சாகிவால் மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாஹிவால் மாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கர்நாடகத்தின் ஒசநகரில் உள்ள அம்ருதாதரா கோசாலையில் உள்ள ஒரு சாகிவால் காளை
இந்தியாவில் ஒரு சாகிவால் பசு

சாகிவால் மாடு (Sahiwal) என்பது முதன்மையாக பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நாட்டு மாட்டு இனமாகும். இம்மாட்டினம் பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சாகிவால் மாவட்டத்தைப் பூர்வீகமாக‍க் கொண்டவை. [1] இவற்றின் பால் சிவப்பு சிந்தி மற்றும் புட்டனா இனங்களின் பாலைப் போலவே இருக்கும். சாகிவால் மாடுகள் பஞ்சாப்பில் அருகிவரும் உள்நாட்டு மாட்டு இனமாக கருதப்பட்டு, இந்த மாடுகளை வளர்க்க 'ராஷ்டிரிய கோகுல் மிஷனின்' கீழ் சலுகைகள் வழங்கப் படுகிறது. [2]

விளக்கம்[தொகு]

இந்த மாட்டுகள் லோலா, லம்பி பார், மான்டிகோமெரி, முல்தானி, டெலி என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இவற்றின் தோல் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது வெளிறிய சிவப்பு நிறத்துடன் காணப்படும் சில சமயங்களில் தோலில் வெள்ளைத் திட்டுகளும் இருக்கும்.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Oklahoma State University breed profile". 2007-05-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-08 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  2. "For desi breed 'Sahiwal', Punjab luring farmers with special benefits | punjab$bhatinda". Hindustan Times. 2016-05-06. 2016-10-19 அன்று பார்க்கப்பட்டது.
  3. "சாஹிவால்". அறிமுகம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம். 8 சனவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிவால்_மாடு&oldid=3553297" இருந்து மீள்விக்கப்பட்டது