உள்ளடக்கத்துக்குச் செல்

சாலுமரத திம்மக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமரைத்திரு
சாலுமரத திம்மக்கா
சாலுமரத திம்மக்கா, 2011-இல்
பிறப்பு(1911-06-30)30 சூன் 1911
குப்பி, தும்கூர், கர்நாடகம், இந்தியா [1]
இறப்பு14 நவம்பர் 2025(2025-11-14) (அகவை 114)
பணிசூழலியலாளர்
தாய்விஜயம்மா
வாழ்க்கைத்
துணை
பிக்காலு சிக்கையா
பிள்ளைகள்உமேசு(தத்து எடுக்கப்பட்டவர்)
விருதுகள்பத்மசிறீ (2019)

சாலுமரத திம்மக்கா (Thimmakka; கன்னடம் - ಸಾಲುಮರದ ತಿಮ್ಮಕ್ಕ)(30 சூன் 1911 – 14 நவம்பர் 2025) இந்தியாவின் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த பசுமை ஆர்வலர் மற்றும் செயல்பாட்டாளர் . கருநாடக மாநில நெடுஞ்சாலையில் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கு ஏறக்குறைய 284 ஆலமரங்களை இவர் நட்டுப் பராமரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.[2] இவரது இப்பணிக்காக இந்திய அரசு இவருக்கு தேசிய குடிமகன் விருது வழங்கியுள்ளது.[3]

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் லாசு ஏஞ்சல்சு மற்றும் கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு சுற்றுச்சூழல் கல்விக்கான திம்மக்காவின் மூலங்கள் என இவரது பெயரில் செயல்படுகிறது.[4]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

திம்மக்கா கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூரில் பிறந்தவர். பெங்களூர் கிராமப்புற மாவட்டத்தில் உள்ள ஹுலிகல்லு எனும் ஊரினரான சிக்கையா என்பவரை மணமுடித்து அந்த ஊருக்கு இடம் பெயர்ந்தார் இவர் இளம் வயதில் திருமணம் செய்தவர். திம்மக்கா. திருமணமாகிப் பல வருடங்களாகியும் மக்கட்பேறு இல்லாததால் திம்மக்கா பொட்டல் காடாக இருந்த கூதூர்ச் சாலைகளின் இரு மருங்கிலும் ஆலமரக் கன்றுகளை நடத்துவங்கியதாய்க் கூறப்படுகிறது.[5]

சாதனைகள்

[தொகு]

திம்மக்காவின் இப்பணிக்கு அவர் கணவரும் உதவ முதல் வருடத்தில் பத்து மரங்கள், இரண்டாமாண்டில் 15, மூன்றாமாண்டில் 20[3] எனத் தொடங்கிய அரும்பணி 284 மரங்கள் வரை தொடர்ந்தது. இவற்றின் மதிப்பு 1.5 மில்லியன் உரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.[2] இம் மரங்களைப் பராமரிக்கும் பொறுப்பைத் தற்போது கருநாடக அரசே ஏற்றுக் கொண்டு விட்டது. தற்போது திம்மக்கா சாலையின் இருமருங்கிலும் மரம்நட்டவர் எனும் பொருள்பட கன்னடத்தில் சால மருத எனும் அடைமொழியோடு சாலமருத திம்மக்கா என அறியப்படுகிறார்.

விருதுகள்

[தொகு]
இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. இராம்நாத் கோவிந்த் திம்மக்காவிற்கு 16.03.2019 ஆம் நாளில் தாமரைத்திரு (பத்மசிறீ) விருது வழங்கிய போது
  • பத்மசிறீ விருது - 2019
  • இந்திய அரசின் தேசியக் குடிமகன் விருது - 1995
  • ஹம்பி பல்கலைக்கழகம் வழங்கிய நடோஜா விருது - 2010
  • மகளிர் மற்றம் குழந்தைகள் நலத்துறை வழங்கிய பாராட்டுச் சான்றிதழ்
  • கருநாடக கல்பவல்லி விருது
  • கருநாடக அரசு வழங்கிய இந்திரா காந்தி விருது
  • வாழும் கலை அமைப்பு வழங்கிய விசாலாட்சி விருது

இறப்பு

[தொகு]

திம்மக்காவின் கணவர் 1991இல் இயற்கை எய்தினார். திம்மக்கா இந்தியாவின் பல மரம் நடும் அமைப்புகளால் அழைக்கப்பட்டார். தனது சிற்றூரில் ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது.[2] திம்மக்கா 14 நவம்பர் 2025 அன்று வயது முதிர்வு காரணமாக தனது 114ஆவது வயதில் பெங்களூரில் இறந்தார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About Thimmakka". thimmakkafoundation.org. Thimmakka Foundation. Archived from the original on 14 நவம்பர் 2017. Retrieved 14 November 2017.
  2. 2.0 2.1 2.2 A biography of Thimmakka is provided by B. R. Srikanth. "Thimmakka's Green Crusade Transforms Heat-And-Dust Hulikal". Online Edition of The Outlook, dated 1999-05-03. © Outlook Publishing (India) Private Limited. Retrieved 2007-05-23.
  3. 3.0 3.1 Planting of tree by Thimmakka and Chikkaiah is mentioned by Malini Shankat. "A mother's love". Online webpage of DownToEarth.org. ©2004 Society for Environmental Communications. Archived from the original on 2007-09-28. Retrieved 2007-05-23.
  4. "About Thimmakka". Online Webpage of Thimmakka.org. Thimmakka's Resources for Environmental Education. Archived from the original on 2006-12-31. Retrieved 2007-05-23.
  5. Thimmakka started to plant banyan trees to overcome the grief of being childless: Priyanjana Dutta. "Woman plants trees, village thrives". Online webpage of Ibnlive.com. Retrieved 2007-05-23.
  6. "Veteran environmentalist Saalumarada Thimmakka passes away at 114". The Financial Express. 14 November 2025. https://www.financialexpress.com/life/lifestyle-veteran-environmentalist-saalumarada-thimmakka-passes-away-at-114-4043711/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலுமரத_திம்மக்கா&oldid=4448126" இலிருந்து மீள்விக்கப்பட்டது