சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு (SASTRA Ramanujan Prize), தமிழ்நாட்டில் கும்பகோணத்திலுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தாரால், ஒவ்வொரு ஆண்டும் சீனிவாச இராமானுஜன் ஆர்வம்கொண்ட துறைகளில் சாதனை புரிந்த இளம் கணிதவியலாளர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு வழங்கப்படுகிறது. இப்பரிசு பெறுவதற்குரிய வயது வரம்பு 32 ஆக (இராமானுஜம் மரணமடைந்த போது அவரது வயது) வரையறுக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகை $10,000.

பரிசு பெற்றோர்[தொகு]

ஆண்டு பெயர் பல்கலைக்கழகம்
2005 மன்ஜுல் பார்கவா கண்ணன் சௌந்தரராஜன் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம்
2006 டெரென்சு டொ கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்ஜெல்ஸ்
2007 பென் கிரீன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகம்
2008 அக்‌ஷய் வெங்கடேஷ் ஸ்டென்போர்டு பல்கலைக்கழகம்
2009 காத்ரின் பிரிங்மேன் கொலொகன் பல்கலைக்கழகம் மின்னசோட்டா பல்கலைக்கழகம்
2010 வெய் சாங் ஹார்வேர்டு பல்கலைக்கழகம்
2011 ரோமன் ஹோலொவின்ஸ்கி ஒகையொ ஸ்டேட் பல்கலைக்கழகம்
2012 சீவி யூன்[1] ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "SASTRA Ramanujan Prize 2012". http://gonitsora.com. பார்க்கப்பட்ட நாள் February 11, 2013. {{cite web}}: External link in |publisher= (help)

வெளி இணைப்புகள்[தொகு]