சாலி குன்னெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாலி குன்னெல்
Sally Gunnell in 1995 (cropped).jpg
1995இல் குன்னெல்
தனிநபர் தகவல்
முழு பெயர்சாலி ஜேன் ஜேனட் குன்னெல்
தேசியம்பிரித்தன்
பிறப்பு29 சூலை 1966 (1966-07-29) (அகவை 54)[1]
சிக்வெல், எசெக்ஸ், இங்கிலாந்து
வசிப்பிடம்ஸ்டெயினிங், மேற்கு சசெக்ஸ், இங்கிலாந்து
உயரம்1.66 m (5 ft 5 12 in)[2]
எடை57.5 kg (9 st 1 lb)
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி
கழகம்எசெக்ஸ் மகளிர் சங்கம்

சாலி ஜேன் ஜேனட் குன்னெல் (Sally Jane Janet Gunnell) (பிறப்பு: 1966 suuலை 29) இவர் பிரித்தனைச் சேர்ந்த முன்னாள் தடகள வீரர் ஆவார். இவர் 1992 ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வென்றார். ஒலிம்பிக், உலக, ஐரோப்பிய , பொதுநலவாய விளையாட்டுக்கள்போன்ற அனைத்திலும் பட்டங்களை வென்ற ஒரே பெண் பிரிட்டிசு தடகள வீரர் ஆவார். மேலும் 400 மீட்டர் தடை ஓட்ட வரலாற்றில் ஒலிம்பிக்கிலும், உலக பட்டங்களையும் வென்று உலக சாதனையை முறியடித்த முதல் பெண்ணாக இருக்கிறார். 1993 ஆம் ஆண்டில்இவரது முன்னாள் உலக சாதனை நேரம் 52.74 வினாடிகள் என்பது, இன்னும் உலகின் எல்லா நேரத்திலும் முதல் பத்து இடங்களில் உள்ளது. மேலும் இது தற்போதைய பிரித்தன் சாதனையாகும் .

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தின் சிக்வெல் என்ற இடத்தில், லெஸ், ரோஸ்மேரி குன்னெல் ஆகியோருக்குப் மகளாகப் பிறந்தார். மேலும் குடும்பத்தின் முந்நூறு ஏக்கர் [3] பண்ணையில் வளர்ந்தார். சிக்வெல்லில் உள்ள உள்ளூர் ஆரம்பப் பள்ளியிலும், வெஸ்ட் அட்ச் உயர்நிலைப் பள்ளிகளில் பயின்றார். [சான்று தேவை]

தடகள வாழ்க்கை[தொகு]

இவர் தடகளத்தில் எசெக்ஸ் மகளிர் சங்கத்துடன் [4] ஒரு திறமையான நீளம் தாண்டுதலிலும், ஹெப்டாத்லெட்டாகத் தொடங்கினார் . 1984 ஆம் ஆண்டில், ஹெப்டாத்லான் இரண்டிலும் ஒலிம்பிக் தேர்வை 5680 புள்ளிகளிலும், 100 மீட்டர் தடைகளிலும் இவர் தவறவிட்டார். அங்கு இவர் 13.30 வினாடிகளில் இங்கிலாந்து இளையோர் சாதனையை படைத்தார்.

1986 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் தொழில்முறை தடகள சங்கத்தின் பட்டங்களை வென்ற இவர், எடின்பர்க்கில் நடந்த 100 மீட்டர் தடைகளில் பொதுநலவாய விளையாட்டுகளில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் தனது சக விளையாட்டு வீரர் ஜொனாதன் பிக் என்பவரை மணந்தார். இவர்களுக்கு பின்லே, லூகா மற்றும் மார்லி என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இவர் பிரைட்டனுக்கு வெளியே மேற்கு சசெக்ஸில் உள்ள ஸ்டெய்னிங்கில் வசிக்கிறார். [5]

குறிப்புகள்[தொகு]

  1. "Sally Gunnell". sports-reference.com. Sports Reference LLC. மூல முகவரியிலிருந்து 17 April 2020 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 February 2014.
  2. "Sally Gunnell". teamgb.com. British Olympic Association. பார்த்த நாள் 9 February 2014.
  3. Running Tall, Sally Gunnell and Christopher Priest, Bloomsbury, 1994, pp. 25-6
  4. [1]
  5. David Morgan Super Sally's Spanish Success at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 11 திசம்பர் 2000) Sporting Life (PA Sport), 11 December 2000

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலி_குன்னெல்&oldid=3028602" இருந்து மீள்விக்கப்பட்டது