சால்மன் மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

[1]சால்மன் மீன் என்பது சால்மனீட குடும்பத்தில் உள்ள மீன்களின் பொதுப் பெயராகும். இவற்றின் பெரும்பகுதியை கொண்டிருப்பது திருக்கை என்று சொல்லக்கூடிய ரே ஃபின்ட் (ray finned) மீன்களாகும். மற்ற மீன்கள் ட்ரௌட், சார், க்ரேலிங் மற்றும் வெண்மீனாகும். சால்மன் மீன்களின் தாயகம் வட அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலின் கழிமுகப் பகுதிகளாகும். சால்மைன் பலவகை மீன்கள் அவைகளின் தாயகம் இல்லாத வட அமெரிக்காவின் பெரும் ஏரி மற்றும் தென் அமெரிக்காவின் பாட்டகோனியா சுற்றுப்புற பகுதிகளில் இவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. உலகின் பெரும் பகுதிகளில் இவ்வகை மீன்களின் பண்ணைகள் உள்ளன இவைகளின் விசேஷம் என்னவென்றால் இவைகள் ஆற்றில் பிறந்து பின் கடலுக்கு வலசைப் போய் மறுபடியும் ஆற்றுக்கே தங்கள் இனத்தைப் பெருக்கிக் கொள்ள வரும். இவற்றின் பெரும்பாலான வகையான் மீன்கள் தங்கள் வாழ்நாளை நன்னீரிலே கழித்து விடும்.

நாட்டுப்புறவியல் படி அல்லது நாட்டுப்புற நம்பிக்கைப் படி இவ்வகை மீன்கள் பிறந்த அதே இடத்திற்கே இனப்பெருக்கம் செய்ய வரும் என்பதாகும். மீனைப் பின்தொடர்ந்து செய்யப் பட்ட ஆய்வின்படி அநேகமாக இந்த கருத்து சரியானதாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. சில வகை மீன்கள் மட்டும் வலசையிலிருந்து திரும்பி வரும்போது திசை மாறி செல்வது கண்டறியப் பட்டுள்ளது. இவைகள் குறிப்பிட்ட இடத்திற்கே திரும்ப வருவது அவற்றின் ஆழமான நினவுத் திறனை காண்பிக்கிறது[பகுப்பு: திருவள்ளுர் மாவட்ட ஆசிரியர்களின் பங்களிப்பு]

  1. file:///C:/Users/edwar/Desktop/Salmon%20-%20Wikipedia.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சால்மன்_மீன்&oldid=2342763" இருந்து மீள்விக்கப்பட்டது