சாவகம் கீரி
சாவகம் கீரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | உர்வா
|
இனம்: | உ. சாவானிகா
|
இருசொற் பெயரீடு | |
உர்வா சாவானிகா (இ. ஜெப்ராய் செயிண்ட்-கிலேர், 1818) | |
துணையினம் | |
உ. சா. சாவானிகா | |
சாவகம் கீரி பரம்பல் |
சாவகம் கீரி (Javan mongoose-உர்வா சாவானிகா) என்பது தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு கீரி சிற்றினமாகும்.[1]
வகைப்பாட்டியல்
[தொகு]இக்னியோமன் சாவனிகசு என்பது 1818ஆம் ஆண்டில் எட்டியென் ஜியோப்ராய் செயிண்ட்-கிலேர் என்பவரால் முன்மொழியப்பட்ட இருசொற் பெயர் ஆகும். இது பின்னர் கெர்பெசுடெசு பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது. ஆனால் அனைத்து ஆசியக் கீரிகளும் இப்போது உர்வா பேரினத்தைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.[2]
19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில், பல விலங்கியல் மாதிரிகள் விவரிக்கப்பட்டன. இவை இப்போது துணையினங்களாகக் கருதப்படுகின்றன.
- 1841ஆம் ஆண்டில் பால் கெர்வாய்சு எழுதிய கெர்பெசுடெசு எக்சிலிசு வியட்நாமில் உள்ள டூரேனில் சேகரிக்கப்பட்ட ஒரு மாதிரியாகும்.[3]
- 1875ஆம் ஆண்டில் ஜான் ஆண்டர்சன் விவரித்த கெர்பெசுடெசு ராப்ளெசி சுமாத்திராவிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியாக இருந்தது.[4]
- 1909ஆம் ஆண்டில் ஜோயல் ஆசாப் ஆலன் விவரித்த முங்கோசு ரூபிப்ரான்சு சீனாவின் எய்னான் தீவில் உள்ள வுஷி மலையினைச் சுற்றிச் சேகரிக்கப்பட்ட எட்டு வயது முதிர்ச்சியடைந்த மாதிரிகள் ஆகும்.[5]
- 1910ஆம் ஆண்டில் எர்ன்ஸ்ட் சுவார்சு எழுதிய முங்கோசு எக்சிலிசு பேங்காக்கில் தீபகற்பத்தில் சேகரிக்கப்பட்ட ஒரு கீரியின் தோல் மற்றும் மண்டை ஓடு மூலம் விவரிக்கப்பட்டது ஆகும்.[6]
- 1917இல் செசில் போடன் குளோசு விவரித்த முங்கோசு சியாமென்சிசு என்பது வடக்கு தாய்லாந்தில் சேகரிக்கப்பட்ட ஒரு முதிர்ச்சியடைந்த பெண் கீரியின் தோலின் அடிப்படையிலானது.[7]
- 1917ஆம் ஆண்டில் குளோசு எழுதிய முங்கோசு பரகென்சிசு என்பது மலேசியா தீபகற்பத்தில் உள்ள பேராக், தைப்பிங் அருகே சேகரிக்கப்பட்ட பெண் கீரியின் தோல் மற்றும் மண்டை ஓடு ஆகும்.[8]
- கெர்பெசுடெசு சாவனிகசு ஜெராபாய் (Herpestes javanicus tjerapai) 1949ஆம் ஆண்டில் ஹென்றி ஜேக்கப் விக்டர் சோடி என்பவரால் விவரிக்கப்பட்டது. இது சுமாத்ராவின் ஆச்சே மாகாணத்தில் சேகரிக்கப்பட்ட ஒரு வயது வந்த ஆண் கீரி ஆகும்.[9]
சிறிய இந்தியக் கீரி (உ. அரோபங்டாடா) ஒரு காலத்தில் சாவகம் கீரியின் துணையினமாகக் கருதப்பட்டது. 18 சாவகம் மற்றும் சிறிய இந்தியக் கீரியிலிருந்து முடி மற்றும் திசு மாதிரிகளின் மரபணு பகுப்பாய்வு இவை இரண்டு உயிரினக்கிளைகளை உருவாக்குகின்றன. இவை தனித்துவமான இனங்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. மியான்மரில் உள்ள சல்வீன் ஆறு அநேகமாக இரண்டு சிற்றினங்களுக்கு இடையே ஒரு புவியியல் தடையாக இருக்கலாம்.[10] உர்வ பேரினங்களின் இழைமணிகளின் டி. ஆக்சி ரைபோ நியூக்லியிக் காடிபகுப்பாய்வு, சாவகம் கீரி, இந்தியச் சாம்பல் கீரியுடன் (யு. எட்வார்ட்சி) ஒரு சகோதர குழுவினை உருவாக்குகிறது என்பதை வெளிப்படுத்தியது. சாவகம் கீரி சுமார் 0.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மியோசீன் காலத்தில் தோன்றியிருக்கலாம்.[11]
சிறப்பியல்புகள்
[தொகு]சாவகம் கீரியின் உரோமங்கள் இரும்பு முதல் பழுப்பு வண்ணம் வரை காணப்படும்.[4][7] இதன் காதுகளில் குறுகிய முடிகள் உள்ளன. இதன் வால் சுருங்கிக் காணப்படும்.[4]
பரவலாக்கம் மற்றும் வாழ்விடம்
[தொகு]சாவகம் கீரி மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தீபகற்ப மலேசியா மற்றும் இந்தோனேசியத் தீவுகளான சுமாத்திரா மற்றும் சாவகத்தினைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கு இது 1,800 மீ (5,900 ) உயரத்தில் வாழ்கிறது. சீனாவில் அதன் இருப்பு நிச்சயமற்றது.[1] தாய்லாந்தில், சாவகம் கீரி சிதைந்த கலப்பு இலையுதிர் காடு, உலர்ந்த பசுமை மற்றும் உலர்ந்த திப்டெரோகார்ப் காடுகள், அத்துடன் பயன்பாட்டில் இல்லாத தோட்டங்கள் மற்றும் அன்னாசி வயல்கள் உள்ளிட்ட பல்வேறு வாழ்விடங்களில் காணப்படுகிறது.[12]
ஊடுருவும் இனங்கள்
[தொகு]ஐரோப்பாவில், இந்த இனம் 2016 முதல் ஊடுருவிய அந்நிய இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.[13] இதன் பொருள் இந்த இனத்தை இறக்குமதி செய்யவோ, இனப்பெருக்கம் செய்யவோ, கொண்டு செல்லவோ, வணிகமயமாக்கவோ அல்லது வேண்டுமென்றே ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் சுற்றுச்சூழலில் அறிமுகப்படுத்தவோ முடியாது.[14]
நடத்தையும் சூழலியலும்
[தொகு]சாவகம் கீரி பெரும்பாலும் தனிமையாக வாழக்கூடியன. ஆண்கள் சில நேரங்களில் சமூகக் குழுக்களை உருவாக்கி, பாறைகளில் வாழிடங்களைப் பகிர்ந்து கொள்கிறது. கர்ப்பக் காலம் 49 நாட்கள் ஆகும். ஒரு முறை 2 முதல் 5 குட்டிகளைப் பெற்றெடுக்கும். ஆண்கள் 4 மாத வயதில் பாலியல் முதிர்ச்சியடைகின்றன.
சாவகம் கீரி பெரும்பாலும் பூச்சிகளைச் சாப்பிடுகின்றன. ஆனால் இவை நண்டு, தவளை, சிலந்தி, தேள், பாம்பு, சிறிய பாலூட்டிகள், பறவைகள் மற்றும் முட்டைகளையும் உண்ணும்.
அச்சுறுத்தல்கள்
[தொகு]சுமாத்திராவில், சாவகம் கீரி செல்லப்பிராணி வர்த்தகத்திற்காகக் காட்டுப் பிடிக்கப்படுகிறது. 1997 மற்றும் 2001க்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் போது மேடனில் உள்ள வனவிலங்கு சந்தைகளில் இது மிகவும் பொதுவாகப் வாங்கப்பட்ட இனமாகும்.[15] லாவோஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் பெரிதும் வேட்டையாடப்பட்டாலும், இது பொதுவாக புறநகர்ப் பகுதிகளில் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Chutipong, W.; Duckworth, J. W.; Timmins, R.; Willcox, D. H. A.; Ario, A. (2016). "Herpestes javanicus". IUCN Red List of Threatened Species 2016: e.T70203940A45207619. https://www.iucnredlist.org/species/70203940/45207619.
- ↑ "ASM Mammal Diversity Database". www.mammaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
- ↑ Gervais, P. (1841). "Observations géologiques et anatomiques sur diverses espèces de Mammifères nouveaux ou peu connus". Extraits des procès-verbaux des séances 6: 101–103. https://archive.org/details/extraitsdesproc46183941soci/page/101.
- ↑ 4.0 4.1 4.2 Anderson, J. (1875). "Description of some new Asiatic mammals and Chelonia". The Annals and Magazine of Natural History; Zoology, Botany, and Geology. 4 16 (94): 282 285. https://archive.org/details/annalsmagazineof4161875lond/page/282/mode/2up.
- ↑ Allen, J. A. (1909). "Further notes on mammals from the Island of Hainan, China". Bulletin of the American Museum of Natural History 26 (17): 239–242. http://digitallibrary.amnh.org/bitstream/handle/2246/465//v2/dspace/ingest/pdfSource/bul/B026a17.pdf?sequence=1&isAllowed=y.
- ↑ Schwarz, E. (1910). "Two new Oriental Viverridae". The Annals and Magazine of Natural History; Zoology, Botany, and Geology. 8 6 (32): 230–232. https://archive.org/details/annalsmagazineof861910lond/page/230.
- ↑ 7.0 7.1 Kloss, C. B. (1917). "On a new Mongoose from Siam". The Journal of the Natural History Society of Siam 2 (3): 215–217. https://archive.org/details/journalofnatural02natu/page/214/mode/2up.
- ↑ Kloss, C. B. (1917). "On the mongooses of the Malay peninsula". Journal of the Federated Malay States Museums 7: 123–125. https://eurekamag.com/research/023/261/023261095.php.
- ↑ Sody, H.J.V. (1949). "Notes on some Primates, Carnivora, and the Babirusa from the Indo-Malayan and Indo-Australian regions (with descriptions of 10 new species and subspecies)". Treubia 20 (2): 121–190. https://archive.org/details/treubia-v20i2-2624.
- ↑ Veron, G.; Patou, M.L.; Pothet, G.; Simberloff, D.; Jennings, A.P. (2007). "Systematic status and biogeography of the Javan and small Indian mongooses (Herpestidae, Carnivora)". Zoologica Scripta 36 (1): 1–10. doi:10.1111/j.1463-6409.2006.00261.x. https://www.researchgate.net/publication/230280673.
- ↑ Patou, M. L.; Mclenachan, P. A.; Morley, C. G.; Couloux, A.; Jennings, A. P.; Veron, G. (2009). "Molecular phylogeny of the Herpestidae (Mammalia, Carnivora) with a special emphasis on the Asian Herpestes". Molecular Phylogenetics and Evolution 53 (1): 69–80. doi:10.1016/j.ympev.2009.05.038. பப்மெட்:19520178. https://www.researchgate.net/publication/26286265.
- ↑ Chutipong, W.; Tantipisanuh, N.; Ngoprasert, D.; Lynam, A. J.; Steinmetz, R.; Jenks, K.E.; Grassman Jr., L.I.; Tewes, M. et al. (2014). "Current distribution and conservation status of small carnivores in Thailand: a baseline review". Small Carnivore Conservation 51: 96–136. https://smallcarnivoreconservation.com/index.php/sccg/issue/view/271/73#page=94.
- ↑ "List of Invasive Alien Species of Union concern - Environment - European Commission". ec.europa.eu. பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.
- ↑ "REGULATION (EU) No 1143/2014 of the European parliament and of the council of 22 October 2014 on the prevention and management of the introduction and spread of invasive alien species".
- ↑ Shepherd, C.R.; Sukumaran, J. & Wich, S.A. (2004). Open season: an analysis of the pet trade in Medan, Sumatra, 1997–2001 (PDF) (Report). Petaling Jaya, Selangor, Malaysia: TRAFFIC Southeast Asia.
மேலும் வாசிக்க
[தொகு]Tseng, Z.; Flynn, J. (2015). "Convergence analysis of a finite element skull model of Herpestes javanicus (Carnivora, Mammalia): Implications for robust comparative inferences of biomechanical function". Journal of Theoretical Biology 365: 112–148. doi:10.1016/j.jtbi.2014.10.002. பப்மெட்:25445190. Bibcode: 2015JThBi.365..112T.