சாஹர் கோடயாரியின் மரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாஹர் கோடயாரி
தாய்மொழியில் பெயர்سحر خدایاری
பிறப்பு1990
ஈரான், சால்ம்[1]
இறப்பு9 செப்டம்பர் 2019(2019-09-09) (அகவை 29)
ஈரான், தெகுரான்
இறப்பிற்கான
காரணம்
தீக்குளிப்பால் ஏற்பட்ட எரிகாயம்
கல்லறைகும், பெஹெஷ்ட்-இ ஃபதேமே
தேசியம்ஈரானியர்
கல்விஆங்கிலத்தில் பிஏ மற்றும் கணினி பொறியியலில் பிஏ[1]
அறியப்படுவதுதனது சிறைத் தண்டனையை எதிர்த்து தீக்குளிப்பு
பட்டம்புளூ கேர்கள்B
குற்றச்செயல்பெண்கள் நுழைய விதிக்கப்பட்ட தடையை மீறி ஆசாதி மைதானத்திற்குள் நுழைய முயன்றது
Criminal penalty6 மாத சிறைத்தண்டனை (உறுதிப்படுத்தப்படவில்லை)

சாஹர் கோடயாரி (Death of Sahar Khodayari, பாரசீக மொழி; سحر خدایاری‎; 1990 - 9 செப்டம்பர் 2019) [2], புளூ கேர்ள் என்றும் அழைக்கப்படுகிறவர், [a] ஒரு ஈரானிய பெண்மணி ஆவார். இவர் 2019 செப்டம்பர் 2 அன்று தெகுரானின் இஸ்லாமிய புரட்சிகர நீதிமன்றத்தின் முன் தீக்குளித்தார் என்பதற்காக அறியப்படுகிறார். கால்பந்து விளையாட்டை நேரில் காண ஈரானில் பெண்களுக்கு தடையுள்ள நிலையில் தடையை மீறி, கால்பந்து விளையாட்டைக் காண விளையாட்டரங்கினுள் நுழைய முயன்றதற்காக இவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு சற்று முன்னதாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவர் தீக்குளித்தார்.[3] தீக்குளிப்பால் காயமுற்றதால் இவர் ஒரு வாரம் கழித்து இறந்தார். சாஹரின் இந்த தீக்குளிப்பால் ஈரானில் மகளிர் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து பெரும் விவாதத்தை உருவாக்கியது.[4]

2022 உலகக்கோப்பை காற்பந்து கோப்பைக்கான தகுதிப் போட்டிகளை நடத்த ஈரான் நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பன்னாட்டு கால்பந்து போட்டிகளைக் காண ஈரான் பெண்களை விளையாட்டு அரங்குக்குள் அனுமதிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது. இந்தப் பெண் இறந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், ஈரானில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இத்தகைய நுழைவுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.[5] இந்நிகழ்வுக்குப் பின்னர் இஸ்லாமிய குடியரசின் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு குறியீடாக சாஹர் மாறிவிட்டார்.[6]

நிகழ்வும் தற்கொலையும்[தொகு]

சாஹர் கோடயாரி 1990 இல் ஈரானின், பக்தியாரி மாகாணத்தில், சஹர்மஹால் கியார் கவுண்டி, சால்ம் என்ப ஊரில் உள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பத்தில் ஒரு இவருக்கு சகோதரி உண்டு. இவரது குடும்பம் பின்னர் தெஹ்ரானுக்கு குடிபெயர்ந்து வசித்து வந்தது. கோடயாரி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். ஒரு இளம் பெண்ணான இவர் கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகையானார். இந்நிகழ்வுக்குப்பிறகு இவர் சமூக ஊடகங்களில் "புளூ கேர்ள்" என்று அடையாளம் காணப்பட்டார். காரணம் இவருக்கு விருப்பமான கால்பந்து அணி தெஹ்ரானை தளமாகக் கொண்ட எஸ்டெக்லால் எஃப்சியின் அணியியன் நிறம் நீல நிறமாகும்.[7]

2019 மார்ச்சில் எஸ்டேக்லாலுக்கும் அல்-ஐன் எஃப்சிக்கும் இடையிலான ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கின் போட்டிக்காக கோடாரி ஆசாதி விளையாட்டு அரங்கத்துக்குள் நுழைய முயன்றார்.[4] 1981 முதல் ஈரானில் கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்வதற்கும் விளையாட்டு அரங்குக்கு செல்லவும் மகளிருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. (பெண்கள் கைப்பந்து போட்டிகள் போன்ற பிற விளையாட்டுகளில் கலந்து கொள்ளலாம். ) இதனால் இவர் விளையாட்டைக் காண ஆண் உடையில் மாறுவேடத்தில் சென்றார். பாதுகாவலர்களின் பரிசோதனையில் பிடிபட்ட சாஹர், தடையை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். மூன்று இரவுகள் சிறையில் அடைக்கப்பட்டார் . பின்னர் பிணையில் வெளியே வந்தார். இவர் மீதான இந்த வழக்கு வழக்கு நிலுவையில் இருந்தது.

பன்னாட்டு மன்னிப்பு அவையின் குறிப்பின்படி, இது நடந்த ஆறுமாதங்களுக்குப் பிறகு 2019 செப்டம்பர் இரண்டாம் நாளன்று சாஹர் கோடயாரி தெகுரானில் ஒரு புரட்சிகர நீதிமன்றத்தில் நேர்நிற்கவேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. "தடையை மீறியதன் மூலம் பகிரங்கமாக ஒரு பாவச் செயலைச் செய்தது ... ஹிஜாப் அணியாமல் பொது இடத்தில் தோன்றியது" "அதிகாரிகளை அவமதித்தது" போன்ற குற்றங்கள் இவர் மீது பதிவு செய்யப்பட்டன. விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும் நாள். நீதிபதி இல்லாத காரணத்தால் இவரது வழக்கில் எந்த தீர்ப்பும் வெளியிடப்படவில்லை. என்றாலும், இவருக்கு குறைந்தது ஆறு மாத சிறைத்தண்டனை கிடைக்கும் என்று பேசப்பட்டது.[4] நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய கோடயாரி, பிறகு நீதிமன்ற வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். [2]

இவருக்கு ஏற்பட்ட எரிகாயத்தினால் ஒரு வாரம் கழித்து இவர் மருத்துவமனையில் இறந்தார் (தோராயமாக 90% தோல் பரப்பளவு தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தது).[8][9][10] இவர் மருத்துவமனையில் இருந்தபோது ஆறு மாத சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.[11]

2019 அக்டோபரில், 40 ஆண்டுகளில் முதல் முறையாக ஈரானில் ஒரு கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.[12]

குறிப்புக்கள்[தொகு]

  1. நீலம் எசுட்டகுலால் காற்பந்தாட்ட அணியின் சட்டை நிறம்

குறிப்புகள்[தொகு]