சாஷா திருப்பதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாஷா திருப்பதி
Shashaa Tirupati After Rec March 2017.jpg
மார்ச் 2017 இல் சாஷா திருப்பதி
பிறப்பு 21 திசம்பர் 1987 (1987-12-21) (அகவை 31)
சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா[1]
இருப்பிடம் மும்பை, இந்தியா
தேசியம் கனடியர்
பணி பாடகர், பாடலாசிரியர்,
செயல்பட்ட 
ஆண்டுகள்
1997 - தற்போதுவரை
வலைத்தளம்
www.facebook.com/sashasmusic

சாஷா திருப்பதி (Shashaa Tirupati) தேசிய விருது வென்ற திரைப்படப் பின்னணிப் பாடகி, பேச்சாளரும், நாடக நடிகருமாவார். இவர் இந்திய வம்சா வழியில் வந்த கனடா நாட்டவராவார். காசுமீரத்தைச் சேர்ந்த குடும்ப வழியில் வந்த இவர் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையிசைத் துறைகளில் பாடிவருகிறார்.[2]

"தி ஹம்மா சாங்" (ஓகே ஜானு திரைப்படம்)[3][4]", "பிர் பி தும்கோ சாஹுன்கா", "பாரிஷ்" (ஹால்ஃப் கேர்ள்பிரெண்டு திரைப்படம்)[5] "கன்ஹா"[6] "ஓ சோனா தேரே லியே", "சல் கஹின் டோர்" [7] போன்றவை இவரது பிரபலமான பாடல்கள் ஆகும்.

இந்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம், கன்னடம், வங்காள மொழி, கொங்கணி மொழி, அரபு மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவர் பாடியுள்ளார்.[8][9] பாடகர் மட்டுமல்லாது கசூ, மேற்கத்திய கிதார், கிளபம்,ஆர்மோனியம் ஆகிய வாத்தியக் கருவிகளையும் வாசிக்கக் கூடியவர்.[10] காற்று வெளியிடை தமிழ் திரைப்படத்தில் இவர் பாடிய "வான் வருவான்" பாடலுக்கு 2018 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார்.[11] உல்க்கா மயூர் எழுதி இயக்கிய "ஐ கிளவுட்" என்ற நாடகத்தில் முதன்முதலில் நடித்தார். இந் நாடகத்தின் கதாநாயகனாக பாடலாசிரியர் மயூர் பூரி நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஷா_திருப்பதி&oldid=2509886" இருந்து மீள்விக்கப்பட்டது