சிகார் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகார் மாவட்டம்
ضلع شِگر
மாவட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் வரைபடத்தில் சிகார் மாவட்டம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் வரைபடத்தில் சிகார் மாவட்டம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
பிரதேசம் ஜில்ஜிட்-பால்டிஸ்தான்
தலைமையிடம்சிகார்
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்8,900 km2 (3,400 sq mi)
மக்கள்தொகை
 • Estimate (2017)70,000
தாலுகா1

சிகார் மாவட்டம் (Shigar District),இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சிகார் நகரம் ஆகும். 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 8,900 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிகார் மாவட்ட மக்கள் தொகை 70,000 ஆகும். [1]உலகின் இரண்டாவது உயரமான கே-2 கொடுமுடி இம்மாவட்டத்தில் உள்ளது. இது ஸ்கர்டு நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

காரகோரம் மலைத்தொடரில் அமைந்த சிகார் மாவட்டத்தின் வடக்கில் நாகர் மாவட்டம், ஹன்சா மாவட்டம் மற்றும் சீனாவின் கஷ்கர் பகுதியும், தென்கிழக்கில் கஞ்சே மாவட்டம், தென்மேற்கில் ரோண்டு மாவட்டம் மற்றும் ஸ்கர்டு மாவட்டம்[2]எல்லைகளாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Shigar District Population & Area as on 2017
  2. "Dividing governance: Three new districts notified in G-B - The Express Tribune" (in en-US). The Express Tribune. 2015-07-26. https://tribune.com.pk/story/926380/dividing-governance-three-new-districts-notified-in-g-b/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகார்_மாவட்டம்&oldid=3608584" இலிருந்து மீள்விக்கப்பட்டது