சாவகம் கருப்பு வெள்ளை மைனா
சாவகம் கருப்பு வெள்ளை மைனா | |
---|---|
ஜெம்பைரா லோகா விலங்குகாட்சி சாலையில் கொல்லைப்படுத்தப்பட்ட மைனா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுடுருனிடே
|
பேரினம்: | |
இனம்: | கி. ஜல்லாக்
|
இருசொற் பெயரீடு | |
கிராகுபிகா ஜல்லாக் (கோர்சூபீல்டு, 1821) |
சாவகம் கருப்பு வெள்ளை மைனா (Javan pied myna; கிராகுபிகா ஜல்லாக்) என்பது இசுடர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கருப்பு வெள்ளை வகை மைனா சிற்றினம் ஆகும். இதன் இந்தோனேசியப் பெயர் ஜலக் சுரென்.
விளக்கம்
[தொகு]சாவகம் கருப்பு வெள்ளை மைனாவின் இறகுகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும் கழுத்து கருமை நிறத்திலும் காணப்படும். இது சாவகம் மற்றும் பாலி தீவில் பெரும்பகுதியில் காணப்பட்டது. ஆனால் 2010களின் நடுப்பகுதியில் இங்கிருந்து அழிக்கப்பட்டிருக்கலாம் எனவும் முன்னதாகத் தெற்கு சுமாத்திராவில் 1990களில் அழிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.[2] சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் மற்றும் விவசாய நிலங்களில் அதிகப் பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக, இது இப்போது காடுகளில் அழிந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.[2][3][4]
வகைப்பாட்டியல்
[தொகு]சாவகம் கருப்பு வெள்ளை மைனா முன்பு கறுப்பு வெள்ளை மைனாவின் துணையினமாகக் கருதப்பட்டது. இது இப்போது மூன்று சிற்றினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் அலகின் தளத்தில் சிவப்பு-ஆரஞ்சு நிறம் இல்லாததாலும், கண்களைச் சுற்றிச் சிவப்பு-ஆரஞ்சுப் புறத் தோல் திட்டாலும் மற்ற சிற்றினங்களிலிருந்து வேறுபடுத்திக் காணப்படுகின்றது.[3][5] கொல்லைப்படுத்தப்பட்ட சியாமிய கருப்பு வெள்ளை மைனா (கி. புளோரி) சாத்தியமான கலப்பினத்தால் இது அச்சுறுத்தப்படுகிறது. பாலி பறவைப் பூங்காவில் உள்ள இத்தகைய மக்கள்தொகையில் இனப்பெருக்கம் செய்ய மரபணு ரீதியாகத் தூய கொல்லைப்படுத்தப்பட்ட பறவைகளைப் பாதுகாப்பதும், இறுதியில் சிற்றினத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதும் அவசியம்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2017). "Gracupica jalla". IUCN Red List of Threatened Species 2017. https://www.iucnredlist.org/species/103890801/118590020. பார்த்த நாள்: 27 July 2021.
- ↑ 2.0 2.1 Ali, S & S D Ripley (1986). Handbook of the birds of India and Pakistan. Volume 5 (2nd ed.). New Delhi: Oxford University Press. pp. 172–175.
- ↑ 3.0 3.1 3.2 Baveja, Pratibha; Garg, Kritika M.; Chattopadhyay, Balaji; Sadanandan, Keren R.; Prawiradilaga, Dewi M.; Yuda, Pramana; Lee, Jessica G. H.; Rheindt, Frank E. (2021). "Using historical genome-wide DNA to unravel the confused taxonomy in a songbird lineage that is extinct in the wild" (in en). Evolutionary Applications 14 (3): 698–709. doi:10.1111/eva.13149. பன்னாட்டுத் தர தொடர் எண்:1752-4571. பப்மெட்:33767745. Bibcode: 2021EvApp..14..698B.
- ↑ "From common to captive, Javan pied starlings succumb to songbird trade". Mongabay Environmental News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.