சிகாகோ மற்றும் தென்னக வானூர்தி 4
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 1936, ஆகத்து 5 |
சுருக்கம் | நிலப்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட வானூர்தியின் காரணமாக (விமானி பிழை) |
இடம் | செயின்ட் லூயிஸ், மிசூரி, ![]() |
பயணிகள் | 6 |
ஊழியர் | 2 |
காயமுற்றோர் | 0 |
உயிரிழப்புகள் | 8 |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | "லாக்கீட் மாடல் 10 எலெக்ட்ரா" |
வானூர்தி பெயர் | மெம்பிஸ் சிட்டி |
இயக்கம் | சிகாகோ மற்றும் தென்னக ஏர்லைன்சு |
வானூர்தி பதிவு | NC16022 |
பறப்பு புறப்பாடு | லாம்பர்ட்-செயின்ட் லூயிஸ் சர்வதேச விமான நிலையம், செயின்ட் லூயிஸ், ![]() |
சேருமிடம் | மிட்வே சர்வதேச விமான நிலையம், சிகாகோ, இலினொய், |
சிகாகோ மற்றும் தென்னக ஏர்லைன்சு வானூர்தி 4 (Chicago and Southern Flight 4) ஒரு வானூர்தி விபத்தாகிய இது, 1936-ஆம் ஆண்டு, ஆகத்து 5-இல், "லாக்கீட் மாடல் 10 எலெக்ட்ரா" (பதிவு எண்: NC16022) வகையை சார்ந்த "மெம்பிஸ் சிட்டி" (City of Memphis) எனும் பெயருடைய வானூர்தி ஒன்று வழமையாக திட்டமிட்டப்படி, ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள லூசியானா மாநிலத்தின் நியூ ஓர்லென்ஸ் (நியூ ஓர்லியன்ஸ்) நகரத்திலிருந்து, இலினொய் மாநிலத்திலுள்ள சிகாகோ வழியாக, மிசிசிப்பி மாநில தலைநகர் ஜாக்சன், டென்னசி மாநிலத்தின் மெம்ஃபிஸ், மற்றும் மிசூரி மாநிலத்தின் பிரதான நகரான செயின்ட் லூயிஸ் போன்ற பெருநகரங்களுக்கு தொடர்ப் போக்குவரத்தாக இயங்கி வந்தது, இந்நிலையில், லாம்பர்ட் செயின்ட் லூயிஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற வானூர்தி, மிசோரி ஆற்றின் அருகேயுள்ள ஒரு பண்ணை களத்தில் விழுந்து நொறுங்கியது. "சிகாகோ மற்றும் தென்னக ஏர்லைன்சு" நிறுவனத்தின் கீழ் இயங்கிவந்த இவ்வானூர்தி விபத்தில் சேவைப் பணியாளர்கள் இருவரும், பயணிகள் 6 பேர்களும், மொத்தமாக 8 பேர்கள் (பயணித்த அனைவரும்) பலியாயினர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ASN Aircraft accident 05-AUG-1936 Lockheed 10B Electra NC16022". Aviation-safety.net. Archived from the original on 2015-05-09. Retrieved 2016-09-06.