சாவித்திரி சண்முகம்
தோற்றம்
சாவித்திரி சண்முகம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1957–1962 | |
| தொகுதி | கோயம்புத்தூர்-I |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 18 நவம்பர் 1913 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | அரசியல்வாதி |
சாவித்திரி சண்முகம் (Savithri Shanmugam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் நகரம் பந்தையச்சாலை பகுதியினைச் சேர்ந்தவர். தூய பிரான்சிசு மடத்துப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கோயம்புத்தூர்-I சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]