சாவி இராஜாவாத்
சாவி இராஜாவாத் | |
|---|---|
சாவி இராஜாவாத் 2012-இல் | |
| சர்பாஞ் | |
| முன்னையவர் | நரேந்திர சிங் இராஜாவாத், அர்சு சவுகான் |
| தொகுதி | சோடா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 4 சனவரி 1977 இராசத்தான் |
| வாழிடம் | தோடாராஜ்சிங், இராசத்தான் |
சாவி இராஜாவத் (Chhavi Rajawat) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தினைச் சேர்ந்த சமூக, பெண் செயற்பாட்டாளர் ஆவார்.
செயல்பாடு
[தொகு]சாவி இராஜாவாத், ஜெய்ப்பூரிலிருந்து 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ள சோடா கிராமத்தின் சர்பஞ்சாக இருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை வகித்த போதிலும், சாவி எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்திருக்கவில்லை.[1] [2] சர்பஞ்ச் பதவியை வகித்த மிக இளைய நபர் இவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[3]
இளமை
[தொகு]இராசத்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இராஜாவத் பிறந்தார். இவர் மால்புரா வட்டத்தில் உள்ள சோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால் டோங் மாவட்டத்தில் பணக்கார, பிரபுக்களுடன் தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் இரிஷி பள்ளத்தாக்கு பள்ளி, மாயோ கல்லூரி பெண்கள் பள்ளி, சீமாட்டி சிறீ ராம் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளார். புனேவின் பாலாஜி நவீன மேலாண்மை நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார்.[4][5][6]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இராஜாவத் தனது நேரத்தைத் தனது கிராமமான சோடா மற்றும் ஜெய்ப்பூர் இடையே பகிர்ந்து கொள்கிறார். இங்கு இவர் தனது பெற்றோருடன் வசித்துவருகிறார். குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு உணவகம், இவரது குதிரைப் பயிற்சிப் பள்ளியின் ஏராளமான குதிரைகளையும் கவனித்து வருகிறார்.[7]
கல்வியினை முடித்த பின்னர் டைம்ஸ் ஆஃப் இந்தியா, கார்ல்சன் உணவகக் குழுமம், ஏர்டெல் போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார். தற்பொழுது, இவர் இராசத்தானின் டோங் மாவட்டத்தில் உள்ள சோடா கிராமத்தில் கிராம சபையின் சர்பஞ்ச் பணியாற்றுகிறார்.
விருதுகளும் கொளரவங்களும்
[தொகு]மார்ச் 25,2011 அன்று, ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற 11ஆவது வறுமை ஒழிப்பு உலக மாநாட்டில் இராஜாவத் கலந்துகொண்டார்.
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. பெ. ஜெ. அப்துல் கலாம் புதுதில்லியில் நடைபெற்ற தொழில்நுட்பத் தின விழாவில் இவருக்குத் தொழில்நுட்ப நாள் விருதினை வழங்கி கௌரவித்தார்.[8] ஐ. பி. என். எல். வைவ் மூலம் "இளம் இந்தியத் தலைவர்" என்ற பெருமையையும் பெற்றார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "LSR Grad quits job to be Sarpanch". News Daily (The Times of India). 8 March 2010. http://timesofindia.indiatimes.com/articleshow/5655761.cms.
- ↑ "Indian Sarpanch dazzles at UN Meet". Mumbai Mirror (The Times Group). 28 March 2011. http://www.mumbaimirror.com/articleshow/16113215.cms.
- ↑ "Chhavi Rajawat, an MBA graduate, is India's youngest sarpanch". NDTV. 21 March 2011. Retrieved 1 January 2016.
- ↑ "Hotshot Sarpanch brings B-school finesse, fizz to a small-town named Soda" (in en). @businessline. https://www.thehindubusinessline.com/news/variety/hotshot-sarpanch-brings-bschool-finesse-fizz-to-a-smalltown-named-soda/article7346421.ece.
- ↑ "Youngest MBA sarpanch visits Kolkata - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kolkata/youngest-mba-sarpanch-visits-kolkata/articleshow/57069707.cms.
- ↑ "Bihar's Chhavi Rajawat has a family of 14,000 to care for - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/patna/bihars-chhavi-rajawat-has-a-family-of-14k-to-care-for/articleshow/57068948.cms.
- ↑ "Chhavi Rajawat: The woman sarpanch who transformed her village - Woman who transformed her village". The Economic Times. Retrieved 2018-03-13.
- ↑ "Former President APJ Abdul Kalam honours Chhavi Rajawat". Outlook (Indian magazine). 11 May 2011 இம் மூலத்தில் இருந்து 29 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029211550/http://photogallery.outlookindia.com/default.aspx?pt=3&ptv=0&pyr=0&date=5%2F11%2F2011&photono=34&pn=1&pgid=40111.
- ↑ "Young Indian Leader". CNN-IBN. 2010. http://www.ibnlive.com/videos/india/yil-chhavi-rajawat-351309.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- டுவிட்டரில் சாவி இராஜாவாத்
- அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 18 மார்ச் 2019 at the வந்தவழி இயந்திரம் 18 March 2019 at the Wayback Machine