சாஹ்ரியர் நஃபீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாஹ்ரியர் நஃபீஸ்
வங்காளதேசம் வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் சாஹ்ரியர் நஃபீஸ் அகமட்
பட்டப்பெயர் அபீர்
பிறப்பு 25 சனவரி 1986 (1986-01-25) (அகவை 34)
டாக்கா, வங்காளதேசம்
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை இடதுகை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 43) செப்டம்பர் 12, 2005: எ இலங்கை
கடைசித் தேர்வு சனவரி 21, 2010: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap 76) சூன் 21, 2005: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 17, 2010:  எ நியூசிலாந்து
சட்டை இல. 42
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2005-இன்று பாரிசல் கோட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 16 64 47 86
ஓட்டங்கள் 835 1,976 2,772 2,467
துடுப்பாட்ட சராசரி 26.09 33.49 31.14 30.83
100கள்/50கள் 1/4 4/11 3/19 5/11
அதிக ஓட்டங்கள் 138 123* 138 147
பந்து வீச்சுகள் 48
இலக்குகள் 0
பந்துவீச்சு சராசரி
சுற்றில் 5 இலக்குகள் 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 12/– 11/– 28/– 19/–

பிப்ரவரி 21, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்
cricketarchive.com

சாஹ்ரியர் நஃபீஸ் அகமட் (Shahriar Nafees Ahmed, வங்காள: শাহিরয়ার নাফীস আহেমদ பிறப்பு: அக்டோபர் 30, 1987) வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார், இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார் .வங்காளதேச டாக்கா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணி, டாக்கா அணி,வங்காளதேச 19 இன் கீழ், வங்காளதேச 23 இன் கீழ், பாரிசல் கோட்ட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2005 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . செப்டம்பர், 12 இல் கொழும்புவில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 10 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுத்து லசித் மலிங்காவின் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில்24 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுத்து முத்தையா முரளிதரன் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார்.[2] 2013 ஆம் ஆண்டில் வங்ல்காளதேசத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .ஏப்ரல் 17 இல் ஹராரேயில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 39 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்து ஜார்வீசின் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 20 பந்துகளில் 11 ஒட்டங்கள் எடுத்து மீண்டும் ஜார்வீசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.[3]

ஒருநாள் போட்டிகள்[தொகு]

2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரில் இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். சூன் 21 இல் நாட்டின்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியில் 28 பந்துகளில் 10 ஓட்டங்கள் எடுத்து டிரெமியர்டின் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியிலில் இங்கிலாந்து அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்

2011 ஆம் பாக்கித்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணாம் செய்து விளையாடியது. டிசம்பர் 5, சிட்டகொங்கில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். .[1] இந்தப் போட்டியில் 52 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து சயீத் அஜ்மலின் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி வெற்றி பெற்றது.

பன்னாட்டுஇருபது20[தொகு]

2006 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையடியது. நவமபர் 28 இல் குல்னாவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியில் 17 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்துசிகும்பராவின் பந்துவீச்சில் ஆடமிழந்தார். இந்தப் போட்டியில் வங்காளதேச அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4]

தலைவராக[தொகு]

வக்காளதேசத் துடுப்பாட்ட அணியின் முதல் பன்னாட்டு இருபது20 போட்டிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5] அப்போது இவருக்கு வயது 21 ஆண்டுகள் 211 நாட்கள் ஆகும். இதன்மூலம் மிக குறைந்த வயதில் தலைவர் ஆனவர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். முட்க்ஹல் இடத்தில் ரோட்னி டிராட் உள்ளார்.[6]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Shahriar Nafees", Cricinfo, retrieved 2018-05-29
  2. "1st Test, Bangladesh tour of Sri Lanka at Colombo, Sep 12-14 2005 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, retrieved 2018-05-29
  3. "1st Test, Bangladesh tour of Zimbabwe at Harare, Apr 17-20 2013 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, retrieved 2018-05-29
  4. "Only T20I, Zimbabwe tour of Bangladesh at Khulna, Nov 28 2006 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, retrieved 2018-05-29
  5. "Cricket Records | Records | Bangladesh | Twenty20 Internationals | List of captains | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/individual/list_captains.html?class=3;id=25;type=team. 
  6. "Records | Twenty20 Internationals | Individual records (captains, players, umpires) | Youngest captains | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283414.html. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஹ்ரியர்_நஃபீஸ்&oldid=2714894" இருந்து மீள்விக்கப்பட்டது