சா ஆலாம் ஏரி
| சா ஆலாம் ஏரி Shah Alam Lake Garden | |
|---|---|
சா ஆலாம் ஏரிப் பூங்கா | |
| அதிகாரபூர்வ பெயர் | Taman Tasik Shah Alam |
| நாடு | |
| அமைவிடம் | சா ஆலாம் |
| புவியியல் ஆள்கூற்று | 3°04′33″N 101°30′58″E / 3.07583°N 101.51611°E |
| நோக்கம் | ஏரிப் பூங்கா |
| நிலை | செயல்பாட்டில் உள்ளது |
| திறந்தது | 1985 |
சா ஆலாம் ஏரி அல்லது சா ஆலாம் ஏரிப் பூங்கா (மலாய்: Taman Tasik Shah Alam; ஆங்கிலம்: Shah Alam Lake Garden); என்பது மலேசியா, சிலாங்கூர், சா ஆலாம் நகரில் 43 எக்டேர் பரப்பளவு கொண்ட ஒரு பொது பூங்கா ஆகும். இந்தப் பூங்கா 1985-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் திறக்கப்பட்ட இந்தப் பொது பூங்கா; கட்டிடக் கலைஞர் புமியாக்கி தக்கானோ (Fumiaki Takano) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
இந்தப் பூங்காவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மூன்று ஏரிகள் உள்ளன. அவை கால்வாய்கள் மற்றும் நடைபாதைகளின் வலையமைப்பால் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த ஏரியின் மேற்குப் பகுதியில் வெட் வேர்ல்ட் சா ஆலாம் (Wet World Shah Alam) எனும் கருப்பொருள் கொண்ட ஓரு நீர்ப் பூங்காவும் உள்ளது.
இந்தப் பூங்காவில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட வகையான மரங்கள்; பல்வேறு வகையான பறவைகள், விலங்குகள் மற்றும் பூச்சிகள் உள்ளன.[1][2][3]
சுற்றுலா
[தொகு]இந்தப் பூங்காவிற்குள் படகு வாடகை, விளையாட்டு இடங்கள், மீன்பிடி தளங்கள் மற்றும் ஏரிக்கரையோர உணவகங்கள் போன்ற பல வசதிகள் உள்ளன.[4]
போக்குவரத்து
[தொகு]சா ஆலாம் விரைவுச்சாலை; மற்றும் கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை ஆகிய சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பூங்கா ஏரியை கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை வழியாக எளிதில் சென்றடையலாம். பூங்காவைச் சுற்றி பல இடங்களில், கட்டணமில்லா வாகன நிறுத்த வசதிகள் உள்ளன.[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nature, Filed under; Petaling (2017-04-13). "Taman Tasik Shah Alam". Visit Selangor (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-11-07.
- ↑ "Taman Tasik Shah Alam". Where2go.my (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-11-07.
- ↑ "Shah Alam Lake Gardens, Shah Alam". Eris Goes To (in ஆங்கிலம்). 2022-02-24. Retrieved 2023-11-07.
- ↑ "TAMAN TASIK: All You Need to Know BEFORE You Go (with Photos)". Tripadvisor (in ஆங்கிலம்). Retrieved 2023-11-07.
- ↑ Saturday, The Perpetual (8 June 2024). "The Lake Gardens are right on top of the flower roundabout that merges the Federal Highway with the Shah Alam Highway. The fastest route is Federal Highway Route 2 from downtown KL". The Perpetual Saturday. Retrieved 30 October 2025.
