சிகாகிரீஷ்வரர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிகாகிரீஷ்வரர் கோவில் என்பது இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், குடுமியான்மலையில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவிலின் மூலவர் தெய்வமாக சிகாகிரீஷ்ரர் வீற்றிருக்கிறார். இவருக்கு குடுமிநாதர் என்றொரு பெயரும் உண்டு.

நிர்வாகம்[தொகு]

இக்கோவில் இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

தெய்வங்கள்[தொகு]

இக்கோவிலில் சொர்ணாம்பிகை அம்மன், விநாயகர், ஹனுமன், தெட்சிணாமூர்த்தி, பைரவர், பெருமாள் மற்றும் மலையின் உச்சியில் முருகக்கடவுள் போன்ற தெய்வங்கள் உள்ளது.

இசைக்கல்வெட்டு[தொகு]

மகேந்திரவர்ம பல்லவனுடைய இசைக்கல்வெட்டு ஒன்று உள்ளது. சரிகமபதநி குறித்த குறிப்புகள் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.

குடவரைக்கோவில்[தொகு]

மலையினைக் குடைந்து, குடவரைக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. மேலும் ஆயக்கலைகள் 63ஐயும் விளக்கக்கூடிய கற்சிற்பங்கள் இக்கோவிலில் இடம்பெற்றுள்ளது.

பங்குனி உத்திர திருவிழா[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தில் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறும்.

மேற்கோள்கள்[தொகு]