சிகா தாண்டன்
The President Dr. A.P.J. Abdul Kalam presenting the 2005 Arjuna Award, to Ms. Shikha Tandon for Swimming, at a glittering function in New Delhi on 29 August 2006 | |
| தனிநபர் தகவல் | |
|---|---|
| பிறப்பு | 12 சனவரி 1985 பெங்களூர், கருநாடகம், இந்தியா |
| விளையாட்டு | |
| விளையாட்டு | நீச்சல் |
| நீச்சல்பாணிகள் | ஃபிரீஸ்டைல், மார்பு நீச்சல் |
| கல்லூரி அணி | ஜெயின் பல்கலைக்கழகம் |
சிகா தாண்டன் (Shikha Tandon) (பிறப்பு 20 சனவரி 1985) என்பவர் இந்தியாவின் தென்மாநிலமான கருநாடகாவின் தலைநகரான பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் இந்திய நீச்சல் வீராங்கனை ஆவார். தாண்டன் 146 தேசிய பதக்கங்கள், ஐந்து தங்கப் பதக்கங்கள் உட்பட சர்வதேச போட்டிகளில் 36 பதக்கங்களையும் வென்றுள்ளார்.[1] தற்போது, இவர் அமெரிக்காவின் ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை அறிவியல் குழுவில் உறுப்பினராக உள்ளார்.அமெரிக்காவின் ஊக்கமருந்து எதிரப்பு முகமை அறிவியல் முயற்சிகளுக்கு முக்கியமான வளங்கள், அறிக்கையிடல், திட்டங்களின் தினசரி செயல்பாடு, மேம்பாடு, பராமரிப்புக்கு உதவுகிறார்.[2]
தொழில்
[தொகு]தாண்டன் தனது 12 வயதில், ஒரு மாநிலக் கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டு, இரண்டு தேசிய நிகழ்வுகளில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெண்கலப் பதக்கத்தை வென்றார். தாண்டன் தனது 13 வயதில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், 16 வயதில் தனது முதல் உலக வாகையர் போட்டியிலும் போட்டியிட்டார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற 28வது ஜூனியர் தேசிய நீச்சல் வாகையர் போட்டி, தாண்டன் 200 மீ தனிநபர் மெட்லியில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தார்.[3]
2002 இல், புசானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நிகழ்வில் தாண்டன் 8 வது இடத்தைப் பிடித்தார்.
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற 57வது மூத்தோர் தேசிய நீச்சல் வாகையர் போட்டியில், தாண்டன் 26.61 வினாடிகளில் இந்திய மகளிர் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் சாதனையை முறியடித்தார்.[4] இவர் போட்டியில் ஐந்து தனிநபர் தங்கப் பதக்கங்களை வென்றார், மேலும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிறந்த நீச்சல் வீராங்கனையாக அறிவிக்கப்பட்டார்.[5]
2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில், தாண்டன் 50 மீ மற்றும் 100 மீ ஃப்ரீஸ்டைல் ஆகிய இரண்டிலும் போட்டியிட்டார் , ஒலிம்பிக் போட்டியில் இரண்டு தனித்தனி நிகழ்வுகளுக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீரர் இவரே.[1][6][7]
2005 ஆம் ஆண்டில், ஷிகா ஏழு தேசிய சாதனைகளைப் படைத்தார்,[8] மேலும் ஒரே நேரத்தில் இத்தனை சாதனைகளைப் படைத்த முதல் இந்தியப் பெண்மணி ஆனார். 2005 ஆம் ஆண்டில், அவருக்கு அருச்சுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2006 மெல்போர்ண் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், தாண்டன் 50 மீ பேக்ஸ்ட்ரோக் மற்றும் 50 மீ ஃப்ரீஸ்டைல் ஆகிய இரண்டிலும் அரையிறுதியை எட்டினார்.[9][10] அதே ஆண்டில், பாங்காக்கில் நடந்த உள்ளரங்க ஆசிய வயதுக் குழு நீச்சல் வாகையர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, குறுகிய தூரப் போட்டியில் சர்வதேசப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆனார். 2007 ஆம் ஆண்டில் தாண்டன் தனது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார், மேலும் அந்தப் பருவத்தின் பல போட்டிகளைத் தவறவிட்டார்.[11]
2009 ஆம் ஆண்டில், கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் இரட்டை முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, இவர் அமெரிக்காவின் ஊக்கமருந்து எதிரப்பு முகமையில் விண்ணப்பித்தார், மேலும் அமெரிக்கா]]வின் ஊக்கமருந்து எதிரப்பு முகமையில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்தியர் ஆனார்.[12]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவரது முன்மாதிரிகளில் ஜென்னி தாம்சன் மற்றும் இங்கே டி ப்ரூய்ன் ஆகியோர் அடங்குவர்.[13] தாண்டன் பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலைப் பள்ளியிலும், ஜெயின் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சிறீ பகவான் மகாவீர் ஜெயின் கல்லூரியிலும் பயின்றார்,[1] பின்னர் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பம் பயின்றார்.[1]
இவர் ஓஹியோவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் இரட்டை முதுகலைப் பட்டம் பெற்றார், தற்போது அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள அமெரிக்க ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தில் அறிவியல் திட்டத் தலைவராகப் பணிபுரிகிறார்.[14]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 Nandini Narayanan (6 July 2009), Who"s Who, India Today, archived from the original on 16 March 2012, retrieved 11 October 2010
- ↑ "Shikha Tandon - Science Program Lead | U.S. Anti-Doping Agency (USADA)". U.S. Anti-Doping Agency (USADA) (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 9 August 2016. Retrieved 30 May 2016.
- ↑ "A day to remember for Akbar Ali, Shikha and Rehan", The Hindu, 6 July 2001, archived from the original on $123 February 2005, retrieved 11 October 2010
- ↑ Stan Rayan (7–13 January 2006). "Awesome THREESOME". Sportstar. Vol. 29, no. 1.
- ↑ "Shri Vikram Verma congratulates swimmer Shikha Tandon". Ministry of Youth Affairs & Sports. 19 September 2003. Retrieved 11 October 2010.
- ↑ "Shikha swims into Athens Olympics". timesofindia.indiatimes.com. 25 October 2003. Retrieved 25 October 2003.
- ↑ "Shikha qualifies for Athens". rediff.com. 25 October 2003. Retrieved 25 October 2003.
- ↑ "Sport : Shikha Tandon makes a splash". தி இந்து. 16 December 2005 இம் மூலத்தில் இருந்து 5 March 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060305121236/http://www.hindu.com/2005/12/16/stories/2005121612402200.htm. பார்த்த நாள்: 11 October 2010.
- ↑ "Shikha enters semis of two swimming events". hindustantimes.com. 19 March 2006. Retrieved 19 March 2006.
- ↑ Shikha Tandon eliminated in both semifinals, Oneindia News, 20 March 2006, retrieved 11 October 2010
- ↑ "Sandeep, Shikha striving for Olympic berths", தி இந்து, 11 September 2007, archived from the original on 13 September 2007, retrieved 11 October 2010
- ↑ "I always wanted to work with USADA - swimmer Shikha Tandon Interview". www.sportskeeda.com. 27 November 2012. Retrieved 31 May 2016.
- ↑ Dutt, Purba (29 September 2010). "Shikha Tandon, a pool of talent". The Times of India இம் மூலத்தில் இருந்து 3 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103170726/http://articles.timesofindia.indiatimes.com/2010-12-22/people/28248947_1_women-swimmers-asian-games-athlete.
- ↑ Meet our Team and Staff, 2 May 2019 வார்ப்புரு:Fv