிச்சை அளித்தபோது, ஆய்வக சூழலில் தண்டு செல்களின் பெருக்க விகிதம் அதிகரித்தது என்பது சிகிச்சை விளைவாக கண்டறியப்பட்டது.[12]
2017 ஆம் ஆண்டின் ஒரு மதிப்பாய்வு ஆய்வில், காற்றுப்பயிற்சி மற்றும் எதிர்ப்பு உடற்பயிற்சிகள் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் உடல் மற்றும் மன நலனில் சிகிச்சை பலனை அளித்தன என்று காட்டப்பட்டது.[13]
மேலும் 2017 ஆம் ஆண்டில் வெளியான ஓர் ஆய்வில், குறைந்த தீவிரத்தன்மையுள்ள வெளிப்புற அதிர்ச்சி அலை சிகிச்சை ஆண்மை குறைபாடு சிகிச்சையில் பயனுள்ளதாக இருந்தது என்று கண்டறியப்பட்டது.[14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Definition of therapeutic". merriam-webster.com. Retrieved 18 July 2018.
- 1 2 Kramer, Thomas A. M. (2003). "Side Effects and Therapeutic Effects". MedGenMed 5 (1): 28. பப்மெட்:12827089. https://www.medscape.com/viewarticle/448250. பார்த்த நாள்: 18 July 2018.
- ↑ "Drug, pharmacology and therapeutic". pharmacorama.com. Archived from the original on 5 மே 2019. Retrieved 18 July 2018.
- ↑ Fitzgerald, Jonathan B; Schoeberl, Birgit; Nielsen, Ulrik B; Sorger, Peter K (2006). "Systems biology and combination therapy in the quest for clinical efficacy". Nature Chemical Biology 2 (9): 458–466. doi:10.1038/nchembio817. பன்னாட்டுத் தர தொடர் எண்:1552-4450. பப்மெட்:16921358.
- ↑ Radha, Maharjan H.; Laxmipriya, Nampoothiri P. (2015). "Evaluation of biological properties and clinical effectiveness of Aloe vera: A systematic review". Journal of Traditional and Complementary Medicine 5 (1): 21–26. doi:10.1016/j.jtcme.2014.10.006. பன்னாட்டுத் தர தொடர் எண்:2225-4110. பப்மெட்:26151005.
- ↑ Didari, Tina (2015). "Effectiveness of probiotics in irritable bowel syndrome: Updated systematic review with meta-analysis". World Journal of Gastroenterology 21 (10): 3072–3084. doi:10.3748/wjg.v21.i10.3072. பன்னாட்டுத் தர தொடர் எண்:1007-9327. பப்மெட்:25780308.
- ↑ Iorio, Raffaele; Damato, Valentina; Alboini, Paolo Emilio; Evoli, Amelia (12 October 2014). "Efficacy and safety of rituximab for myasthenia gravis: a systematic review and meta-analysis". Journal of Neurology 262 (5): 1115–1119. doi:10.1007/s00415-014-7532-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0340-5354. பப்மெட்:25308632.
- ↑ Sarris, Jerome; Murphy, Jenifer; Mischoulon, David; Papakostas, George I.; Fava, Maurizio; Berk, Michael; Ng, Chee H. (2016). "Adjunctive Nutraceuticals for Depression: A Systematic Review and Meta-Analyses". American Journal of Psychiatry 173 (6): 575–587. doi:10.1176/appi.ajp.2016.15091228. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-953X. பப்மெட்:27113121.
- ↑ Morra, Mostafa Ebraheem; Elgebaly, Ahmed; Elmaraezy, Ahmed; Khalil, Adham M.; Altibi, Ahmed M. A.; Vu, Tran Le-Huy; Mostafa, Mostafa Reda; Huy, Nguyen Tien et al. (5 July 2016). "Therapeutic efficacy and safety of Botulinum Toxin A Therapy in Trigeminal Neuralgia: a systematic review and meta-analysis of randomized controlled trials". The Journal of Headache and Pain 17 (1): 63. doi:10.1186/s10194-016-0651-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:1129-2369. பப்மெட்:27377706.
- ↑ Akyurekli, Celine; Le, Yevgeniya; Richardson, Richard B.; Fergusson, Dean; Tay, Jason; Allan, David S. (5 August 2014). "A Systematic Review of Preclinical Studies on the Therapeutic Potential of Mesenchymal Stromal Cell-Derived Microvesicles". Stem Cell Reviews and Reports 11 (1): 150–160. doi:10.1007/s12015-014-9545-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:1550-8943. பப்மெட்:25091427.
- ↑ Gu, Jenny; Strauss, Clara; Bond, Rod; Cavanagh, Kate (2015). "How do mindfulness-based cognitive therapy and mindfulness-based stress reduction improve mental health and wellbeing? A systematic review and meta-analysis of mediation studies". Clinical Psychology Review 37: 1–12. doi:10.1016/j.cpr.2015.01.006. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-7358. பப்மெட்:25689576.
- ↑ Ginani, Fernanda; Soares, Diego Moura; Barreto, Mardem Portela e Vasconcelos; Barboza, Carlos Augusto Galvão (13 March 2015). "Effect of low-level laser therapy on mesenchymal stem cell proliferation: a systematic review". Lasers in Medical Science 30 (8): 2189–2194. doi:10.1007/s10103-015-1730-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0268-8921. பப்மெட்:25764448.
- ↑ Fuller, Joel T; Hartland, Michael C; Maloney, Luke T; Davison, Kade (16 March 2018). "Therapeutic effects of aerobic and resistance exercises for cancer survivors: a systematic review of meta-analyses of clinical trials". British Journal of Sports Medicine 52 (20): bjsports–2017–098285. doi:10.1136/bjsports-2017-098285. பன்னாட்டுத் தர தொடர் எண்:0306-3674. பப்மெட்:29549149.
- ↑ Lu, Zhihua; Lin, Guiting; Reed-Maldonado, Amanda; Wang, Chunxi; Lee, Yung-Chin; Lue, Tom F. (2017). "Low-intensity Extracorporeal Shock Wave Treatment Improves Erectile Function: A Systematic Review and Meta-analysis". European Urology 71 (2): 223–233. doi:10.1016/j.eururo.2016.05.050. பன்னாட்டுத் தர தொடர் எண்:0302-2838. பப்மெட்:27321373.