சாவீர கம்பத கோயில்

ஆள்கூறுகள்: 13°04′27.3″N 74°59′51.5″E / 13.074250°N 74.997639°E / 13.074250; 74.997639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவீர கம்பத கோயில்
ஆயிரங்கால் கோயில் (Sāvira Kambada Basadi))
சாவீர கம்பத கோயில், கர்நாடகா
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மூதாபித்திரி, தெற்கு கன்னடம் மாவட்டம், கர்நாடகா
புவியியல் ஆள்கூறுகள்13°04′27.3″N 74°59′51.5″E / 13.074250°N 74.997639°E / 13.074250; 74.997639
சமயம்சமணம்
இணையத்
தளம்
www.jainkashi.com

சாவீர கம்பத கோயில் அல்லது திருபுவன திலக சூடாமணி கோயில் (Saavira Kambada Temple) (கன்னடம்: ಸಾವಿರ ಕಂಬದ ಬಸದಿ Sāvira Kambada Basadi) or Tribhuvana Tilaka Cūḍāmaṇi (சமக்கிருதம்: त्रिभुवन तिलक चूडामणि), சமண சமய வழிபாட்டுத் தலமாகும். இக்கோயில் ஆயிரம் தூண்களைக் கொண்டுள்ளதால், இதனை ஆயிரம் தூண் கோயில் என்பர். இக்கோயில் கிபி 1430ல் விஜயநகர பேரரசின் தேவராயரால் கட்டப்பட்டது.

அமைவிடம்[தொகு]

இச்சமணக் கோயில், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின், தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள மூதாபித்திரி எனும் ஊரில் அமைந்துள்ளது. மங்களூரு நகரத்திலிருந்து வடகிழக்கில் 34 கிமீ தொலைவில் இச்சமணக் கோயில் உள்ளது. [1]

இக்கோயில் சமண சமயத்தின் 8வது தீர்த்தங்கரர் சந்திரபிரபாவிற்கு அர்பணிக்கப்பட்டதால், இக்கோயிலை சந்திரநாதர் கோயில் என்றும் அழைப்பர். சந்திரபிரபாவின் எட்டு அடி உயரச் சிலை இக்கோயில் சன்னதியில் வைத்து வழிபடப்படுகிறது.[2] இக்கோயிலின் 60 அடி உயர கருங்கல்லான மானஸ்தம்பம் (கொடி மரம்) புகழ் பெற்றது.[3]

மூதாபத்திரி ஊரில் உள்ள 18 சமணக் கோயில்களில், சாவீர கம்பத கோயில் மிகவும் கலைநயத்துடன் கட்டப்பட்ட கோயில் எனக்கருதப்படுகிறது. [4]

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Distance from Mangalore to Moodabidri". DistancesFrom.com. Retrieved 11 June 2015.
  2. "Moodbidri — woods of yore". Online Edition of The Hindu, dated 2005-04-24 (Chennai, India). 2005-04-24 இம் மூலத்தில் இருந்து 2005-04-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050426232914/http://www.hindu.com/mag/2005/04/24/stories/2005042400340800.htm. பார்த்த நாள்: 2008-01-25. 
  3. Thousand Pillars Temple, Moodbidri
  4. Pratyush Shankar. "FRAMEWORK FOR UNDERSTANDING MOODABIDRI TEMPLES AS PUBLIC PLACES" (PDF). 15 January 2006. CEPT University, Ahmedabad, India. Archived from the original (PDF) on 26 ஏப்ரல் 2012. Retrieved 4 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
1000 Pillar Temple (Moodabidri)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவீர_கம்பத_கோயில்&oldid=3553602" இலிருந்து மீள்விக்கப்பட்டது