சாளை மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

எண்ணெய் சார்டைன் எனப்படும் சாளை மீன் இந்திய கடல் மீன்களிலேயே வியாபார அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மீனாகும். இது கேரளாவில் மலபார் பகுதிகளில் மத்தி என்றும் தமிழில் நொணலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் செளராஷ்டிராவில் தொடங்கி சோழ மண்டல கடற்கரை வரை அதிகம் கிடைக்கிறது.

உருவ அமைப்பு[தொகு]

இது நீண்ட உடல், பெரிய தலை, பக்கவாட்டில் ஒடுங்கிய வயிற்றுப் பகுதியைக் கொண்டது. உடலின் மேற்பகுதி நீலம் கலந்த பச்சை நிறமாகவும், வயிற்றுப் பகுதி வெள்ளி நிறமாகவும் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ரெங்கராஜன், இரா, (2008), மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு, சாரதா பதிப்பகம், சென்னை, ப. 235-237.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாளை_மீன்&oldid=2759420" இருந்து மீள்விக்கப்பட்டது