சிகத்யே-அலீன்

ஆள்கூறுகள்: 45°20′N 136°10′E / 45.333°N 136.167°E / 45.333; 136.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகத்யே-அலீன்
உலகிலுள்ள பூனையினங்களில் மிகப்பெரியதான ஆமுர் புலிகளின் தாயகம் சிகத்யே-அலீன்[1]
உயர்ந்த இடம்
உச்சிடோர்டோகி யானி, உருசியா
உயரம்2,077 மீ (6,814 அடி)
ஆள்கூறு45°20′N 136°10′E / 45.333°N 136.167°E / 45.333; 136.167
புவியியல்
சிகத்யே-அலீன் is located in உருசியா
சிகத்யே-அலீன்
சிகத்யே-அலீன்
அலுவல் பெயர்மத்திய சிகத்யே-அலின்
வகைஇயற்கை
வரன்முறைx
தெரியப்பட்டது2001 (25-வது அமர்வு)
உசாவு எண்766

சிகத்யே-அலீன் (Sikhote-Alin, உருசியம்: Сихотэ́-Russian) என்பது உருசியாவின் தூரகிழக்கில் உள்ள பசிபிக் வளையத்தில், பிரிமோர்ஸ்கி மற்றும் கபரோவ்ஸ்க் மாகாணங்களில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். உருசிய பசிபிக் துறைமுகமான விளாதிவசுத்தோக்கின் வடகிழக்கில் 900 கிலோமீட்டர் (560 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த மலைத்தொடரின் நீளம் 1200 கி.மீ, அகலம் 250 கி.மீ வரை, மற்றும் அதிகபட்ச உயரம் 2077 மீ.[2] கடல் மட்டத்திலிருந்து 2,077 மீட்டர் (6,814 அடி) உயரத்தில் உள்ள டோர்டோகி யானி, கபரோவ்ஸ்க் மாகாணத்தில் உள்ள கோ மலை (2,003 மீ) மற்றும் பிரிமோர்ஸ்கி மாகாணத்தில் உள்ள அனிக் மலை (1,933 மீ) ஆகியவை மிக உயர்ந்த சிகரங்களாகும்.

சிகத்யே-அலீன் ஒரு மிதவெப்ப மண்டலம் என்றாலும், வடக்கு தைகாவின் பொதுவான விலங்குகளான துருவ மான் மற்றும் உசுரி பழுப்பு கரடி போன்றவை சிறுத்தை, புலி மற்றும் ஆசிய கறுப்புக் கரடியுடன் இணைந்து சூழலைப் பங்கிட்டு வாழ்கின்றன. புலிகளுடனான போட்டி காரணமாக இப்பகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலே ஓநாய்கள் உள்ளன.[3] இப்பகுதியில் உள்ள பழமையான மரம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஜப்பானிய யூ மரமாகும்.[4]

வரலாறு[தொகு]

இந்த பெயர் மஞ்சு இனக்குழுவைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது (மஞ்சு: அலின் "மலை").

1910 கள் மற்றும் 1920 களில், சிகத்யே-அலீன் விளதீமிர் அர்செனியேவ் (1872-1930) என்பவரால் விரிவாக ஆராயப்பட்டது, அவர் தனது சாகசங்களைப் பல புத்தகங்களில் விவரித்துள்ளார், குறிப்பாக டெர்சு உசலா (1923) எனும் புத்தகம். இது 1975 இல் அகிரா குரோசாவாவின் ஆஸ்கார் விருது பெற்ற படமாக எடுக்கப்பட்டது. இப்பகுதியின் தனித்துவமிக்க வனவிலங்குகளைப் பாதுகாக்க பெரிய சிகத்யே-அலீன் மற்றும் லாசோ வனவிலங்கு புகலிடங்கள் 1935 இல் அமைக்கப்பட்டன. இந்த மலைத்தொடரின் மைய மண்டலத்தை வனச்சரகர்களால் மட்டுமே ஆராய முடியும்.

பிப்ரவரி 12, 1947 அன்று, அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய விண்கல் மழை சிகத்யே-அலீன் மலைகளில் ஏற்பட்டது. சிகத்யே-அலீன் விண்வீழ்கல் பூமியில் விழுகையில் வளிமண்டலத்திலேயே வெடித்துச் சிதறி, ஒரு நீள்வட்டப் பகுதியில் 1.3 சதுர கிலோமீட்டர் (0.50 சதுர மைல்) பரப்பளவில் பல டன் உலோகத்தை மழையாகப் பொழிந்தது. பல பள்ளங்கள் விண்கற்களால் உருவாக்கப்பட்டன; அவற்றுள் மிகப்பெரியது 26 மீட்டர் (85 அடி) விட்டம் கொண்டது.

செதில்-பக்கச் சீன வாத்து, பிளேக்கிஸ்டனின் மீன்-ஆந்தை மற்றும் ஆமுர் புலி போன்ற "அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் உயிர்வாழ்விற்கான முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி, 2001 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ "மைய சிகத்யே-அலீன்" ஐ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்த்தது. இந்த உலகப் பாரம்பரிய தளம் மொத்தம் 16,319 சதுர கிலோமீட்டர் (4,033,000 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டிருந்தது, இதில் சிகத்யே-அலீன் ஸாபோவெட்னிக் எனப்படும் மையப்பகுதி மண்டலம் 3,985 சதுர கிலோமீட்டர் (985,000 ஏக்கர்) கொண்டது.[5] 2018 ஆம் ஆண்டில், உலகப் பாரம்பரிய தளம் 11,605 சதுர கிலோமீட்டர் (2,868,000 ஏக்கர்) பரப்பளவு கொண்ட பிகின் தேசிய பூங்காவை உள்ளடக்கி "பிகின் ரிவர் வேலி" (பிகின் ஆற்றுப்பள்ளத்தாக்கு) என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டது..[6]

சிகத்யே-அலீன் மலைகளில் அன்யூய் தேசிய பூங்கா, போட்சின்ஸ்கி மாநில இயற்கை பாதுகாப்புப்பகுதி, லாசோவ்ஸ்கி மாநில இயற்கை பாதுகாப்புப்பகுதி, எல். ஜி. கப்லானோவா, சிகத்யே-அலீன் மாநில உயிர்க்கோளப் பாதுகாப்புப்பகுதி உள்ளிட்ட பல பெரிய பாதுகாப்பு மண்டலங்கள் உள்ளன.[7]

சான்றுகள்[தொகு]

  1. Slaght, J. C., D. G. Miquelle, I. G. Nikolaev, J. M. Goodrich, E. N. Smirnov, K. Traylor-Holzer, S. Christie, T. Arjanova, J. L. D. Smith, Karanth, K. U. (2005) Chapter 6. Who's king of the beasts? Historical and recent body weights of wild and captive Amur tigers, with comparisons to other subspecies. Pages 25–35 in: Miquelle, D.G., Smirnov, E.N., Goodrich, J.M. (Eds.) Tigers in Sikhote-Alin Zapovednik: Ecology and Conservation. PSP, Vladivostok, Russia (உருசிய மொழியில்)
  2. Атлас Хабаровского края. ФГУП «Дальневосточное аэрогеодезическое предприятие». 2004.  Атлас мира. Роскартография. 2001. பக். 448. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:5-85576-095-2. 
  3. "Tigers and Wolves in the Russian Far East: Competitive Exclusion, Functional Redundancy, and Conservation Implications". savethetigerfund.org. Archived from the original on 2007-10-30. பார்க்கப்பட்ட நாள் 2008-07-09.
  4. "Archived copy". Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2007-09-29.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) Nature Monument "Sikhote - Alin". Center for Wildlife Rehabilitation "UTES"
  5. "Central Sikhote-Alin - Russian Federation" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு] United Nations Environment Programme
  6. "Bikin River Valley". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 3 July 2018.
  7. С. С. Воскресенский. Сихотэ-Алинь. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகத்யே-அலீன்&oldid=3653104" இலிருந்து மீள்விக்கப்பட்டது