சா. இராம. மு. இராமசாமி செட்டியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவான் பகதூர்
சாத்தப்பன் இராமநாதன் முத்தையா இராமசாமி செட்டியார்
தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
டிசம்பர், 1909 – 1912
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1872
இறப்பு5 நவம்பர், 1918 (வயது 46)
சென்னை
தேசியம்இந்தியர்
வேலைவங்கியாளர்
தொழில்தன வணிகர்

திவான் பகதூர் சாத்தப்பன் இராமநாதன் முத்தையா இராமசாமி செட்டியார், (1872 – 5 நவம்பர் 1918) வணிகரும், வங்கியாளரும்,சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினரும் ஆவார்.

குடும்பம்[தொகு]

சா. இராம. முத்தையா செட்டியாரின் மூன்று மகன்களில் இராமசாமி செட்டியார் இரண்டாமவர். இவருக்கு மூத்தவர் சா. இராம. மு. சிதம்பரம் செட்டியார், இளையவர் சா. இராம. மு. அண்ணாமலை செட்டியார் ஆவார்.

இந்தியன் வங்கி[தொகு]

1906-ஆம் ஆங்கிலேயர்கள் நடத்திய அர்பத்நாட் வங்கி வீழ்ச்சி அடைந்த போது, இதனை வாங்கி இந்தியன் வங்கி எனப்பெயரிட்டு நிறுவியர்களில் இராமசாமி செட்டியாரும் ஒருவர் ஆவார். 1907-ஆம் ஆண்டில் இராமசாமி இந்தியன் வங்கி இயக்குநர் பதவியிலிருந்து விலகியதால், அவரது தம்பி சா. இராம. மு. அண்ணாமலை செட்டியார் இந்தியன் வங்கியின் இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

அறக்கொடைகள்[தொகு]

1912-ஆம் ஆண்டில் இராமசாமி செட்டியார் சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் விநியோகிக்க ரூபாய் ஒரு இலட்சம் நன்கொடையாக வழங்கினார். 1913-ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் தனது சொந்த செலவில் இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப் பள்ளியை நிறுவினார்.

மேற்கோள்கள்[தொகு]