உள்ளடக்கத்துக்குச் செல்

சால்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சால்வன் (Śālva) (சமசுகிருதம்:शाल्व), மன்னர் சால்வன் குறித்து மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களில் குறித்துள்ளது. காசி நாட்டு இளவரசிகளான அம்பா, அம்பிகா மற்றும் அம்பாலிகா ஆகியோரின்[1] சுயம்வரம் நடந்தபோது, அங்கிருந்த மன்னர்களையும், இளவரசர்களையும் தோற்கடித்து, இம்மூன்று இளவரசிகளை, பீஷ்மர் அவர்களது விருப்பத்துக்கு மாறாகக் கூட்டிச் சென்றார். அவர், இப்பெண்களை அஸ்தினாபுரத்து மன்னனும் தமது தம்பியுமான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்காக சத்யவதியிடம் ஒப்படைத்தார்.

இளவரசி அம்பா மன்னர் சால்வனிடம் தனது மனதைப் பறிகொடுத்திருந்ததாக பீஷ்மரிடம் தெரிவிக்கிறாள். அதை அறிந்த விசித்திரவீரியன் அவளை மணந்துகொள்ளாமல் அவளது தங்கைகள் இருவரையும் மட்டும் மணந்து கொண்டான். அம்பா தான் விரும்பிய சால்வனை நாடிச் சென்றாள். மன்னர் சால்வனோ, பீஷ்மர் தன்னைத் தோற்கடித்து அவளைக் கூட்டிச் சென்றதனால் அவளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான்.[2]

மன்னர் சால்வன் சௌபா என்ற பறக்கும் நகரத்திற்கும், சிசுபாலனுடனான நட்புக்கும் பெயர் பெற்றவர். சிசுபாலனின் மரணத்திற்குப் பழிவாங்க சால்வன் துவாரகை நகரத்தை முற்றுகையிட தனது மாயாஜால பறக்கும் சௌபா நகரத்தைப் பயன்படுத்தினார். இறுதியில், நீண்ட சண்டைக்குப் பிறகு கிருஷ்ணர் சால்வனைப் போரில் கொன்றார் [3].

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சால்வன்&oldid=4363547" இலிருந்து மீள்விக்கப்பட்டது