உள்ளடக்கத்துக்குச் செல்

சிகாகோவின் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிகாகோ நகரக் கொடி
ஏற்கப்பட்டது மூலம், 1917; கூடுதல் விண்மீன்கள் சேர்க்கப்பட்டது, 1933, 1939.
வடிவம் ஒரு வெள்ளை பின்னணியில் இரண்டு நீல கிடைமட்ட கோடுகளுக்கு நடுவில் நான்கு சிவப்பு நட்சத்திரங்கள்
வடிவமைப்பாளர் வாலசு ரைசு

சிகாகோவின் கொடி ஒரு வெள்ளை பின்னணியில் இரண்டு நீல கிடைமட்ட கோடுகள் உள்ள கொடியாகும். ஒவ்வொரு கோடும் முழு கொடியில் 1/6 மடங்கு அளவிலும், மேல் எல்லையில் இருந்தும் கீழ் எல்லையில் இருந்தும் 1/6 மடங்கு தூரத்திற்கு துளி குறைவாகவும் உள்ளது. இரண்டு நீல கோடுகளுக்கும் நடுவில், நான்கு சிவப்பான, 6 கோல்கள் கொண்ட விண்மீன்கள் கிடைமட்ட வரிசையில் அமைகின்றன.

வாலஸ் ரைஸால் வடிவமைக்கப்பட்ட இக்கொடி, கொடிக்கான வடிவமைப்பு போட்டியில் வெற்றிபெற்றதன் பின்பு, 1917 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வெள்ளை பின்னணியின் மூன்று பகுதிகளும் இரண்டு கோடுகளும் நகரத்தின் புவியியல் அம்சங்களை குறித்தும், நட்சத்திரங்கள் முக்கியமான வரலாற்றிய சம்பவங்களை குறித்தும், நட்சத்திரங்கள் முக்கியமான நல்லொழுக்கங்களையும் கருத்துப்படிவங்களையும் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. நட்சத்திரங்களால் குறித்துக் காட்டப்பட்ட வரலாற்றிய சம்பவங்கள், டியர்பார்ன் கோட்டை, 1871 ன் சிகாகோ பெருந்தீ, 1893 ன் உலக கொலம்பியக் கண்காட்சி, மற்றும் 1933 முதல் 1934 வரை நடைபெற்ற முன்னேற்ற நூற்றாண்டு மாநாடும் ஆகின்றன.

வட அமெரிக்கக் கொடியியல் சங்கத்தின் ஒரு ஆய்வின்படி, 150 அமெரிக்க நகரக் கொடிகளில், சிகாகோ நகரத்தின் கொடி 10 மதிப்பெண்களில் 9.03 பெற்றுக்கொண்டு, வாஷிங்டன் டீசியை தவிர அனைத்து நகரங்களையும் மிஞ்சி, இரண்டாமிடம் பெற்றது.[1]

குறியீட்டமர்வு

[தொகு]

கோடுகள்

[தொகு]

மேலிருந்து கீழ்வரை, கொடியின் மூன்று வெள்ளை பகுதிகள் நகரத்தின் வடக்கு, மேற்கு, மற்றும் தெற்கு பக்கங்களை குறித்துக் காட்டிருக்கின்றன. மேலுள்ள நீல கோடு மிச்சிகன் ஆற்றையும் சிகாகோ ஆற்றின் வட பகுதியையும் குறித்துக் காட்டுகிறது.[2] அதே போலவே, கீழுள்ள நீல கோடு,[3] ஆற்றின் தென்பகுதியையும் பெருங்கால்வாய் மற்றும் சிகாகோ சரக்குவழியையும் குறித்துக் காட்டுகிறது.[4] கொடியின் நீல நிறபேதம் சிலரால் வானத்தின் நீலம் அல்லது வெளிரிய நீலம் என அழைக்கப்படுகிறது; 1917 ல் ரைஸ் வழங்கிய ஒரு பேச்சில், அந்நீலம் "நீரின் நிறம்" என வருணிக்கப்பட்டுள்ளது.[5][6]

நட்சத்திரங்கள்

[தொகு]

நடுவில் உள்ள வெள்ளை கோடில் நான்கு சிவப்பான, 6 கோல்கள் கொண்ட நட்சத்திரங்கள் உள்ளன. ஐக்கோல்கள் இறையாண்மையான நாடுகளால் பயன்படுத்துகின்றதாலும், வடிவமைக்கப்பட்ட அந்நட்சத்திரம் 1917 ன் வரை எந்த அறிந்த கொடிகளிலும் பயன்படுத்தாததாலும் 6 கோல்கள் கொண்ட நட்சத்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன.[7] இடதுபுறத்தில் இருந்து வலதுபுறம் வரை:

 • முதல் நட்சத்திரம் டியர்பார்ன் கோட்டையை குறித்துக் காட்டுகிறது. 1939 ல் கோடியில் சேர்க்கப்பட்டது. இதனது 6 கோல்கள், போக்குவரத்து, உழைப்பு, வணிகம், நிதி, மக்கட்நெருக்கம், மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை குறித்துக் காட்டுகின்றன.[2]
 • 1871 ன் சிகாகோ பெருந்தீயை குறித்துக் காட்டுகின்ற இரண்டாம் நட்சத்திரம், மூலமுதலான 1917 கொடி வடிவமைப்பில் இருந்தது. இதனது 6 கோல்கள், சமயம், கல்வி, அழகியல், நீதி, இலாபம், மற்றும் குடிமை பெருமிதம் ஆகியவற்றை குறித்துக் காட்டுகின்றன.[2]
 • 1893 ன் உலக கொலம்பியக் கண்காட்சியை குறித்துக் காட்டுகின்ற மூன்றாம் நட்சத்திரம், மூலமுதலான 1917 கொடி வடிவமைப்பில் இருந்தது. இதனது 6 கோல்கள், முன்பு சிகாகோக சேர்ந்திருந்த அரசியல் அமைப்புகளையும் அப்பகுதியில் பறக்கப்பட்ட கொடிகளையும் குறித்துக் காட்டுகின்றன: பிரான்சு, 1693; பெரிய பிரித்தானியா, 1763; வர்ஜீனியா, 1778; வடமேற்கு நாட்டாட்சி, 1789; இந்தியானா நாட்டாட்சி, 1802; மற்றும் இலினொய் (நாட்டாட்சி, 1809; மற்றும் மாநிலம், 1818 முதல் இன்றுவரை).[2]
 • முன்னேற்ற நூற்றாண்டு மாநாட்டை (1933 முதல் 1934 வரை) குறித்துக் காட்டுகின்ற நான்காம் நட்சத்திரம், 1933 ல் சேர்க்கப்பட்டது. இதனது கோல்கள் சிகாகோவின் அகன்ற பரப்பைக் குறித்துக் காட்டுகின்றன: ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் (ஒரு 1990 மக்கட்தொகை கணக்கெடுப்பில் லாஸ் ஏஞ்சலஸ் இதை மிஞ்சியப் பின்பு, மூன்றாவது பெரிய நகரமானது); சிகாகோவின் இலத்தீன குறிக்கோள், அர்ப்ஸ் இன் ஹோர்த்தோ ("தோட்டத்தில் ஒரு நகரம்"); சிகாகோவின் "நான் செய்வேன்" குறிக்கோள்; பெரு மத்திய அங்காடி; ஆச்சரிய நகரம்; மற்றும் மாநாட்டு நகரம்.[2]

பல்வேறு நோக்கங்களுடன் கூடுதலான நட்சத்திரங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. முதலில் சிகாகோ ட்ரிப்யூனால் பரிந்துரைக்கப்பட்டு, பின்பு 1960 களில் நகரத்தலைவர் டேலியால் ஆதரிக்கப்பட்ட ஒரு கருத்து, ஒரு ஐந்தாம் நட்சத்திரம் அணு காலத்தில் சிகாகோவின் ஈடுபாட்டை அறிவுறுத்தலாம் என்றது.[8][9][10] 1980 களில், சிகாகோவின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க நகரத்தலைவர் ஹாரல்ட் வாஷிங்டனை நன்மதிக்க ஒரு நட்சத்திரம் முன்மொழியப்பட்டது.[10][11] தற்பொழுது சிகாகோ பெருந்தீவிபத்திற்காக உள்ளதைப் போலவே, இன்னொரு நட்சத்திரத்திற்கு தகுதியான சிகாகோ வெள்ள இயற்கைப் பேரழிவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1990 களில் சிகாகோவின் தொழில்முனைவுச் சுற்றுப்புறத்தை குறித்துக் காட்டவும் சிகாகோவை சேர்ந்த சில மனைத்தொழில்முனைவோர் ஒரு ஐந்தாம் நட்சத்திரத்தை பரிந்துரைத்தனர். 2016 கோடை ஒலிம்பிக் விளையாட்டுகளை சிகாகோவில் நடத்துவதற்கான ஏலத்தில், சிகாகோ வெற்றிபெற்றால் ஒரு ஐந்தாம் நட்சத்திரத்தை கொடியில் சேர்க்க ஏலக்குழுவினர் பரிந்துரைத்தனர்,[10][12] ஆனால் அந்த ஏலத்தில் இரியோ டி செனீரோ தான் வெற்றிபெற்றது. 1990 களில் சிகாகோ புல்ஸின் திறமையை குறித்துக் காட்டவும், 1908 முதல் 2016 வரை வெற்றிபெறாத உலககோப்பையில் சிகாகோ கப்ஸ் வெற்றிபெற்றால், அதை குறித்துக் காட்டவும் இதர விளையாட்டு சார்ந்த பரிந்துரைகள் இருந்தன.[13]

வரலாறு

[தொகு]
சிகாகோவின் கொடி

1915 ல், ஆல்டர்மன் ஜேம்ஸ் ஏ. கர்ன்ஸாலின் தலைமையில், நகரத்தலைவர் வில்லியம் ஹேல் தோம்சன் ஒரு நகராட்சிக்குரிய கொடி சங்கத்தை உருவாக்கினார். இச்சங்கத்தின் உறுப்பினர்கள் பட்டியலில், பணக்கார தொழிலதிபர் சார்ல்ஸ் டியரிங்கும் தனித்தன்மை ஓவியர் லாட்டன் எஸ். பார்க்கரும் இருந்தனர். விரிவுரையாளர் மற்றும் கவிஞர் வாலஸ் ரைஸை சிறந்த கொடி வடிவமைப்புக்காக ஒரு திறந்த பொதுக்கூட்ட போட்டியை தொடக்க வைக்க பார்க்கர் கோரியிருந்தார். ஆயிறத்திற்கும் மேலான வடிவமைப்புகள் விண்ணப்பிக்கப்பட்டிருந்தன.

மேற்கோள்கள்

[தொகு]
 1. "2004 American City Flags Survey" பரணிடப்பட்டது 2017-08-09 at the வந்தவழி இயந்திரம், North American Vexillological Association press release, 2 October 2004
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Chicago Facts: Municipal Flag". Chicago Public Library. பார்க்கப்பட்ட நாள் 2014-07-10.
 3. "Chicago". Chicago magazine. Archived from the original on 2018-01-26. பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
 4. "Flying Colors: The Best and Worst of Flag Design". Print Magazine. Archived from the original on 2018-06-17. பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
 5. "Association Sounds Chicago's Call . . ". Chicago Commerce. Chicago Association of Commerce and Industry. December 6, 1917. p. 6.
 6. Chicago's flag: The history of every star and every stripe, Chicago Tribune, 13 June, 2016
 7. Rice, Wallace; T. E. Whalen (22 July 2005). "Wallace Rice on Chicago Stars". introvert.net. பார்க்கப்பட்ட நாள் 18 April 2011.
 8. Heise, Kenan (August 15, 1976). "It’s a grand old flag. But it could be grander.". Chicago Tribune Magazine: p. 34 இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 15, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170415200407/http://archives.chicagotribune.com/1976/08/15/page/184/article/its-a-grand-old-flag/. 
 9. Whalen, T.E. (January 3, 2006), The Municipal Flag of Chicago: References (PDF), p. 8
 10. 10.0 10.1 10.2 Konkol, Mark (June 30, 2015). "The Story of the Rare 5-Star Chicago Flag That Wasn't Supposed To Exist". My Chicago (DNAinfo) இம் மூலத்தில் இருந்து June 14, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170614125912/https://www.dnainfo.com/chicago/20150630/south-shore/story-of-rare-five-star-chicago-flag-that-wasnt-supposed-exist. 
 11. "Please, A Moratorium On Memorials". Chicago Tribune. 23 December 1987. http://articles.chicagotribune.com/1987-12-23/news/8704050306_1_mayor-washington-memorials-richard-j-daley. பார்த்த நாள்: 18 January 2013. "Ald. Raymond Figueroa and others want a fifth star added to the city's flag in memory of Mr. Washington." 
 12. Chicago 2016 Newswire (December 14, 2006), Chicago Students Creatively Try to Bring Home the Bid, Chicago 2016 Committee, archived from the original on February 10, 2007, பார்க்கப்பட்ட நாள் April 14, 2017{{citation}}: CS1 maint: numeric names: authors list (link)
 13. Rumore, Kori; Marx, Ryan (June 13, 2016). "Chicago's flag: The history of every star and every stripe". Chicago Tribune. http://www.chicagotribune.com/news/ct-chicago-flag-origins-flag-day-htmlstory.html. 

இதர இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகாகோவின்_கொடி&oldid=3586914" இலிருந்து மீள்விக்கப்பட்டது