சிகந்தினி கனகசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர்
சிகந்தினி கனகசுந்தரம்
Shikandhini Kanagasundrem

பிரிட்டிசு பேரரசின் மிகச் சிறந்த ஒழுங்கின் உறுப்பினர்.
பிறப்புஇலங்கை
தேசியம்பிரித்தானியர்
கல்விபுனித பிரித்கெட்டு கன்னியர் மடம்
படித்த கல்வி நிறுவனங்கள்மிடில்செக்சு மருத்துவமனை மருத்துவப் பள்ளி
பணிநுண்ணுயிரியலாளர்
வாழ்க்கைத்
துணை
ஐங்கரன் கனகசுந்தரம்
பிள்ளைகள்2
விருதுகள்2021 புத்தாண்டு விருதுகள்

சிகந்தினி கனகசுந்தரம் (Shikandhini Kanagasundrem) என்பவர் பிரித்தானிய -இலங்கை நுண்ணுயிரியலாளர் ஆவார். தொழில் ரீதியாக இவர் சிகோ விசுவநாதன்[1] என்று அழைக்கப்படுகிறார். பிரிட்டிசு பேரரசின் மிகச் சிறந்த ஒழுங்கின் உறுப்பினர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார். சிகந்தினியின் தாத்தா வைத்தியலிங்கம் சிவலிங்கம் இலங்கையின் ஒட்டுண்ணியியல் பிரிவின் முதல் பேராசிரியர் ஆவார். [2]

தொழில்[தொகு]

சிகந்தினி தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு புனித பிரித்கெட்டு கன்னியர் மடப் பள்ளியில் படித்து முடித்தபின் உயர் கல்விக்காக ஐக்கிய இராச்சியத்திற்கு சென்றார். இலண்டனில் உள்ள மிடில்செக்சு மருத்துவமனை மருத்துவப் பள்ளியில் மருத்துவ துறையில் சிகந்தினி தனது உயர் படிப்பைத் தொடர்ந்தார். இலண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ நுண்ணுயிரியல் பாடத்தை சிறப்புப் பாடமாகப் படித்தார். மருத்துவ நுண்ணுயிரியலில் [2] முனைவர் பட்டமும் பெற்றார்.

சிகந்தினி கனகசுந்திரம் மிடில்செக்சு மருத்துவமனை மருத்துவப் பள்ளியின் முதல் மருத்துவ அறிஞராகப் பட்டம் பெற்றார். 1983 ஆம் ஆண்டில் மருத்துவப் பள்ளியில் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் மருத்துவருக்கான வில்லியம் என்றி ரீன் டீன் பரிசு சிகந்தினிக்கு வழங்கப்பட்டது. ஒரு சிறந்த மாணவியாக சிகந்தினி உடலியல் துறையில் சிட்னி கேய் பரிசு, நரம்பியலில் சார்லோட் டிக்சன் நினைவுப் பரிசு, மருத்துவ மருந்தியல் மற்றும் மயக்கவியலில் பீட்டர் பிளிண்டன் பரிசு, மேயர்சிடீன் உதவித்தொகை, கண் மருத்துவத்தில் ஆலன் கோல்ட்சுமித் பரிசு, கிங்சுடன் ஃபோலர் பரிசு உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார். நோயியல் மற்றும் மருத்துவத்தில் அரோல்டு போல்டெரோ உதவித்தொகையும் இவருக்குக் கிடைத்தது.

1994 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாட்டின் எசெக்சு மாகாணத்தில் உள்ள இளவரசி அலெக்சாண்ட்ரா மருத்துவமனை அறக்கட்டளையில் ஆலோசகர் நுண்ணுயிரியலாளராக பணியாற்றினார். [3] அவர் 2003 ஆம் ஆண்டில் இளவரசி அலெக்சாண்ட்ரா மருத்துவமனை அறக்கட்டளையின் தொற்றுத் தடுப்பு இயக்குநரானாக உயர்ந்தார். [2] இளவரசி அலெக்சாண்ட்ரா மருத்துவமனை அறக்கட்டளையுடன் இணைந்து பணிபுரிந்தபோது, வைரசு பரவல் அபாயத்தைக் குறைக்க முக்கியமான முக்கிய மாற்றங்கள் மற்றும் நடைமுறைகளைச் செயல்படுத்துவதில் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டு பரவலாக நன்கு அறியப்பட்டார். [4] [1]

தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு குழுவின் ஆதரவுடன், மருத்துவர் சிகந்தினி கனகசுந்தரம் பல தொற்று சவால்களுக்கு மருத்துவமனையின் பதிலை வழிநடத்தி கட்டுப்படுத்தினார். இது மருத்துவமனையை தேசிய அளவில் சிறந்த தரத்திற்கு அங்கீகரிக்கவும், குறைந்த தொற்று விகிதங்களின் சிறந்த பதிவை பெறவும் உதவியது.

விருதுகள்[தொகு]

ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களால் , பிரிட்டிசு பேரரசின் மிகச்சிறந்த ஒழுங்கின் உறுப்பினராக சிறப்பிக்கப்பட்டார். இராணியின் 2021 ஆண்டின் புத்தாண்டு கௌரவத்தின் போது, நுண்ணுயிரியல் மற்றும் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் சிறப்பான சேவை செய்ததற்காக இச்சிறப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக [[2020 ஐக்கிய இராச்சியத்தில் கொரோனாவைரசுத் தொற்று|இங்கிலாந்தில் கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் சிகந்தினி கௌரவிக்கப்பட்டார்.[2] [5] [6] [7] [4] [3] இந்த விருது நுண்ணுயிரியல் மற்றும் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றில் இவரது நிபுணத்துவத்தின் உச்சம் மற்றும் அங்கீகாரமாகும்.

கோவிட் தொற்றுநோய்களின் போது, மருத்துவர் சிகந்தினி கனகசுந்தரம் மருத்துவமனையில் பரவும் தொற்று விகிதங்களைக் குறைக்க முக்கியமான நடைமுறைகளையும் மாற்றங்களையும் செயல்படுத்தினார். அவரது தலைமை மற்றும் நிபுணத்துவம் சந்தேகத்திற்கு இடமின்றி நோயாளிகள் மற்றும் ஊழியர்களிடையே தொற்றுநோய்களைக் குறைத்தது.

சிகந்தினி கனகசுந்தரம் தனது பணியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பிற்கான தூதர் மற்றும் வழக்கறிஞர் என்று அறியப்பட்டார். எல்லா நேரங்களிலும் சிறந்த தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு ஆலோசனைகளை வழங்கினார். தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு குழுவின் ஆதரவுடன், மருத்துவர் சிகந்தினி கனகசுந்தரம் பல தொற்று சவால்களுக்கு மருத்துவமனையின் பதிலை வழிநடத்தி கட்டுப்படுத்தினார். இது மருத்துவமனையை தேசிய அளவில் சிறந்த தரத்திற்கு அங்கீகரிக்கவும், குறைந்த தொற்று விகிதங்களின் சிறந்த பதிவை பெறவும் உதவியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Hospital, Princess Alexandra. "Director of infection prevention and control awarded MBE | News and events". Princess Alexandra Hospital (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.Hospital, Princess Alexandra. "Director of infection prevention and control awarded MBE | News and events". Princess Alexandra Hospital. Retrieved 15 January 2021.
  2. 2.0 2.1 2.2 2.3 "Lankan-born Dr. Kanagasundrem awarded MBE | Daily FT". www.ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. 3.0 3.1 "Princess Alexandra doctor awarded MBE for work battling coronavirus pandemic". Epping Forest Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
  4. 4.0 4.1 "British-Sri Lankans recognized in Queen's Honor List". CeylonToday (in ஆங்கிலம்). Archived from the original on 2021-01-08. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
  5. "Dr. Kanagasundrem, among British-Sri Lankans recognized in Queen's Honor List". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2021-01-08. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
  6. "2021 New Year Honours for Essex". Essex Lieutenancy (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
  7. "Several British-Sri Lankans enlisted in the Queen's 2021 New Year honours list". NewsWire (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-04. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகந்தினி_கனகசுந்தரம்&oldid=3583993" இலிருந்து மீள்விக்கப்பட்டது