சாவுத் தொப்பிக் காளான்
சாவுத் தொப்பிக் காளான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. phalloides
|
இருசொற் பெயரீடு | |
Amanita phalloides (Vaill. ex Fr.) Link (1833) |
சாவுத் தொப்பிக் காளான் (Amanita phalloides) /æməˈnaɪtə fəˈlɔɪdiːz/ என்பது வழக்கமாக சாவுத் தொப்பி என வழங்கப்படுகிறது. இது ஓர் இறப்புதரும் கதைப்பூஞ்சைத் தொகுதிக் (பேசிடியோமைசீட்டுக்) காளானாகும். இது அமனிதா பேரினவகை இனங்களில் ஒன்றாகும். இது ஐரோப்பாவில் பரவலாக வளர்கிறது. இபோது இது உலகின் பல வட்டாரங்களில் முளைவிட தொடங்கியுள்ளது. .அ. பல்லாயிடெசு பல்வேறு அகன்ற இலை மரங்களின் வேர்ப்பூஞ்சையாக இணைவாழ்வு மேற்கொள்கிறது. சிலவேளைகளில், புதிய வட்டாரங்களில் இது தாயகம் அல்லாத இடங்களில் நட்டு வளர்க்கப்படும் ஓக், வாதுமை, பைன் மரங்களால் அறிமுகமாகி வருகிறது. இதன் பெரிய பழவுடல் கொண்ட காளான்கள் கோடையிலும் இலையுதிர் காலத்திலும் தோன்றுகின்றன; இதன் கிண்ணம் அல்லது தொப்பி பச்சை நிறத்துடனும் தண்டும் விதைத்தூள் பையும் வெண்ணிறத்திலும் அமைகின்றன. தொப்பி நிறம் வெண்மை உட்பட, பன்னிறங்களில் மாறக்கூடியது. எனவே நிறத்தைக் கொண்டு இதை இனங்காண முடியாது.
இந்த நச்சுக் காளான் சீசர் காளான், வைக்கோல் காளான் ஆகிய உண்ணும் காளான்களைத் தோற்றதில் ஒத்திருக்கிறது. இதனால், பலர் இதை உண்ண நேர்ந்து நச்சூட்டப் படுகின்றனர். இந்தக் காளான்களில் வெப்ப நிலைப்புடைய அமடாக்சின் எனும் நச்சு வேதிப்பொருள் உள்ளதால் இவை வேப்பம் ஊட்டும்போது மாறுவதில்லை. எனவே, இவற்றைச் சமைத்தாலும் நச்சுத் தன்மை போவதில்லை.
இது அனைத்துக் காளான்களை விட கூடுதலான நச்சுத்தன்மை வாய்ந்ததாகும்மிதன் அரைப்பகுதிக் காளானே மாந்தரைக் கொல்லவல்ல நச்சுப்பொருளைப் பெற்றுள்ளது. காளனால் இறக்கும் பலர் இதனால் தான்கொல்லப்படுகின்றனர்.[1] கிபி 42 இல் உரோமப் பேரரசர் கிளாடிய்சும் கிபி 1740 இல் புனித உரோமப் பேரரசர் ஆறாம் சார்லசும் இக்காளானால் இறந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் இது மிகவும் ஆராய்ச்சிக்கு ஆட்பட்டது. இதன் உயிர்வேதிப் பொருட்கள் அனைத்தும் பிரித்து பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் முதன்மையான நச்சுக் கூறான ஆல்பா-அமனிதா கல்லீரலையும் சிறுநீரகங்களையும் சிதைவுறச் செய்து, அவ்வுறுப்புகள் செயலிழப்பதால் இறப்பு நேர வாய்ப்பேற்படுகிறது.
வகைபாட்டியலும் பெயரீடும்
[தொகு]சாவுத் தொப்பிக் காளான் ஆங்கிலேய மருத்துவர்தாமசு பிரவுனுக்கும் கிறித்தோபர் மெறெட்டுக்கும் இடையில் நிகழ்ந்த தகவல் பரிமாற்றத்தீல் இலத்தீன மொழியில் பெயரிடப்பட்டது.[2]மேலும் இது பிரான்சு நாட்டு தாவரவிலாளர் 1727 இல் சபாத்தியன் வில்லியந்த் இதற்குப் பல்லாயிடெசுப் பூஞ்சை எனப் பெயரிட்டு விவரிப்பும் தந்தார். இது இன்றும் மதிக்கப்படும் பெயராகும்.[3]இந்த அறிவியல் பெயர் பல்லாயிடுகள் என்பது ஆண்குறி வடிவம் எனப் பொருள்பட்டாலும், இத் அதன் உருவ ஒற்றுமைக்காகப் பெயரிடப்பட்டதா அல்லது பால்லசு பேரினம் சார்ந்த ஒட்டுகொம்பைக் குறிப்பிட பெயரிடப்பட்டதா எனத் தெளிவாக விளங்கவில்லை.இந்த அறிவியல் பெயர் பல்லாயிடுகள் என்பது ஆண்குறி வடிவம் எனப் பொருள்பட்டாலும், இத் அதன் உருவ ஒற்றுமைக்காகப் பெயரிடப்பட்டதா அல்லது பால்லசு பேரினம் சார்ந்த ஒட்டுகொம்பைக் குறிப்பிட பெயரிடப்பட்டதா எனத் தெளிவாக விளங்கவில்லை.
1821 ஆம் ஆண்டில் எலியாசு மேக்னசு ஃபிரைசு அதை அகாரிக்கசு ஃபல்லாயிடுகள் என விவரித்தார். மேலும் இதன் வெண்ணிறவகைகள் அனைத்தையும் இதற்குள் உள்ளடக்கினார். .[4] இறுதியாக 1833 ஆம் ஆண்டில் யோகான் என்றிச் பிரெடெரிக் அமனிதா பல்லாயிடெசு எனப் பெயரிட்டார்.[5][6] கிறித்தியன் என்றிக் பெர்சூன் இதற்கு அமனிதா விரிடிசு (Amanita viridis) என 30 ஆண்டுகளுக்கு முன்பே பெயரிட்டிருந்தார்.[7][8]> உலூயிசு செக்ரித்தான் அமனிதா பல்லாயிடெசு (Amanita phalloides) எனும் பெயரை இலிங்குக்கு முன்பே பயன்படுத்தி இருந்தலும் அவர் இருபெயரீட்டு முறையைத் தொடர்ந்துப் பின்பற்றாமையல் ஏற்கப்படாமல் போனது;[9][10] மேலும், சில வகைபட்டு அறிஞர்கள் இதை ஏற்கவில்லை.[11][12]
அமனிதா பல்லாயிடெசு என்பது அமனிதா (Amanita) பல்லாயிடியே பிரிவின் இதுவரை அறிந்த அனைத்து சாவு ஈட்டும் நச்சுக் காளான் இனங்களையும் உள்ளடக்கிய குழுவாகும். இதில் மிகவும் குறிப்பிடத் தக்கனவாக அழித்தல் தேவதைகள் எனும் அ. விரோசா, அ. பைசுப்போரிகெரா ஆகிய இனங்களும் முட்டாள் தொப்பி எனும் (அ. வெர்னா) இனமும் அடங்கும். அ. பல்லாயிடெசு இனம் அழித்தல் தேவதை எனவும் வழங்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் மிகப் பொதுவாக இந்த இனம் முழுவதும் சாவுத் தொப்பிக் காளான் என்றே விளிக்கப்படுகிறது. பிற பொதுப் பெயர்களாக, "ஒட்டும் அமனிதா"[13] " சாவ அமனிதா" என்பனவும் வழங்குகின்றன.[14]
மிக அருகியே காணப்படும் அனைத்து வெண்ணிறவகைகளும் மாக்சு பிரித்செல்மேயரால் அ. பல்லாயிடெசு எஃப்.ஆல்பா என விவரிக்கப்பட்டது. f. alba by Max Britzelmayr,[15][16] ஆனால், இது இயல்பான சாவுத் தொப்பிகளுடனேயே எங்கும் வளர்கிறது. இது 2004 இல் தனியொரு வகைமையாக அ. வெர்னா வகை. தார்டா இனத்தில் அடக்கி விவரிக்கப்பட்டது.[17] உண்மையான அமனிதா வெர்னா இனங்கள் இளவேனில் காலத்தில் பழவுடல் தோன்றி, பொட்டாசியம் நீரகவைது கரைசலில் மஞ்சள் நிறமாகிறது. ஆனால், அ. பல்லாயிடெசு அப்படி மாறுவதில்லை.[15]
விவரிப்பு
[தொகு]சாவுத் தொப்பிக் காளான் தரைக்கு மேலே பெரிய பழவுடலைக் கொண்டுள்ளது. இதன் அரைக்கோள வடிவக் கிண்ண விட்டம்5 செமீ முதல் 15 செமீ வரை அமைகிறது. முதலில் இது வட்ட வடிவமாக இருந்தாலும் முதிர்ந்ததும் தட்டையாகிவிடும்.[18] தொப்பியின் நிறம் வெளிர்த்த, மஞ்சளான, ஆலிவ் பச்சையான நிறங்களில் அமையலாம். விளிம்பு எப்போதும் வெளிர்த்தே அமையும். மழைக்கு அப்புறமும் தொப்பி வெளிர்த்துவிடும். இதன் தொப்பியின் பரப்பு ஈரமாக உள்ளபோது ஒட்டிக்கொள்ளக் கூடியதாக அமைகிறது. இதை எளிதாக உரித்து விடலாம். இந்த இயல்பு அனைத்து உண்ணும் பூஞ்சைகளுக்கும் அமைதலால் சிக்கலான கூறாகும்.[19] எஞ்சிய தொப்பிக் கீழ்ப்பகுதி பாவாடையைப் போல வலய வடிவத்தில் 1செமீ முதல் 1.5 செமீ தடிப்புக்கு அமையும். செறிவான வெண்ணிற விதைப்பை கட்டற்றது. காம்பும் வெண்ணிறத்தில் சிதறிய சாம்பல்நிற ஆலிவ் செதிளோடு காணப்படும். இது வட்ட வடிவ விட்டத்தில் 1 செமீ முதல் 2 செமீ தடிப்புடன் 8 செமீ முதல் 15 செமீ உயரம் வரை வீங்கிக் கிழிந்த பைப்போன்ற அடிப்பகுதியுடன் அமைகிறது.[18] இந்த அடிப்பகுதி இலைக்குப்பைகளால் மறைந்திருக்கலாம். எனவே, சுற்றியுள்ள சிதறிய பரல்மண்ணை நீக்கிச் சரிபார்க்கலாம்.[20]
தொடக்கத்தில் இதன் மணம் தேனின் மென்மணம் போலவும் நாளடைவில் செறிந்த நெடிவாய்ந்த இனிப்புடன் தாங்கவொண்ணாததாக இருக்கும்.[21] இளங்காளான்கள் தரையில் இருந்து வெண்முட்டையைப் போல பொதுத் திரையோடு அமைந்து பிறகு திரை முறிந்து அழிய அடிப்பகுதி எச்சம் காணப்படும்.யைதன் விதைத்தூள் வகைமை "அமனிதா" நிறத்தோடு வெண்மையாக இருக்கும். ஒளிபுகும் விதைத்தூள்கள் கோள வடிவம் முதல் முட்டை வடிவம் வரை 8 முதல் 10 நுமீ அளவு நீளத்தில், அயோடின் கலந்த நீல நிறத்தில் அமையும்.[21] இதன் விதைபைகள், மாறாக, வெளிர் அல்லி அல்லது கந்தக அமிலம் செறிந்த வெளிர்சிவப்பாக இருக்கும்.[22][23]
வாழிடமும் பரவலும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Benjamin, p.200.
- ↑ The fungi Phalloides" I found not very far from Norwich, large and very fetid......I have a part of one dried still by me. Letter dated August 18th 1668 in Vol 3. The Works of Sir Thomas Browne ed. Simon Wilkins 1834
- ↑ Vaillant, Sébastien (1727). Botanicon Parisiense (in லத்தின்). Leide & Amsterdam: J. H. Verbeek and B. Lakeman. இணையக் கணினி நூலக மைய எண் 5146641.
- ↑ Fries, Elias Magnus (1821). Systema Mycologicum I (in லத்தின்). Gryphiswaldiae: Ernesti Mauritii. இணையக் கணினி நூலக மைய எண் 10717479.
- ↑ Persoon, Christian Hendrik (1797). Tentamen Dispositionis Methodicae Fungorum (in லத்தின்). Lipsiae: P.P. Wolf,. இணையக் கணினி நூலக மைய எண் 19300194.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ Persoon, Christian Hendrik (1801). Synopsis Methodica Fungorum (in லத்தின்). Göttingen: H. Dietrich. இணையக் கணினி நூலக மைய எண் 28329773.
- ↑ Persoon, Christian Hendrik (1797). Tentamen Dispositionis Methodicae Fungorum (in லத்தின்). Lipsiae: P.P. Wolf. இணையக் கணினி நூலக மைய எண் 19300194.
- ↑ Persoon, Christian Hendrik (1801). Synopsis Methodica Fungorum (in லத்தின்). Göttingen: H. Dietrich. இணையக் கணினி நூலக மைய எண் 28329773.
- ↑ Donk, M.A. (June 1962). "On Secretan's Fungus Names". Taxon 11 (5): 170–173. doi:10.2307/1216724.
- ↑ Demoulin, V. (November 1974). "Invalidity of Names Published in Secretan's Mycographie Suisse and Some Remarks on the Problem of Publication by Reference". Taxon 23 (5/6): 836–843. doi:10.2307/1218449. https://semanticscholar.org/paper/323a0a043fbd8bbd99cfcf7234e340b06e341933.
- ↑ Rolf Singer; Robert E. Machol (June 1962). "Are Secretan's Fungus Names Valid?". Taxon 26 (2/3): 251–255. doi:10.2307/1220563.
- ↑ Robert E. Machol (August 1984). "Leave the Code Alone". Taxon 33 (3): 532–533. doi:10.2307/1221006.
- ↑ North, Pamela Mildred (1967). Poisonous plants and fungi in color. London: Blandford Press. இணையக் கணினி நூலக மைய எண் 955264.
- ↑ Benjamin, p.203
- ↑ 15.0 15.1 Tulloss, Rodham E. "Amanita verna". Studies in the Amanitaceae. பார்க்கப்பட்ட நாள் 2007-05-22.
- ↑ Jordan & Wheeler, p.109
- ↑ Neville, Pierre; Poumarat, Serge (2004). Amaniteae: Amanita, Limacella and Torrendia. Fungi Europaei (9). Alassio: Edizioni Candusso. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-901057-3-9.
- ↑ 18.0 18.1 A Colour Atlas of Poisonous Fungi. Wolfe Publishing. 1990. pp. 26–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7234-1576-3.
{{cite book}}
: Unknown parameter|vautho=
ignored (help) - ↑ Jordan & Wheeler, p.99
- ↑ Jordan & Wheeler, p.108
- ↑ 21.0 21.1 Zeitlmayr, p.61
- ↑ Jordan, Michael (1995). The Encyclopedia of Fungi of Britain and Europe. David & Charles. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7153-0129-6.
- ↑ "California Fungi: Amanita phalloides". MykoWeb.com. Archived from the original on 1 June 2007. பார்க்கப்பட்ட நாள் June 1, 2007.
நூல்தொகை
[தொகு]- Benjamin, Denis R. (1995). Mushrooms: Poisons and Panaceas—A Handbook for Naturalists, Mycologists and Physicians. New York: WH Freeman and Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7167-2600-5.
- Jordan, Peter; Wheeler, Steven (2001). The Ultimate Mushroom Book. London: Hermes House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85967-092-7.
- Zeitlmayr, Linus (1976). Wild Mushrooms: An Illustrated Handbook. Hertfordshire: Garden City Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-584-10324-3.
வெளி இணைப்புகள்
[தொகு]- UK Telegraph Newspaper (September 2008) - One woman dead, another critically ill after eating Death Cap fungi
- AmericanMushrooms.com - The Death Cap Mushroom Amanita phalloides
- Amanita phalloides: the death cap
- Amanita phalloides: Invasion of the Death Cap
- Key to species of Amanita Section Phalloideae from North and Central America - Amanita studies website
- California Fungi—Amanita phalloides
- Death cap in Australia - ANBG website
- On the Trail of the Death Cap Mushroom from National Public Radio