சாலோ அப்டெச்லாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலோ அப்டெச்லாம்
பிறப்பு15 செப்டெம்பர் 1989 (அகவை 34)
பிரசெல்சு நகரம்
குடும்பம்Brahim Abdeslam

சாலோ அப்டெச்லாம் (Salah Abdeslam arabisch ‏صلاح عبد السلام‎, DMG Ṣalāḥ ʿAbd as-Salām, பிறப்பு: செப்டெம்பர் 15, 1989) பெல்ஜியத்தில் பிறந்த பிரான்சு நாட்டவர். இவர் ஒரு குற்றவாளியாகவும், இசுலாமியப் பயங்கரவாதியாகவும் சந்தேகிக்கப் படுபவர். நவம்பர் 13, பிரான்சு நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சம்பந்தப் பட்டவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டுக் கொண்டிருப்பவர்.

வாழ்க்கை[தொகு]

சாலோ அப்டெச்லாம் பெல்ஜியத்தில் Molenbeek-Saint-Jean/Sint-Jans-Molenbeek என்னும் இடத்தில் வளர்ந்தவர். இவரது பால்ய பருவத்து நண்பனாக இருந்த அப்துல்கமீத் அபாஓட் (Abdelhamid Abaaoud) நவம்பர் 13, பிரான்சு நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை திட்டமிட்டவர் என நம்பப் படுபவர். சாலோ அப்டெச்லாம் ஒரு மெக்கானிக் ஆக STIB/MIVB இல் 2009 - 2011 வேலை செய்தவர். இவரது வேலைக்கான சமூகமளிப்பின் ஒழுங்கின்மை காரணாமாக இவர் இந்த வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இவர் 2010, 2011 வருடங்களில் அப்துல்கமீத் அபாஓட் (Abdelhamid Abaaoud) உடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.[1]

குடும்பம்[தொகு]

சாலோ அப்டெச்லாம் இன் குடும்பம் 1960 இலிருந்து Molenbeek-Saint-Jean/Sint-Jans-Molenbeek என்னும் இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.[2] சாலோ அப்டெச்லாம் மூன்று ஆண்குழந்தைகளில் ஒருவர். இவரது சகோதரன் இப்ராகிம் நவம்பர் 13, பிரான்சு நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் வெடிமருந்தைக் கட்டிச்சென்று பாய்ந்து தற்கொலைத் தாக்குதலில் இறந்தவர். இவரது மற்றைய சகோதரன் இந்தத் தாக்குதல்கள் எதிலும் சம்பந்தப்படவில்லை என நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலோ_அப்டெச்லாம்&oldid=2734340" இலிருந்து மீள்விக்கப்பட்டது