உள்ளடக்கத்துக்குச் செல்

சா ஆலாம் விரைவுச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சா ஆலாம் விரைவுச்சாலை
Shah Alam Expressway
Lebuhraya Shah Alam
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு : சா ஆலாம் எக்சுபிரசுவே கூட்டமைப்பு நிறுவனம்
நீளம்:57.5 km (35.7 mi)
வரலாறு:கட்டுமான தொடக்கம்: 1994
கட்டுமான நிறைவு: நவம்பர் 1996[1]
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:181 புலாவ் இண்டா விரைவுச்சாலைபண்டமாரான், சிலாங்கூர்
 5 கிள்ளான்–பந்திங்

E32 மேற்கு கடற்கரை
E13 கெமுனிங்-சா ஆலாம்
3214 சா ஆலாம்–பூச்சோங்
E6 மலேசிய மத்திய இணைப்பு
E11 டாமன்சாரா-பூச்சோங்
E20 மாஜு விரைவுச்சாலை
E37 கோலாலம்பூர்–சிரம்பான்

E19 சுங்கை பீசி-உலு கிள்ளான்

கிழக்கு முடிவு:28 கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2செரி பெட்டாலிங், கோலாலம்பூர்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கிள்ளான், கோத்தா கெமுனிங், சா ஆலாம், சுபாங் ஜெயா, யூஎஸ்ஜே, பூச்சோங், பண்டார் கின்ராரா, அவான் கெச்சில், அவான் பெசார், புக்கிட் ஜாலில், கோலாலம்பூர் விளையாட்டு நகரம், செரி பெட்டாலிங்
நெடுஞ்சாலை அமைப்பு

சா ஆலாம் விரைவுச்சாலை (ஆங்கிலம்; Shah Alam Expressway (KESAS) E5 மலாய்: Lebuhraya Shah Alam) என்பது தீபகற்ப மலேசியாவில் 57.5-கிலோமீட்டர் (35.7-மைல்) கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் விரைவுச்சாலை ஆகும். இந்த விரைவுச்சாலை சிலாங்கூர், கிள்ளான், பண்டமாரான் நகரில் தொடங்கி கோலாலம்பூர் செரி பெட்டாலிங் வரை செல்கிறது.

கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை ஆகியவற்றுக்குப் பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கில் மூன்றாவது விரைவுச்சாலையாக இந்த சா ஆலாம் விரைவுச்சாலை விளங்குகிறது. இந்த விரைவுச்சாலை கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 திட்டத்தின் (Sunway Interchange–Sri Petaling Interchange) ஒரு பகுதியாகும்.

கண்ணோட்டம்

[தொகு]

சா ஆலாம் விரைவுச்சாலை, நெரிசலான கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலைக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது. இந்த விரைவுச்சாலையில் செல்லும் ஒரு வாகனமோட்டி கிள்ளான் பள்ளத்தாக்கின் எந்தப் பகுதிக்கும் விரைவாகவும் எளிதாகவும் பயணிக்க முடியும்.

சா ஆலாம் விரைவுச்சாலை கீழ்காணும் நெடுஞ்சாலை வலையமைப்புகளை இணைக்கிறது.

சா ஆலாம் விரைவுச்சாலை ஒரு பிரபலமான பயணச் சாலையாக அறியப்படுகிறது. நாள் தோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாகனமோட்டிகள் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றனர், இதில் 66% பேர் கட்டணமில்லா வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றனர். சிலாங்கூர், கிள்ளானில் உள்ள பண்டமாரான் மாற்றுச் சாலைக்கு அருகே கிலோமீட்டர் 18-இல் சா ஆலாம் விரைவுச்சாலை தொடங்குகிறது.

கட்டுமானம்

[தொகு]

இந்த விரைவுச்சாலையின் கட்டுமானப் பணிகள் 1994-ஆம் ஆண்டு தொடங்கியது. முதல் கட்டம் (சிபீல்ட்–செரி பெட்டாலிங்) 1996-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இரண்டாம் கட்டம் (சிபீல்ட்–பண்டமாரான்) 1998-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. கோலாலம்பூரில் 1998 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற போது, ​​இந்த விரைவுச்சாலை புக்கிட் ஜாலில், கோலாலம்பூர் விளையாட்டு நகரத்திற்கு நுழைவாயிலாக மாறியது.

1994-ஆம் ஆண்டு எக்சுபிரஸ் அட்டை (Express TAG) என்று அழைக்கப்படும் அதன் சொந்த மின்னணு கட்டண வசூல் அமைப்பை சா ஆலாம் விரைவுச்சாலை கொண்டிருந்தது. சூலை 1, 2004 முதல்,   Touch 'n Go   மற்றும் SmartTAG அமைப்புகளுக்கு எக்சுபிரஸ் அட்டை மாற்றப்பட்டது.

சுங்கக் கட்டணங்கள்

[தொகு]

(சனவரி 15, 2013 முதல்)

பிரிவு வாகனங்களின் வகை (மலேசிய ரிங்கிட் RM)
0 விசையுந்துகள், மிதிவண்டிகள் அல்லது 2 அல்லது அதற்கும் குறைவான சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் Free
1 வாடகை உந்துகள் தவிர்த்து 2 அச்சுகள் மற்றும் 3 அல்லது 4 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் RM2.00
2 பேருந்துகளைத் தவிர்த்து 2 அச்சுகள் மற்றும் 5 அல்லது 6 சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் RM3.00
3 3 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகளைக் கொண்ட வாகனங்கள் RM4.00
4 வாடகை உந்துகள் RM1.00
5 பேருந்துகள் RM1.50

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rancangan Malaysia KE-8" [8th Malaysia Plan] (PDF). Archived from the original (PDF) on 2011-11-09.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சா_ஆலாம்_விரைவுச்சாலை&oldid=4357911" இலிருந்து மீள்விக்கப்பட்டது