சால்மாலி கோல்கடே
சால்மாலி கோல்கடே | |
|---|---|
2013இல் ஒரு விழாவில் சால்மாலி கோல்கடே | |
| பிறப்பு | சால்மாலி கோல்கடே மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
| பணி | பின்னணிப் பாடகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2012–தற்போது வரை |
| வாழ்க்கைத் துணை | பர்ஹான் ஷேக் (தி. 2021) |
| இசை வாழ்க்கை | |
| இசை வடிவங்கள் | மேற்கத்திய இசை, இந்தியப் பாரம்பரிய இசை, பரப்பிசை, திரைப்பட இசை |
| இசைக்கருவி(கள்) | குரலிசை |
சால்மாலி கோல்கடே (Shalmali Kholgade) ஓர் இந்தியப் பின்னணி பாடகர் ஆவார். இவர் பெரும்பாலும் பாலிவுட் படங்களில் பாடுகிறார்.[1] இந்தி தவிர, மராத்தி, பெங்காலி, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற பிற இந்திய மொழிகளிலும் பாடியுள்ளார். பிலிம்பேர் விருது மற்றும் மராத்தி பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் தனது பாடல் பாணிக்காக பாராட்டப்பட்டார்.[2]
சால்மாலி கோல்கடே 22 நவம்பர் 2021 அன்று கட்டடப் பொறியாளரான பர்ஹான் ஷேக் என்பவரை மணந்தார்.[3][4]
இசைப் பணி
[தொகு]தொடக்க காலம் (2004-2011)
[தொகு]சால்மாலி தனது 8 வயதிலிருந்தே தனது தாயார் உமா கோல்கடேவிடம் இசையைக் கற்றுக் கொண்டார். ஒரு இந்திய பாரம்பரிய பாடகி மற்றும் நாடக ஆளுமை. ஷால்மாலி பாம்பலூ என்ற லாட்வியன் இசைக்குழுவுடன் தனிப்பாடகியாக நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அவர் பல ஆண்டுகளாக மும்பையில் தொழில் ரீதியாகப் பாடி வருகிறார், மேலும் அலி ஜாபரின் பாடல்களுக்கு பின்னணிப் பாடகியாகவும் பணியாற்றினார்.[5]

அமித் திரிவேதி இசையின் கீழ் இஷாக்ஸாதே திரைப்படத்தின் "பரேஷான்" என்ற பாடலுடன் 2012 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் பின்னணிப் பாடகராக சால்மாலி அறிமுகமானார். இந்த பாடல் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும், இந்தியா முழுவதும் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.[6][7] இப்பாடலுக்காக கோல்கடே சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.
நடிப்பு வாழ்க்கை
[தொகு]2009 ஆம் ஆண்டு இரஞ்சன் சிங்கின் கிழக்கிந்திய கொங்கணி -மராத்தித் திரைப்படமான து மசா ஜீவ் என்ற திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் சால்மாலி திரைப்படத்தில் அறிமுகமானார். இது மகாராட்டிர நாளன்று வெளியிடப்பட்டது. இந்த படம் திரையரங்கில் ஓரளவு வெற்றியைப் பெற்றது. மேலும், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், இவரது நடிப்பிற்காக சால்மாலி பாராட்டப்பட்டார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Broken flower". தி இந்து. 25 July 2011 இம் மூலத்தில் இருந்து 2 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130102120548/http://www.thehindu.com/life-and-style/metroplus/article2292982.ece.
- ↑ "Broken flower". தி இந்து. 25 July 2011 இம் மூலத்தில் இருந்து 2 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130102120548/http://www.thehindu.com/life-and-style/metroplus/article2292982.ece.
- ↑ "Exclusive! Singer Shalmali Kholgade ties the knot" (in en). The Times of India. 30 November 2021. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/exclusive-singer-shalmali-kholgade-ties-the-knot/articleshow/87984711.cms.
- ↑ "Singer Shalmali Kholgade gets married to boyfriend Farhan Shaikh in an intimate ceremony" (in en). India Today. 30 November 2021. https://www.indiatoday.in/movies/celebrities/story/singer-shalmali-kholgade-gets-married-to-boyfriend-farhan-shaikh-in-an-intimate-ceremony-1882533-2021-11-30.
- ↑ . 15 June 2012.
- ↑ "Love Goes Grunge". இந்தியன் எக்சுபிரசு. 20 April 2012 இம் மூலத்தில் இருந்து 12 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130212070227/http://www.indianexpress.com/news/love-goes-grunge/938989.
- ↑ "Ishaqzaade: Music Review". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 April 2012 இம் மூலத்தில் இருந்து 12 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120712093208/http://articles.timesofindia.indiatimes.com/2012-04-15/music-reviews/31344847_1_sunidhi-chauhan-song-ishaqzaade.
- ↑ "First West Indian movie releases on Maharashtra Day". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 May 2009 இம் மூலத்தில் இருந்து 7 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131207053643/http://articles.timesofindia.indiatimes.com/2009-05-04/mumbai/28207689_1_film-crew-bullock-carts-bhayander.
