சால் ஆறு (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சால் ஆறு (Sal River) என்பது இந்தியாவின் கோவாவின் சால்செட்டேயில் உள்ள ஒரு சிறிய நதியாகும். இந்த ஆறு வெர்னா அருகே துவங்கி, நூவம், மோன்கல், செராலிம், கோல்வா, மார்கோவா, பெனாலிம், நாவாலிம், வர்கா, ஓர்லிம், கர்மோனா, டிராமாபூர், சின்சினிம், அசோல்னா,கேவோலோசிம், மோபோர் கிராமங்கள் வழியே பாய்ந்து அரபிக்கடலில் பெடுல் என்ற இடத்தில் கலக்கின்றது .

2008 முதல் பெனாலிம்வாசிகள் இந்த ஆறு மாசுபடுவதாக அரசாங்கத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.[1] மேலும் கார்மோனாவில் வசிப்பவர்கள் இப்பகுதியில் அமையவிருந்த "மாபெரும் வீட்டுவசதி திட்டத்தை" தடுத்து நிறுத்த கிரீன்பீஸ் அமைப்பிடம் மனுவை அளித்தனர்.[2] இதன் பின்னர் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அரசு இந்த ஆற்றில் மாசுபாட்டினைக் கட்டுப்படுத்த 61.74 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.[3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சால்_ஆறு_(இந்தியா)&oldid=3243785" இருந்து மீள்விக்கப்பட்டது