சா. அன்பழகன்
எஸ். ஏ. அன்பழகன் S. A. Anpalagan | |
|---|---|
| பதவியில் நவம்பர் 1999 – மே 2000 | |
| முன்னையவர் | |
| பின்னவர் | |
| பெரும்பான்மை | 9,694 (1999)[1] |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | Anpalagan a/l Sami Reddy 1963 |
| இறப்பு | 2000 (வயது 37) |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | |
| பிற அரசியல் தொடர்புகள் | |
| முன்னாள் மாணவர் | மலாயா பல்கலைக்கழகம் |
| பணி | அரசியல்வாதி |
சா. அன்பழகன் எனும் அன்பழகன் சாமிரெட்டி (ஆங்கிலம்; மலாய்: S. A. Anpalagan அல்லது Anpalagan a/l Sami Reddy) (1963-2000) என்பவர் மலேசிய அரசியல்வாதி; 1999 முதல் 2000 வரை தெலுக் கெமாங் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்தவர் ஆவார். இவர் மஇகா (MIC) கட்சியின் சிலாங்கூர் மாநிலச் செயலாளராகவும், கோலா லங்காட் மஇகா தொகுதிப் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
1999 மலேசியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் அந்தத் தேர்தலில் மஇகா கட்சியின் மிக இளம் வயது வேட்பாளராக களம் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.[2] இருப்பினும் அவர் மிக இளம் வயதிலேயே (37 வயது) காலமானதால், அவரின் நாடாளுமன்றப் பதவிக்காலம் 5 மாதங்கள் மட்டுமே நீடித்தது.
அரசியல் வாழ்க்கை
[தொகு]மிகக் குறுகிய காலத்தில் மஇகா சிலாங்கூர் மாநிலச் செயலாளராகவும், கோலா லங்காட் தொகுதிப் பிரிவின் தலைவராகவும் பொறுப்பேற்று, இந்திய சமூக இளைஞர்களை அரசியலில் பெருமளவில் ஈர்த்தார். தமது தொகுதிக்கு உட்பட்ட போர்டிக்சன்; மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள், உள்கட்டமைப்பு மேம்பாடுகள்; மற்றும் தோட்டப்புறத் தொழிலாளர்களின் நலன்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார் என்றும் அறியப்படுகிறது.[3]
1999 மலேசியப் பொதுத் தேர்தலில் தெலுக் கெமாங் மக்களவைத் தொகுதியைத் தேசிய முன்னணி கூட்டணிக்கு 9,942 வாக்குகள்[1] பெரும்பான்மையில் மீட்டுக் கொடுத்தார்.
கல்வி
[தொகு]இவர் மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயா பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். தமிழ், மலாய் மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.
இறப்பு
[தொகு]எஸ். ஏ. அன்பழகன் அவர்கள் 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று தன்னுடைய 37-ஆவது வயதில், பதவிக்கு வந்த 5 மாதங்களிலேயே இயற்கை எய்தினார். மலேசிய இந்தியர் சமூகத்தில் ஒரு துடிப்பான; மற்றும் வளர்ந்து வரும் இளம் தலைவராகப் பார்க்கப்பட்ட நிலையில், அவரின் திடீர் மறைவு அவரின் குடும்பத்தினருக்கும் மலேசிய இந்தியர் சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது.
தேர்தல் முடிவுகள்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
% | எதிரணி | பெற்ற வாக்குகள் |
% | மொத்த வாக்கு |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1999 | P.119 தெலுக் கெமாங் | சா. அன்பழகன் (மஇகா) | 26,815 | 61.0% | கோபாலகிருஷ்ணன் நாகப்பன் (ஜசெக) | 17,121 | 39.0% | 48,563 | 9,694 | 22.1% | ||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "S.A. Anpalagan; Ahli Parlimen, P.119 Telok Kemang, Negeri Sembilan 1999-2000)". ElectionData.MY. Retrieved 1 June 2026.
- ↑ "S.A.Anbalagan, it came as a surprise when he was informed about his candidacy for the Teluk Kemang parliamentary constituency" (PDF). lib.perdana.org.my. Retrieved 1 June 2026.
- ↑ "Tuan S. Anpalagan A/L Sami Reddy". Parlimen Malaysia. Retrieved 1 June 2026.