சா முகமது
தோற்றம்
சா முகமது | |
---|---|
![]() | |
பிறப்பு | 1780 வதால விரம், அமிருதசரசு, சீக்கியப் பேரரசு (தற்போதைய பஞ்சாப், இந்தியா) |
இறப்பு | 1862 (அகவை 81–82) அமிருதசரசு, பஞ்சாப், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போதைய பஞ்சாப், இந்தியா) |
தொழில் | கவிஞர் |
இலக்கிய இயக்கம் | முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஜங்னாமா (போரைக் குறித்த புத்தகம்) முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் பற்றியது |
சா முகமது (Shah Mohammad) மகாராஜா ரஞ்சித் சிங்கின் (1780-1839) ஆட்சியின் போது வாழ்ந்த ஒரு பஞ்சாபிக் கவிஞர் ஆவார், மேலும் இவரால் 1846-ஆம் ஆண்டில் போரைக் குறித்த புத்தகமான ஜங்னாமாவிற்காக இவர் நன்கு அறியப்பட்டவர் ஆவார். இந்தப் புத்தகம் முதல் ஆங்கிலோ-சீக்கியப் போரை (1845-1846) சித்தரிக்கிறது.[1]
மகாராஜா ரஞ்சித் சிங்கின் இராணுவத்தில் பணிபுரிந்த இவரது உறவினர்களில் பல நேரில் பார்த்த சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஷா முகமது தனது புத்தகத்திற்கான தகவல்கைச் சேகரித்ததாக வரலாற்றாசிரியர்களால் பரவலாக நம்பப்படுகிறது. பஞ்சாபியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரின் முழுமையான காட்சிகளை இவரால் ஒன்றிணைக்க முடிந்துள்ளது. பஞ்சாபில் சீக்கிய ஆட்சி வீழ்ச்சியடைவதற்கான காரணங்களை ஷா முகமதுவின் புத்தகம் விளக்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Varinder Walia (8 December 2005). "Retracing the glory of Shah Mohammad". Academy of the Punjab in North America (APNA) website. Retrieved 23 October 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- சிங், குஷ்வந்த், "சீக்கியர்களின் வரலாறு தொகுதி II"